Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தனுசு : குருப்பெயர்ச்சி பலன் .. ... கும்பம் : குருப்பெயர்ச்சி பலன் .. குருபார்வையால் குறை தீரும் கும்பம் : குருப்பெயர்ச்சி பலன் .. ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (22.4.2023 முதல் 1.5.2024 வரை)
மகரம் : குருப்பெயர்ச்சி பலன் .. கவுரவத்துடன் வாழ்வீர்கள்
எழுத்தின் அளவு:
மகரம் : குருப்பெயர்ச்சி பலன் .. கவுரவத்துடன் வாழ்வீர்கள்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2023
01:56

உத்திராடம்: நேரம் நல்ல நேரம்

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் எட்டாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார். சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தந்தையாரின் குணாதிசயங்கள் அதிகம் நிறைந்திருக்கும். எந்த ஒரு காரியத்தையும் தலைமையாக முன்னின்று செய்ய ஆசைப்படும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியில் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஐந்தாமிடத்திற்கும், மீதமுள்ள மூன்று பாதத்தினருக்கு சுக ஸ்தானமாக நான்காமிடத்திற்கும் மாறுகிறார். நீங்கள் நிதானமாக முடிவெடுத்தாலும் எடுத்த முடிவில் மாறாமல் இருப்பீர்கள். எல்லா வகையிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதகமான பலனைக் காண்பார்கள். நீண்ட துாரப் பயணங்களால் லாபம் உண்டாகும். மனதில் தைரியம் பிறக்கும். உயர்பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்வீர்கள்.
எந்த சூழலிலும் நேர்மையுடன் இயங்குவீர்கள். உயர்தரமான எண்ணங்களையும், உயர்ந்த திட்டங்களையும் உடையவர் நீங்கள். குழந்தைகள் வெளிநாடு சென்று கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். செய்தொழில் சிறப்பாக இருக்கும். புதிய பொறுப்புகளை ஆர்வமுடன் ஏற்று நடத்துவீர்கள். கிரகங்கள் சாதகமான நிலையில் நல்ல காலமாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

இழுப்பறியாக இருந்த விஷயங்களில் தடைகள் நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களுக்காக சாதுர்யமாக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட கருத்துவேறுபாடு நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவர். பணவரவு அதிகரிக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டத்தால் நன்மையான பலன் கிடைக்கும். சமுதாயத்தொண்டு, பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் ஏற்பட்டு மறையும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் இருந்த நிர்வாகப் பிரச்னைகளில் நல்ல தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த வருமானத்தை விட கூடுதலாக கிடைக்கும். நிலுவைத்தொகை கைக்கு வந்து சேரும். வியாபாரம் தொடர்பாக கடந்த காலத்தில் திட்டமிட்ட அல்லது பாதியில் நின்ற பணிகளை மீண்டும் தொடங்குவீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் நன்மை காண்பீர்கள்.  மறைமுகப் போட்டிகளைத் திறம்பட சமாளிப்பீர்கள். புதிய முதலீடு, விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள சாதகமான காலகட்டமாக இருக்கும்.

பணியாளர்கள் திறம்பட செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பணவரவு திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகளை ஏற்று சம்பள உயர்வு காண்பீர்கள். மேலிடத்திலிருந்து முக்கியமான காரியம் உங்கள் வசம் ஒப்படைக்கப்படும். பணிரீதியாக அடிக்கடி தொலைதுாரப் பயணம் மேற்கொள்ள நேரிடும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
பெண்களுக்கு கணவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் அல்லது வேலை விஷயமாக பிரிந்து சென்றவர்கள் மீண்டும் குடும்பத்துடன் இணைவர். மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். மனம் போல ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள்.
கலைத்துறையினருக்கு அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். சக கலைஞர்களின் அன்பும், ஆதரவும் வளர்ச்சிக்கு துணைநிற்கும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் விடாமுயற்சியுடன் பணியாற்றுவீர்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை.
அரசியல்துறையினர் மக்கள் நலனுக்காக புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பர். பணவரவு திருப்தி தரும். செயல் திறமை கூடும். திடீர் பயணங்கள் செல்ல நேரிடலாம். இனிமையான பேச்சால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். தொண்டர்களின் அன்பும், ஆதரவும் பெருகும்.  

மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சிக்கான சூழல் அமையும். கலை, பண்பாடு, விளையாட்டு தொடர்பான பயிற்சிகளை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த பணஉதவிகள் கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் படிப்பில் உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: தினமும் வீட்டில் பஞ்சமுக தீபமேற்றி குலதெய்வத்தை வழிபட்டு வர மனஅமைதி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும்.

திருவோணம்: கவுரவத்துடன் வாழ்வீர்கள்
 
குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் ஏழாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார். சனி - சந்திரன் கூட்டணியில் பிறந்த நீங்கள் கவர்ச்சிகரமாக இருப்பீர்கள்.
மனதில் ஒன்று வார்த்தையில் ஒன்று என்று பேசத் தெரியாத உங்களுக்கு குருபகவான் நான்காமிடத்திற்கு மாற்றம் பெறுகிறார். அவரது பார்வை உங்களது 8,10,12 ஆகிய ஸ்தானங்களின் மீது விழுகிறது. கவுரவத்துடன் வாழ்வீர்கள். வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பணவரவு அதிகரிக்கும். நீண்ட நாளாக இருந்த பிரச்னைகள் சாதகமாக நடந்து முடியும்.
சிறந்த அணுகுமுறையும், சாதிக்கும் திறமையும், சிறந்த நிர்வாக திறனும் உடையவராகத் திகழ்வீர்கள். புதிதாக வீடு மனை வாங்கவும், இருப்பவற்றை சீர்திருத்தம் செய்ய வாய்ப்பு உண்டாகும். புத்திரர்கள் வகையில் செலவுகள் அதிகரிக்கும். வழக்கு பிரச்னைகளில் நல்ல முடிவு கிடைக்கும். கணவன், மனைவி இடையே உருவாகும் கருத்து வேறுபாடுகளை களைவதில் புத்திரர்கள் பாலமாகச் செயல்படுவர். எதிரியால் ஏற்பட்ட போட்டி, பொறாமை அகலும். உழைப்பால் வாழ்வில் உயர்வீர்கள்.
பணவரவு எதிர்பார்த்த நேரத்தை விட முன்னதாகவே வந்து சேரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் தீரும். நிலுவை பாக்கிகள் குறித்த காலத்தில் திரும்பக் கிடைக்கும். உடல்நிலை சீராக இருக்கும். மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவர்.
விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். மாமன், மைத்துனர் வழியில் நெருக்கம் கூடும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். சரியான நேரத்தில் உணவு, ஓய்வெடுத்துக் கொள்வீர்கள்.
தொழில், வியாபாரத்தில் தடைகள், குறுக்கீடுகள் ஏற்பட்டாலும் லாபத்திற்கு குறைவிருக்காது.  வியாபாரம் தொடர்பான பிரச்னைகளை கையாளும் போது நிதானம் தேவை. புதிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம். கூட்டாளிகளின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது.
பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர்.  சக ஊழியர்களிடம் ஏற்பட்ட கருத்துவேறுபாடு மறையும். உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பணிச்சுமை ஏற்பட்ட போதிலும் வருமானத்திற்கு குறைவிருக்காது. சக ஊழியர்கள் பணிச்சுமையை பகிர்ந்து கொள்வர்.
பெண்களுக்கு புத்திசாதுர்யம் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வர். குடும்பத் தேவைக்கான பணவரவு சீராக இருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும். குடும்பத்துடன் ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் ஆதரவும், அவர்களின் வளர்ச்சியும் கண்டு மனம் களிப்பீர்கள். ஆனால் அவர்களால் ஏற்படும் வீண்செலவை தவிர்க்க முடியாது. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக வைத்திருப்பது நல்லது.

கலைத்துறையினர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய முயற்சிகளில் ஈடுபடுவர். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள். சிலர் சொகுசு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் தொழில்ரீதியாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். கடன் பிரச்னைகள் ஓரளவு குறையும். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது.
 
அரசியல்வாதிகள் வளர்ச்சி கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய நட்பு வட்டம், தொடர்புகள் மகிழ்ச்சி தரும். ஆனால் உழைப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் தீர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். தொண்டர்கள் வகையில் எதிர்பாராத செலவு உண்டாகும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். திறமை வெளிப்படும். ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். சகமாணவர், நண்பர்களின் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். கலை, விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று புகழும் பாராட்டும் பெறுவீர்கள்.

பரிகாரம்: சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட தடைகள் அகலும். மனதில் நிம்மதி நிலைக்கும்.


