Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கும்பம் : குருப்பெயர்ச்சி பலன் .. ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (22.4.2023 முதல் 1.5.2024 வரை)
மீனம் : குருப்பெயர்ச்சி பலன் .. வசந்தகாலம் வந்தாச்சு
எழுத்தின் அளவு:
மீனம் : குருப்பெயர்ச்சி பலன் .. வசந்தகாலம் வந்தாச்சு

பதிவு செய்த நாள்

22 ஏப்
2023
02:01

பூரட்டாதி: நண்பர்களால் நன்மை

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் நான்காவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார். குருவின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு பெரியோர்கள் சொல்படி கேட்டு நடப்பது நன்மை தரும்.உழைப்பின் மூலம் உன்னத நிலையை அடையும் உங்களுக்கு குருபகவான் நட்சத்திர அதிபதி ஆவார். முதல் 3 பாதங்களுக்கு 3ம் இடத்திற்கும், கடைசி பாதத்திற்கு தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கும் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. எதிலும் முன்னேற்றம் காணப்படும். விருப்பத்திற்கு மாறாக நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும். பேச்சில் நிதானம் தேவை.

எல்லோரையும் பற்றிய விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் தன்மை உண்டாகும். உங்களை ஏமாற்ற நினைப்பவர்கள் தான் ஏமாறுவார்களேயன்றி, நீங்கள் எதிலும் ஏமாற மாட்டீர்கள். உங்கள் உள்ளத்தைப் போலவே உடைகளும் துாய்மையாக இருக்க வேண்டுமென விரும்புவீர்கள். சிலருக்கு புதிய வீட்டுக்கு மாறும் சூழ்நிலை உண்டாகும். பணவரவும் திருப்திகரமான நிலையில் இருக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் ஆழ்ந்த நுண்ணறிவை அனைவரும் பாராட்டுவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். வங்கியில் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக தொடரும். நண்பர்களால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.
 
தொழில், வியாபாரத்தில் மனநிறைவைப் பெறக்கூடிய வகையில் லாபம் கணிசமான அளவுக்கு உயரும். தொழில்ரீதியான பயணங்கள் வெற்றி பெறும். இருப்பினும் வியாபார தலத்தில் உங்களின் நேரடிப் பார்வை இருந்து வருவது அவசியம். கூடிமானவரை வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்வதில் கவனம் இருப்பது நல்லது.  இல்லையெனில் போட்டியாளர்களின் பக்கம் உங்கள் வாடிக்கையாளர்களின் பார்வை திரும்பி விட இடமுண்டு. தரமான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் கவனம் செலுத்துங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் தடைகள் குறுக்கிட்டாலும் உடனடியாக அதற்கான தீர்வும் கிடைக்கும்.  
பணியாளர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள், பதவி உயர்வை எளிதாகப் பெற்று மகிழ்வார்கள். அலுவலகம் தொடர்பான விஷயங்களில் முழுமையான திருப்தியைக் காண்பீர்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பணியிடத்தில் மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வருமானத்தின் காரணமாக வங்கிக் கணக்கில் சேமிப்பு பெருகும். எதிர்பாராத அலைச்சல், வெளியூர் பயணம் ஏற்படலாம்.

பெண்களுக்கு வேலையின் நிமித்தம் வெவ்வேறு ஊர்களில் இருந்த தம்பதியர் இப்போது சேர்ந்து வாழும் நிலைமை உருவாகும்.  திருமணம் தள்ளிப்போய் வந்த கன்னியருக்கு இப்போது திருமண யோகம் கிட்டும். சிலருக்கு மனம் விரும்பியவரையே மாலையிட்டு மணம் முடிக்கும் வாய்ப்பு அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து மகிழும் வாய்ப்புண்டு.  குடும்ப விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி அனைவரின் நன்மதிப்பையும் அன்பையும் பெறுவீர்கள். புத்திரவழியில் மகிழ்ச்சியடையும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லாமலேயே வாய்ப்புகள் தேடி வரும். சக கலைஞர்களின் போட்டியும் கடுமையாகவே இருக்கக் கூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதும் எச்சரிக்கையுடன் முழுமையாகப் படித்துப் பார்த்து கையெழுத்திடுவது நல்லது. உங்கள் புகழும் பொருளாதார அந்தஸ்தும் உயரக் கூடிய வாய்ப்புண்டு.  

அரசியல்வாதிகள் தன்னலமற்ற  உண்மையான தொண்டின் காரணமாக தலைமையின் பாராட்டுகளையும் நன்மதிப்பையும் பெறுவர்.  உங்கள் மன உறுதியும், விசுவாசமும் உங்களுக்குப் பொறுப்பான பதவிகளையும் பெற்றுத் தரும். இதன் காரணமாக பொருளாதார அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்வது சாத்தியமாகும்.  தலைமை மட்டுமல்லாமல் தொண்டர்களும் உங்களை மதித்து நடப்பார்கள்.
மாணவர்களுக்கு படிப்பில் மட்டுமின்றி விளையாட்டுப் போட்டி, நடனம், இசை போன்ற பிற துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்தி பரிசு, பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறுவர். அரசு வழங்கும் கல்விச் சலுகைகளைப் பெற்று மனம் மகிழ்வீர்கள்.  நீங்கள் பிற துறைகளில் ஈடுபாடு கொண்டவர்கள் என்றாலும் இப்போதைக்கு படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுத்தாக வேண்டும்.

பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.


உத்திரட்டாதி: நல்ல செய்தி தேடி வரும்

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் மூன்றாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார். குரு சனி ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு அதிகமான உழைப்பில் நாட்டம் இருக்கும். எந்த சோதனைகளையும் சாதனைகளாக மாற்றும் வித்தை தெரிந்த உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகப் பெரிய மாற்றமாக இருக்கப் போகிறது. தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறும் குருபகவானால் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
கம்பீரமான தோற்றத்தையும், பரந்த மனப்பான்மையும் பெற்று மகிழ்வீர்கள். எப்போதும் உற்சாகமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பீர்கள். சோர்ந்திருப்பது உங்களுக்குப் பிடிக்காது. செய்வன திருந்தச் செய் என்பதற்கேற்ப உங்கள் செயல்பாடுகளில் யாராவது குறை கண்டுபிடிப்பது கடினம். அந்த அளவுக்கு எதையுமே சிறப்பாகவும், செம்மையாகவும் செய்து முடித்து பலருடைய பாராட்டுகளைப் பெறுவீர்கள். மனம் வருந்தி மற்றவர்களை நீங்கள் பழித்து பேசினால் அது அப்படியே பலித்துவிடும் என்பதால் நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.
குடும்பத்தில் மதிப்பு மரியாதை உயரும். அந்தஸ்து மிக்க நல்ல மனிதர்கள், பெரியோர்களின் தொடர்பால் வாழ்க்கைத் தரம் மேம்படும். நெடுநாளாக உங்களை வாட்டி வதைத்த உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவீர்கள். வெளியூர், வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்தடையும். லாபகரமான முதலீடுகளைச் செய்து உபரி வருமானம் நிரந்தரமாக வர வழிவகுப்பீர்கள். மறைமுகக் கலைகளான ஆசனம், ஆழ்மனத் தியானம் போன்றவற்றை கற்றுக் தேர்ந்து அடுத்தவர்களுக்கும் கற்றுத் தருவீர்கள். சகோதர, சகோதரிகளின் குறைகளைப் பெரிது படுத்தமாட்டீர்கள், மேலும் முன்பு உங்களை ஏமாற்றியவர்களையும் இந்த காலகட்டத்தில் மன்னித்துவிடுவீர்கள்.
தொழில், வியாபாரிகளுக்கு கடன் விஷயத்தில் கவனமாக இருந்தால் அமைதிக்கும், மனநிம்மதிக்கும் குறைவிருக்காது. வியாபாரம் லாபகரமாக நடைபெறும். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து நிறைவேற்றவும், அவர்களின் நன்மதிப்பைப் பெறவும் முயற்சிப்பது அவசியம். அதே நேரத்தில்  அவர்களை ஈர்க்கும் வகையில் நவீன தொழில் நுட்பங்களை பின்பற்றுவது வியாபாரத்தை பெருக்க உதவும். தொழில்ரீதியான பயணங்களால் வருமானத்தை அதிகரிக்கச் செய்வீர்கள். தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தி அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கடன் பிரச்னைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.
 பணியாளர்களுக்கு  உயரதிகாரிகளின் ஆதரவு உறுதுணையாக இருக்கும். நிர்வாகத்தினரின் நல்லெண்ணத்தால் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பணிமாறுதல், இடமாறுதல் என உங்கள் பெரும்பாலான விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சக பணியாளர்களின் பொறாமைப் பார்வை உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கும். உங்கள் அன்றாடப் பணிகளில் சிறு குறையும் நேராமல் மிகுந்த அக்கறை செலுத்தி வருவது அவசியம். எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதார நிலையில் பற்றாக்குறை ஏற்பட இடமில்லை. சிக்கன நடவடிக்கை மூலம் சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
பெண்களுக்கு திருமணம் திடீரென முடிவாகி திருமண வாய்ப்பைச் சிலர் பெறக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்பாராத நன்மைகளைப் பெற்று மகிழ்வர். உடல்நிலையில் உபாதைகள் ஏற்படக்கூடிய நிலை உள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்த தம்பதி இப்போது சேர்ந்து வாழச் சந்தர்ப்பம் உருவாகும். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது.
கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். இடைத்தரகர்கள் தலையீடு இன்றி நேரடியாகவே முயற்சி செய்து வருவதன் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  பின்னணி இசைக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், நடனக் கலைஞர்கள் போன்றோர் கூடுதலான வாய்ப்புகளைப் பெற்று மகிழ்வர். தொழில் ரீதியான  வெளியூர்ப் பயணங்களை அடிக்கடி செல்ல நேரிடும். சக கலைஞர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு சோதனைகள் நேர இடமுண்டு என்றாலும் உறுதியான மனதுடன் இருந்து பொறுமை காப்பதன் மூலம் தலைமையின் அன்பையும், நன்மதிப்பையும் பெறுவீர்கள். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி தடுமாறுவது எதிர்காலத்தில் துன்பம் தரும் என்பதை உணர்வது அவசியம். உங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புகளை மட்டும் கவனத்தில் வைத்து செயல்படுவது நல்லது. மக்களின் ஆதரவைக் கண்டு மனம் மகிழ்வீர்கள். தொண்டர்களுக்காக கூடுதலாக செலவு செய்ய நேரிடும்.

மாணவர்கள் முயற்சித்தால் கல்வியில் நாளுக்கு நாள் முன்னேற்றம் காண முடியும். தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று உயர்வகுப்புகளுக்குச் செல்வீர்கள். சிலர் உயர்கல்வி கற்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வாய்ப்புண்டு. கலைத்துறை மாணவர்கள் உற்சாகமுடன் படிப்பர். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வர  எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள்.


ரேவதி: வசந்தகாலம் வந்தாச்சு

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இரண்டாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார். குரு புதன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் அடுத்தவர்களுக்கு பயனுடையதாக வாழ்வீர்கள். வித்தைக்கு முக்கியத்துவம் அளிக்கும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால் நல்வாழ்க்கை அமையும். குரு பகவான் உங்களது இரண்டாம் வீட்டிற்கு மாறுகிறார். அவரது பார்வை 6, 8,10 ஆகிய ஸ்தானங்களின் மீது விழுகிறது. குருமாற்றத்தின் மூலம் புத்தி சாதுர்யமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உடற்சோர்வு அகலும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது.
மிகவும் சாதுவான தோற்றத்தைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் பார்வைக்குத் தான் சாதுவே தவிர, மற்றபடி அறிவுக்கூர்மையும் அன்புள்ளமும் செயலாற்றலும் மிக்கவராக விளங்குவீர்கள். தேவையான நேரத்தில் அவற்றையெல்லாம் முழுமையாக வெளிப்படுத்தி பிறரை வியப்படையச் செய்வீர்கள். தேவையற்ற மனக்குழப்பங்களுக்கு ஆளாகித் தவிப்பதை தவிர்த்தால் உங்கள் நிர்வாகத்திறமை பளிச்சிட வாய்ப்புண்டு. மற்றவர்களிடம் கைகட்டி நின்று சேவகம் புரியும் அவசியம் இல்லாமல் பலரையும் அதிகாரம் செலுத்தி வேலை வாங்கும் அமைப்புண்டாகும்.   
உழைக்கும் அவசியம் அதிகம் என்றாலும் அதற்கு பலனாக வருமானம் அதிகரிக்கும். புதிய வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளும், நண்பர்களும் உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். உங்களைச் சார்ந்திருப்பவர்களையும் உயர்த்தி விடுவீர்கள். அதே நேரம் எவருக்கும் அவர்கள் கேட்காமல் அறிவுரைகள் கூற வேண்டாம். வாழ்க்கை சலிப்பு தட்டி விட்டது என்றிருந்தவர்களுக்கு அந்நிலை மாறும். மனதில் நம்பிக்கை துளிர்விடும். வாழ்வில் வசந்தம் வீசும். கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் யோகம் உண்டாகும். அதோடு சமூகத்தின் மேல்தட்டு மக்களின் நட்பு கிடைக்கும். கடினமான வேலைகளையும் சரியாக முடித்து உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர் மத்தியில் இருந்த பகை மாறும்.
தொழில், வியாபாரத்தில் உங்கள் எதிரிகள் உங்களுக்குப் போட்டியாகக் கடுமையாக இயங்கக் கூடும் என்பதால் உங்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நீங்கள் புதுமையான திட்டங்கள், சலுகைகளை அறிவித்து அவர்களை உங்கள் பக்கமே தக்க வைத்துக் கொள்வது அவசியம். இல்லாவிட்டால் குறைந்தபட்ச லாபத்துடன் தொழிலை நடத்துவது நல்லது. வேலையாட்களின் தவறான செயல்பாடு, நடவடிக்கைகளைக் கண்காணிப்பதன் மூலம் வீண் விரயங்களைத் தவிர்க்கலாம். வாடிக்கையாளர்களிடம் அதிக அளவில் கடன் நிலுவை இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள்.
பணியாளர்களுக்கு பணியிடத்தில் கவனக்குறைவாக இருப்பது கூடாது. சக பணியாளர்கள் உங்கள் மீது புகார் எழுப்பத் தயாராயிருப்பார்கள். மறைமுக வருமானங்களில் அதிக எச்சரிக்கை தேவை. நீங்கள் எதிர்பார்த்தபடி பணி, இடமாற்றம் கிடைக்கக் கூடுமாயினும் அதிருப்தியுடன் காணப்படுவீ்ர்கள். சிலருக்கு புதிய பணி வேலைப்பளு நிறைந்ததாக இருக்கக் கூடும். உயரதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறக்கூடிய வகையிலும் புகார் உண்டாக வாய்ப்பில்லாத நிலையிலும் பணிகளில் அக்கறையுடன் இருப்பது அவசியம். வருமானம் திருப்தி தரும். நீண்ட நாளாக இருந்த சுணக்கநிலை அடியோடு மாறும்.
பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். பொறுமையும், நிதானமும் தேவை. குடும்பத்தில் பிரச்னைகள் தோன்றி மறையும். கருவுற்ற பெண்களுக்கு உடல் நலனில் அக்கறை தேவை. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் குடும்ப விஷயங்களைப் பகிர வேண்டாம். பெற்றோர், சகோதர வகையில் உதவி கிடைக்கும். ஆன்மிக சிந்தனை மேலோங்கும்.
கலைத்துறையினர் விடாமுயற்சியுடன் செயல்படுவது அவசியம். ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். சக கலைஞர்களிடம் இனிமையாகப் பேசி பழகுவது நன்மையளிக்கும். இசை, நடனக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அதிக வருமானம் காண்பர். வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளும் போது விழிப்புடன் இருப்பது அவசியம். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.
அரசியல்வாதிகள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய காலகட்டம். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைத்தாலும் எதிரிகளின் கை ஓங்கியே காணப்படும். கட்சியில் உங்கள் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படலாம். வாயைக் கொடுத்து விவகாரத்தில் மாட்டிக் கொள்ள வேண்டாம். அதே நேரம் பயணங்களில் வெற்றியடைவதோடு இனிய அனுபவமும் ஏற்படும்.கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம் கவனம் தேவை.
மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. ண்பொழுது போக்குகளைக் குறைத்துக் கொண்டு கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும். வாகனப் பயணத்தின் போது கவனம் தேவை. பெற்றோரின் ஆதரவும், நண்பர்களின் உதவியும் கிடைக்கும். ஆன்மிகத்திலும், விளையாட்டிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். உடல்நலனை பாதுகாக்கும் வகையில் பயிற்சிகளைத் தவறாமல் செய்வீர்கள்.
பரிகாரம்: துர்கையம்மனை செவ்வாயன்று ராகு காலத்தில் அர்ச்சனை செய்து வழிபட்டால் பிரச்னை தீரும். எதிர்ப்புகள் மறையும்

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (22.4.2023 முதல் 1.5.2024 வரை) »
temple news
அசுவினி: குடும்பத்தில் சுபச்செலவுகுருபகவான் ஏப்.22,2023 இரவு 11:27 மணிக்கு உங்கள் நட்சத்திரத்தின் முதல் ... மேலும்
 
temple news
கார்த்திகை: போட்டியில் வெற்றிகுருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி ஆறாவது ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உறவினர்களால் நன்மைகுருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி நான்காவது ... மேலும்
 
temple news
புனர்பூசம்: குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி இரண்டாவது நக்ஷத்ரத்தின் முதல் ... மேலும்
 
temple news
மகம்: ஒன்பதில் குருபகவான்குரு பகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு 11:27 மணிக்கு உங்களின் பத்தொன்பதாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar