| ஒருவரது வாழ்க்கை எப்போது முழுமை பெறும்? என்று கேட்டால் பலரும் படிப்பு, திருமணம் என்று ஆளாளுக்கு ஒரு பதில் சொல்வர். உண்மையில் இவை எதிலுமே வாழ்க்கை முழுமை அடைவதில்லை. திருமணமானவர்கள் தாய், தந்தை எனும் ஸ்தானத்தை பெறும்போது வாழ்க்கை முழுமை பெறுகிறது. என்னதான் பணம் இருந்தாலும் ஒரு மழலை விளையாடாத வீடு வெறுமையாகத்தானே இருக்கும். இதுபோன்ற சூழலில் உங்களது வீடு உள்ளதா? கவலை வேண்டாம். செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கருணை மரகத தண்டாயுதபாணி கோயிலுக்கு வாருங்கள். உங்கள் வீடு ஆனந்தம் விளையாடும் வீடாக மாறும்.
. | |
|