அவிட்டம்: கை நிறைய வருமானம்

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் ஆறாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார். செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எடுத்த வேலையை கச்சிதமாக செய்பவர்கள்.
பக்குவமான அணுகுமுறையினால் காரிய வெற்றி பெறும் உங்களுக்கு குரு பகவானின் மாற்றம் பல வகையிலும் நன்மைகளைக் கொடுக்கும். முதலிரண்டு பாதங்களுக்கு நான்மிடத்திற்கும், ஏனைய இரண்டு பாதங்களுக்கு மூன்றாமிடத்திற்கு மாற்றம் நிகழ்கிறது. கைநிறைய வருமானம் வரும்.  செயலில் திறமை வெளிப்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த முக்கிய வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.
எதையும் வேகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவீர்கள். வீண் செலவுகள் உண்டாகலாம். சிலருக்கு பணிமாற்றம், இடமாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த காரியங்கள் முடிவதில் தாமதப்போக்கு காணப்படும். தொடர்பற்ற மனிதர்களால் வீண் சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நல்லது.  கனவுத்தொல்லையால் அவதிப்பட வாய்ப்புண்டு. வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு மறையும். ஆனால் உடல்நலனை எண்ணி  வருத்தப்பட வேண்டாம். சீராக இருக்கும். புதிய வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.  வம்பு, வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் மற்றவர்களுக்குப் பேரக்குழந்தை வாரிசும் உண்டாகும். எதையும் சமயமறிந்து பேசி வெற்றி பெறும் காலகட்டம் இது.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத விஷயத்தில் கருத்து வேற்றுமை உண்டாகலாம். நிதானமுடன் செயல்படுவது  நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். கடன் தொல்லை அகலும். பேச்சில் தற்பெருமை தலைதுாக்கும். பயணங்களின் போது பொருட்களை விழிப்புடன் பாதுகாக்கவும். சுபவிஷயங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். வீடு, வாகன வகையில் மராமத்துச் செலவு ஏற்படலாம்.

தொழில், வியாபார வளர்ச்சி மந்தமாக இருந்தாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது. வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. எதிரிகளால் அவ்வப்போது இடையூறுகள் தோன்றினாலும் சாதுர்யமாகச் சமாளித்து விடுவீர்கள். கால தாமதமானாலும் திட்டமிட்ட பணிகள் நிறைவடையும். சக வியாபாரிகளின் மத்தியில் செல்வாக்கு கூடும். தொழில்ரீதியான பயணங்கள் வெற்றி பெறும். விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள்.

பணியாளர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களுடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மேலிடத்துடன் ஏற்பட்ட மனகசப்புகள் நீங்கும். பணிச்சுமையைத் தவிர்க்க முடியாது.  சிலருக்கு விருப்பமில்லாத இடமாற்றங்களும் கிடைக்கும்.

பெண்கள் எதிர்த்துப் பேசாமல் மற்றவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம். விட்டுக் கொடுப்பதன் மூலம் கணவருடன் ஒற்றுமை சீராகும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். தாய்வீட்டுப் பெருமையை நிலைநாட்ட முயல்வீர்கள். புகுந்த வீட்டினரின் ஆதரவு ஓரளவு கிடைக்கும். ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தோழியரின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு மனதில் அவ்வப்போது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனப் பயணத்தின் போதும், வெளியூர் செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரத்தால் முன்கோபம் ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. என்றோ செய்த வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் எதிர்கால வளர்ச்சிக்காக அயராமல் பாடுபடுவர். வீண் செலவைக்  குறைப்பதன் மூலம் பணத்தட்டுப்பாட்டை தவிர்க்கலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நல்லது. மேலிடத்தின் ஆதரவால் சிலர் பொறுப்பான பதவிகளைப் பெறுவர். அதன் மூலம் மனமகிழும் சூழ்நிலை உருவாகும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள்.

மாணவர்களுக்கு வளர்ச்சியான காலகட்டமாக அமையும். பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனமும், சகமாணவர்கள், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை. பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களிடம் அனாவசியப் பேச்சு வேண்டாம். வீண் பொழுது போக்குளில் ஈடுபட வேண்டாம். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று  பாராட்டு மழையில் நனைவீர்கள்.

பரிகாரம்: நந்தீஸ்வரர் வழிபாட்டால் நன்மை அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (22.4.2023 முதல் 1.5.2024 வரை) »
temple news
அசுவினி: குடும்பத்தில் சுபச்செலவுகுருபகவான் ஏப்.22,2023 இரவு 11:27 மணிக்கு உங்கள் நட்சத்திரத்தின் முதல் ... மேலும்
 
temple news
கார்த்திகை: போட்டியில் வெற்றிகுருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி ஆறாவது ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உறவினர்களால் நன்மைகுருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி நான்காவது ... மேலும்
 
temple news
புனர்பூசம்: குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி இரண்டாவது நக்ஷத்ரத்தின் முதல் ... மேலும்
 
temple news
மகம்: ஒன்பதில் குருபகவான்குரு பகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு 11:27 மணிக்கு உங்களின் பத்தொன்பதாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar