Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வைத்தியநாதர்
  அம்மன்/தாயார்: தையல்நாயகி
  தீர்த்தம்: பரளி தீர்த்தம், சூரிய தீர்த்தம், கங்கா தீர்த்தம்.
  ஊர்: பரளி
  மாவட்டம்: பீட்
  மாநிலம்: மகாராஷ்டிரா
 
பாடியவர்கள்:
     
  -

 
     
 திருவிழா:
     
  சிவராத்திரி, நவராத்திரி, ஹோலிப் பண்டிகை, தீபாவளி, கார்த்திகை முதலிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சிராவண மாதம் முழுவதும் கோயில் விழாக்கோலம் பூணுகிறது. தவிர, ஜனவரி பஞ்சமி மேளா, மார்ச் மகா சிவராத்திரி, பவுர்ணமி முக்கிய விழாக்கள். ஆதிசங்கரர் தன் துவாதச ஜோதிர்லிங்கங்களைப் போற்றும் சுலோகத்தில், இவரைப் போற்றியுள்ளார்.  
     
 தல சிறப்பு:
     
  சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 4 மணி முதல் மாலை 3.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், பரளி, பீட் மாவட்டம், மகாராஷ்டிரா மாநிலம்.  
   
போன்:
   
  +91-6432 232295 
    
 பொது தகவல்:
     
 

விநாயகர், கார்த்திகேயர், வீரபாகு, நந்தி, ஐயப்பன். திருமால், காளி ஆகிய பரிவாரமூர்த்திகள் உள்ளனர்.


மற்றொரு கோயில்: பீகாரில் பர்லி என்ற ஊரிலும் ஒரு சிவன் கோயில் உள்ளது. இதுவே வைத்தியநாதம் என்கிறார்கள் சிலர். ராவணன் சிவபெருமானை வேண்டி ஒரு லிங்கத்தை பெற்று இலங்கைக்கு கொண்டு செல்லும் வழியில் அதை தூக்கிச்செல்லமுடியாமல் ஒரு இடத்தில் வைத்துவிட்டான். அங்கேயே தங்கி சில நாட்கள்வழிபாடு செய்தான். அதுவும் நோய் தீர்க்கும் கோயில் என்பதால், வைத்தியநாதம் என்ற பெயர்பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. பாட்னாவில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ளது.

மிகப் பழமையான இக்கோயில் 1596-ல் புரன்மலை மகாராஜா என்பவரால் விரிவாக்கம் செய்து கட்டப்பட்டது. கோபுரத்தின் உயரம் 72 அடி. 21 பரிவார தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன. கங்காசரோவர் என்னும் திருக்குளம் உள்ளது.


மகேசனுக்கு உகந்த சிராவண (ஆவணி) மாதம் வட இந்தியாவில் மிகவும் புனிதம் வாய்ந்தது. சிராவண மாதத் துவக்கத்தை பம், பம், போலே, ஜெய் போலேநாத் கீ என சிவன்கோயில்கள், ஜோதிர்லிங்கத்தலங்களை நோக்கிச் செல்லும் பக்தர்களின் கோஷங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள தேவ்கர் தலம், வைத்யநாத் தாம், பைஜுநாத் தாம், பாபாதாம் என்றெல்லாம் அழைக்கப்படும் ஜோதிர்லிங்கத் தலம், சதி தேவியின் இதய பாகம் விழுந்த சக்தி பீடம். இதற்கு வடக்கே பீகாரில் பாகல்புர் மாவட்டத்தில் சுமார் 106 கி.மீ. தொலைவில் உள்ளது. சுல்தான்கஞ்ச். கங்கை இங்கே உத்தரவாஹினியாகச் செல்கிறாள். ஜாஹ்னு ரிஷி வாழ்ந்த இடமாதலால் ஜாஹ்னுக்ரஹா எனப்பட்டு, பின் மொஹலாயர் ஆட்சியில் சுல்தான் கஞ்ச் என பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இந்த இரு தலங்களுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. அன்னபூரணி, சரஸ்வதி, ஜகத்ஜனனி, லக்ஷ்மி நாராயணர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. நந்தி இங்கு வலப்புறம் இருப்பது விசேஷம். சக்தி பீடமாதலால் உமையன்னைக்கு காவலராக பைரவர் திகழ்கிறார். இவரிடம் விடைபெற்றே கோயிலை விட்டு வெளியேற வேண்டும்.

 
     
 
பிரார்த்தனை
    
  வைத்தியநாதம், வைத்தியநாதர் தரிசனம் செய்வதால் ஜோதிர்லிங்கம் தரிசனம் செய்த பலன் கிடைக்கும். மேலும் இங்கே மருந்தையே மலைபோல் குவித்து, அக்குன்றின் மீது அம்மையும், வைத்திய நாதரும் ஜோதிர்லிங்கமாக அமர்ந்து இருப்பதால், உயிர்களின் தீராத உடற்பிணியையும், தீராத சகலநோய்களையும் தீர்த்து வைப்பார்கள். ஓம் நமசிவாய என்ற மந்திரம் உடற்பிணியை மட்டுமல்ல பிறவிப்பிணியையும் போக்கி மோட்சத்தையும் கொடுக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். எனவே நமக்கு நோயற்ற நல்வாழ்வை இறைவன் அருளுவார். அன்னை பசியற்ற வாழ்வை வழங்குவார். முருகன் வெற்றியை நல்குவார். கணேசர் சகல நன்மையும் அருளுவார். 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அபிஷேகம், அர்ச்சனை செய்து வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

பரளி வைத்திய நாதம் என்ற தலம் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஐந்து ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. நம் நாட்டில் உள்ள பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. இத்தலத்தில் சிவபெருமான் மருந்தீசர் என மருந்து மலைக் குன்றின் மீது சிவலிங்கமாக அமர்ந்து உள்ளார். அம்மையும், அப்பனும் மருந்துகளுடன் அமர்ந்து உலக உயிர்களை ரட்சிக்கின்றனர். மக்களின் தீராத வினைகளைத் தீர்த்து வைக்கின்றனர். கோயில் குன்றின்மீது அழகாக கோட்டை போல் காணப்படுகிறது. கோயில் மிகப் பழமை வாய்ந்தது எனினும் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. வைத்திய நாதம் கோயில் ஒரு சிறு குன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. கோயிலின் வடக்குப்பக்கமும் கிழக்குப் பக்கத்திலும் படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. கோயில் கோபுரம் அறைக்கோள வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றிலும் கோட்டை யாகக் கட்டியுள்ளார்கள். கோபுரமும், விளக்குத்தூண்களும் அழகாக உள்ளன. விளக்குத்தூண் மரத்தில் இலைகள் உள்ளதுபோலக் கற்களால் கட்டியுள்ளனர். கோபுரத்தின் மீது தங்கக்கலசம் உள்ளது. கோயில் இரண்டு பிராகாரங்களாக அமைக்கப்பட்டுள்ளது. வைத்திய நாதர் அழகிய சுமாரான லிங்கவடிவில் காட்சி தருகிறார். கர்ப்பகிரகத்தின் உள்ளே நாம் சென்று சிவலிங்கத்தை தொட்டு அபிஷேகம் ஆராதனை முதலிய வழிபாடுகளைச் செய்யலாம். வைத்திய நாதர் தவிர வேறு பரிவாரத் தெய்வங்களும் உள்ளன. நமக்கு அவர்கள் மொழி புரியாததால் அதிகமாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அங்குள்ள மக்கள் மராத்திமட்டும் பேசுகின்றனர். இந்தியும் ஆங்கிலமும் கூடத்தெரியாது போல இருக்கிறது. தமிழில் நாம்பேசும்போது நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றனர். கர்ப்பகிரகத்தின் முன்னுள்ள விசாலமான அந்த மண்டபத்தில் பல தூண்கள் சிற்ப வேலைப்பாடுடன் காணப்படுகின்றன. பளிங்குத் தரை போடப்பட்டுள்ளது. தரையின் நடுவே ஆமை வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பூசாரிகள் நன்கு ஒத்துழைத்து சாமி தரிசனமும், அபிஷேகம் செய்யவும் உதவுகின்றனர். அவர்கள் மந்திரம் சொல்ல நாமும் அவற்றைக் கூறி சிவபெருமானை வழிபட வைக்கின்றனர். சுற்றுப்பிரகாரங்களில் வேறுபல தெய்வங்கள் உள்ளன. ஓரிடத்தில் அனுமன் சன்னதியும், விநாயகர் சன்னதியும் அடையாளம் கண்டுவழிபட முடிந்தது. வடக்குப்பக்கம் பல படிகளில் கீழே இறங்கினால் கடைவீதி காணப்படுகிறது. குன்றும் கோயிலும் அமைதியான இயற்கை எழில்மிக்க சூழலில் அமைந்துள்ளது.வைத்திய நாதத்தில் முதலில் கோயில் அமைந்துள்ள குன்றினையும், கோயிலையும், கிழக்கேயிருந்தும் வடக்கேயிருந்தும் தரிசிக்க வேண்டும். கோயில் கோட்டைபோல் அமைந்துள்ளதாலும், இரண்டு பிராகாரங்கள் உள்ளதாலும் அவற்றில் பல மூர்த்திகள் உள்ளதையும் தரிசிக்க வேண்டும். கோயிலைச் சுற்றி குன்றின் மீது சில சிறுசிறு கோயில்களும் உள்ளன. கோயிலில் சிற்பங்களும் சித்திரங்களும் உள்ளன. அவற்றைக் காண வேண்டும். மூலவர் வைத்திய நாதரையும், அம்பாளையும் தரிசிக்க வேண்டும். இத்தலத்தில் விளக்குக்கம்பம் மரத்தில் கிளைகிளையாக அடுக்காகக் காணப்படுவது போல் அமைத்துள்ளார்கள். நமது தென்னாட்டுப்பக்கம் கோயில் முன்பு சிறு சதுரமான மேடை, அதன் நடுவே ஒரு கல்தூண் வைத்து அதன் உச்சியில் சட்டி வைப்பதற்கு ஒரு நிலை அமைத்து அதில் ஒரு புதிய சிறுபானையில் எண்ணெய் திரிவிட்டு விளக்கு ஏற்றுவார்கள். அதுபோன்று இங்கே இல்லை. பலமூர்த்திகள் சுற்றிலும் உள்ளன. ஓரிடத்தில் அனுமன், விநாயகர் உள்ளனர். கோயில்முன் மண்டபத்தில் தரையில் ஆமை வடிவம், நந்தி ஆகியோரையும் தரிசிக்கலாம்.இங்கு ஒரு வித்தியாசமான வழிபாட்டுமுறை உள்ளது. அதாவது, ஆடி மாதத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வழிபடவருவார்கள். அவர்கள் கங்கை நீர் சேகரிக்கப்பட்ட கலசங்களை காவடிபோல் சுமந்துகொண்டு, சுல்தான் கஞ்ச் என்னுமிடத்திலிருந்து கால்நடையாகவே கோயிலுக்கு வருவார்கள். பயண தூரம் 105 கிலோமீட்டர்! அப்படி வரும்போது அந்தக் காவடியை எதற்காகவும் கீழே வைக்கக்கூடாது. வேண்டுமானால் அடுத்தவரிடம் கொடுத்துவிட்டு நம் அவசிய காரியங்களைச் செய்யலாம். உறங்குவதென்றாலும், அந்தக் காவடியை மற்றவர் வைத்துக் கொண்டு நிற்கவேண்டும். வேறு வழியின்றி தரையில் வைக்க நேர்ந்தால் மறுபடியும் புறப்பட்ட இடத்துக்கே சென்று, அங்கிருந்து தரையில் விழுந்து வணங்கிபடி வந்து பின்னர் காவடியைச் சுமந்து செல்லவேண்டும். ஒருசிலர் ஓட்டமும் நடையுமாக எங்கேயும் நிற்காமல் 105 கிலோமீட்டர் தூரத்தையும் கடப்பார்கள். இந்த வழியில் இரண்டு இடங்களில் அனுமதிச்சீட்டு வாங்கவேண்டும். அங்கும் இவர்கள் நிற்கமாட்டார்கள். ஓடியவண்ணம்தான் எல்லாமே. சூரியன் மறைவதற்குள் கோயிலை அடைந்தாகவேண்டும். இவ்வாறு கொண்டுசெல்லப்படும் கங்கை நீரைக் கொண்டு வைத்தியநாத சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.


நந்தியம்பெருமானைத் தரிசித்து மண்டபத்தைக் கடந்து சென்றால் சசிதரனின் கருவறை. அதன் மத்தியில், பூமியில் புதைந்த பாஸால்ட் எனப்படும் பசுமை நிற தீக்கல்லால் ஆன ஆவுடையார் நடுவில், நான்கு அடி உயரமும், அரை அடி விட்டமும் கொண்ட போலேநாத் ஜோதிர்லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். மேல் விதானத்தின் நடுவே எட்டு இதழ்தாமரை மலர் வடிவில் சந்திரகாந்த மணி எனும் ரத்தினக்கல் பதிக்கப்பட்டுள்ளது. அதிகாலை நான்கு மணிக்கு நடைபெறும் விஸ்வரூப தரிசனத்தின்போது, சந்திரகூப நீரால் முதல் அபிஷேகம் செய்து ஷோடச உபசாரங்களை தலைமைப் பூஜாரி நடத்திய பின்பே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர். இங்கு நாமே அபிஷேகம் செய்து, வில்வம், மலர்களைச் சாத்தலாம். பிற்பகல் 3.30 க்கு நடை சாத்தப்பட்டு மாலை 6 மணிக்கு சிருங்கார் பூஜைக்குத் திறக்கப்படும். அப்போது தேவ்கர் மத்திய சிறைச் சாலையிலிருந்து பிரத்யேகமாக வரும் மலர் ஜடாமுடி, போலேநாத் சிரசை அலங்கரிப்பது கண்கொள்ளாக் காட்சி இதற்கு ஒரு பின்னணியும் உண்டு.

தேவ்கர் சிறையில், ஆங்கிலேய ஜெயிலராக இருந்தவரின் மகன், கடற்பிரயாணத்தின்போது காணாமல், போனார். அப்போது சிலர், ப õபா வைத்யநாத்ஜியை வேண்டிக்கொள்ளுமாறு சொல்ல, அவரும் அவ்வாறே வழிபட்டு வந்தார். ஒருநாள், அவர் மகனிடமிருந்து உயிருடன் உள்ளதாக தகவல் வர, மகிழ்ந்த ஜெயிலர், நன்றிக்கடனாக சிறை நந்தவன மலர்களால் ஜடாமுடி போன்ற மலர்க்கிரீடம் தயாரித்து, தினமும் அளிக்க ஏற்பாடு செய்து மகிழ்ந்தார். இந்த வழக்கம் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. மகேசன் சன்னிதிக்கு நேர் எதிரில் மேற்கு நோக்கியபடி அமைந்துள்ளது சதி தேவியின் இதயம் விழுந்த சக்தி பீடமான பார்வதியின் கற்கோயில். உயர்ந்து நிற்கும் கோபுரம். மூன்று நுழை வாயில்கள். வலம் வர பிராகாரம், பித்தளை கருவறைக் கதவுகள் என சிறப்பாகத் திகழ்கிறது. கருவறையில் பார்வதி, துர்கை, வலது, இடது புறமாக அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். இங்கே, பார்வதி திரிபுரசுந்தரி, திரிபுரபைரவி என ஒரு ரூபத்திலும், துர்கை, தாந்த்ரீகர்கள் உபாசிக்கும் சின்ன மஸ்தா தேவி வடிவிலும் வணங்கப்படுகின்றனர். மா சந்தியா எனப்படும் காமாக்யா தேவிக்குத் தனிக்கோயில் உள்ளது. கருவறைக்கு வெளியே நீல் சக்ரம் என்ற யந்திரமும் பாறை ஒன்றின் மேல் பொறிக்கப்பட்டுள்ளது.
 
     
  தல வரலாறு:
     
 

முன்னொரு யுகத்தில் வீரமகேந்திரபுரி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு சூரபத்மன் என்ற அசுரன் அரசாண்டு வந்தான். அவன் சிவ பெருமானை நோக்கி கடும் தவம் செய்து 1008 அண்டங்களையும் 108 சதுர்யுகமாக அரசாள வரம் பெற்றான். அதோடு சாகாவரமும் பெற்றான். அவனது தம்பிகள் தாராசுரன், சிங்கமுகாசுரன் ஆகியோரும் சிவபெருமானிடம் பல வரங்களும் பெற்றிருந்தனர். சூரபத்மன் தேவலோகத்தையும் வென்று இந்திரன் மகன் ஜெயந்தன் முதலான தேவர்களையும் சிறைப்பிடித்து வந்தான். தேவர்களையும், அவர்களுக்கு உதவும் முனிவர் மற்றும் ரிஷிகளையும், மனிதர்கள் பலரையும் சிறையிலடைத்து கொடுமைகள் பல செய்து வந்தான். சிறைப்படாத தேவர்களும் முனிவர்களும் பிரம்மாவையும், திருமாலையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சூரபத்மனை வதம் செய்து எல்லா அண்டங்களையும் காக்க வேண்டும் என வேண்டினர். சிவபெருமான் சூரபத்மனை அழிக்கத் திருவுளம் கொண்டு முருகப்பெருமானை தம் நெற்றிக் கண்ணிலிருந்து உண்டாக்கினார். முருகன் வளர்ந்து பெரியவராகி தேவர்களைக் காக்க தேவசேனாதிபதியாகச் சென்று சூரபத்மனுடன் போர் செய்து தேவர்களை மீட்டு வந்தார். இந்தக் கடுமையான தேவாசுரப் போரின் போது இருபக்கங்களிலும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் படுகாயம் அடைந்தனர். போரில் காயம்பட்டுத் துன்பம் அடைந்தவர்களைக் காப்பாற்ற சிவபெருமான் வைத்தியராக, பார்வதி தேவியுடன் வந்து வீரர்களுக்கு வைத்தியம் செய்தார். தேவையான மருந்துகளை ஒரு மலை போல் குவித்து, அதன் மீது அமர்ந்து அம்மையும் அப்பனும் அடிபட்ட வீரர்களுக்கு உதவி செய்தனர்.போரின்முடிவில் தேவர்களும், முனிவர்களும் விடுதலை பெற்றமைக்கு முருகப் பெருமானைப் பெரிதும் போற்றி வணங்கினர். இவற்றிற்கெல்லாம் மூலகாரணம் சிவபெருமானே என முருகப்பெருமானும், தேவர்களும் முனிவர்களும், மனிதர்களும் மருந்து மலை மேல் அமர்ந்திருந்த அம்மை அப்பனை தரிசித்து நன்றி கூறி வழிபட்டனர். யாவருக்கும் வேண்டிய வரம் தந்தார் சிவபெருமான். அப்போது தேவர்களும், முனிவர்களும், பக்தர்களும் அம்மை அப்பரை இங்கேயே இப்படியே என்றும் எழுந்தருளி உலகை ரட்சிக்க வேண்டும் என வரம் கேட்டார்கள். அதன்படியே அம்மையும் அப்பனும் ஜோதிவடிவமாக ஒரு சிவலிங்கத்தில் ஐக்கியமாகினர். இன்றும் அந்த மலைமீது இருந்து அம்மையப்பர் அருள்பாலித்து வருகின்றனர். இந்த சிவலிங்கமே இங்கே ஜோதிர்லிங்கமாக விளங்குகிறது. சிவபெருமான் வைத்தியராக வந்து வீரர்களுக்கு வைத்தியம் செய்தமையினால் வைத்திய நாதர் என்ற பெயர் பெற்றார். தலத்திற்கு வைத்திய நாதம் என்ற பெயரும் உண்டாகியது.பரளி என்ற கிராமம் அருகே இருந்தமையினால் பரளி வைத்திய நாதம் எனப் பெயர் விளங்குகிறது. சுருக்கமாக பரளி என்றும் கூறுவர். பரளி வைத்திய நாதம் தவிர பீகாரில் ஒரு வைத்திய நாதம் கூறப்படுகிறது. பீகார் தலை நகரம் பாட்னாவிலிருந்து ஜஸித் என்னும் ஊர்வழியாக கிழக்கே சென்றால் 20. கி.மீ.ல் இத்தலம் உள்ளதாகக் கூறுகின்றனர். இராவணன் கைலாயம் சென்று சிவபெருமானை வேண்டி ஒரு லிங்கம் பெற்று இலங்கை போகும் போது இங்கேயே அந்த லிங்கத்தை வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதாம். அங்கே இராவணன் வழிபாடு செய்தான். கோயில் ஒரு மேட்டின் மீதுள்ளது. இங்கே கவுரி, திரிபுரசுந்தரி, காயத்திரி, விநாயகர், முருகன், காளி, பைரவர், ராமர் முதலியவர்கள் உள்ளனர். இக்கோயிலைச் சுற்றிலும் 25 கோயில்கள் உள்ளன. இங்கே சிவகங்கை என்னும் தீர்த்தக்குளம் இராவணனால் உண்டாக்கப்பட்டதும், சந்திரகூபம் என்ற தீர்த்தமும் உள்ளன. மேலும் கங்கை யமுனைத் தீர்த்தமும் கொண்டுவந்து வைத்திய நாதேசுவரருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. மாசி மாதம் பிரம்மோற்சவம் இங்கே நடைபெறுகிறது. பங்குனி உத்திரமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கோயில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள், கதவுகள் காணப்படுகின்றன.


தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது உண்டான ஆலகால விஷத்தை சிவபெருமான் உட்கொள்ள, அதனால் உண்டான வெப்பத்தைத் தணிக்க தேவர்கள் கங்கை நீரை அவர் மீது வார்த்தனர். அது சிராவண மாதம் என்பதால், அதன் நினைவில் இந்த மேளா நடைபெறுகிறது. இதை ஒட்டி விரதமிருக்கும் பக்தர்கள், புலால் உண்பதைத் தவிர்த்து, தலை முதல் கால் வரை ஆரஞ்சு நிற உடை அணிந்து, சுல்தான்கஞ்ச் உத்திரவாகினி கங்கையில் புனித நீராடி, கங்கைக் காவடி எடுத்து, போல் பம் என உச்சரித்தவாறு பாபா தாம் நோக்கி நடைப்பயணம் மேற்கொள்கின்றனர். இன்று கங்கை நீராலும், ராவணனால் ஏற்படுத்தப்பட்ட சந்திரகூப் எனும் கிணற்று நீராலும் மட்டுமே ஜோதிர்லிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பம் (ப+அ+ம) என்ற சொல் மும்மூர்த்திகளைக் குறிக்கும்.

சிராவண மேளா மேற்கொள்ள, தங்களைப் படைத்த பிரம்மாவுக்கும், யாத்திரை போகும் வழியில் பாதுகாக்கும் ஹரிக்கும், துன்பத்தைக் மாய்க்கும் ஹரனுக்கும் நன்றி கூறுவதாக இச்சொல் அமைகிறது. சிவபெருமானை லங்கைக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்ற நோக்கத்தில், சாம கானம் இசைத்து கடுந்தவம் புரிந்த ராவணன், தன் ஒவ்வொரு தலையாகக் கொய்து அர்ப்பணித்தான். ராவணனின் தவத்தை மெச்சி, அவனுக்கு ஆத்ம லிங்கத்தை அருளி, பூமியில் வேறெங்கும் வைக்காமல் ஊருக்குக் கொண்டு செல்லுமாறு கூறியருளினார் பெருமான். ராவணனின் கை ஓங்குவதைக் கண்ட தேவர்கள் ஒரு சதி செய்தனர். அதன்படி, வருணன் மூலம் ராவணனுக்கு வயிற்று உபாதை வரச் செய்தனர். இதனால் ஹர்லாஜூரி என்ற இடத்துக்கு ராவணன் வந்தபோது, விஷ்ணு ஓர் அந்தணச் சிறுவன் வடிவில் அங்கே வந்தார். அவனிடம், இந்த லிங்கத்தை கீழே வைக்காமல் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, உடல் சுத்தி செய்ய எண்ணி நீர் நிலையைத் தேட, எதுவும் தென்படாததால், அம்பு எய்து ஒரு குளத்தை உருவாக்கினான். (தற்போது இது சிவ்கங்கா ஏரியாகத் திகழ்கிறது.)

உடலைத் தூய்மைப்படுத்தி, ராவணன் சற்று தாமதமாகத் திரும்ப, அங்கே சிறுவனைக் காணவில்லை. அப்போது ஒரு காட்டுவாசி இடையன், அச்சிறுவன் தென்திசை நோக்கிச் சென்றதாகக் கூறினான். அதன்படி ராவணனும் செல்ல, ஒரு மயான பூமிக்கு அருகில் ஜோதிர்லிங்கம் தரையில் அமிழ்ந்திலிருந்து கண்டு துணுக்குற்றான். அதை பலவந்தமாகப் பெயர்தெடுக்க முயன்றும் அவனால் இயலவில்லை. இதில், லிங்கத்தின் மேல்பாகம் சற்றே சிதிலமடைந்தது. வேறு வழியின்றி அருகில் ஒரு குளத்தைத் தோற்றுவித்து (தற்போதுள்ள சந்திர கூபம் கிணறு) அபிஷேகம் செய்து வழிபட்டான். பின்பு இலங்கை திரும்பியவன், தினமும் இங்கே வந்து, லிங்கத்தை நீராட்டித் தொழுதான். பின்னாளில் அந்த ஜோதிர்லிங்கத்தை பைஜு என்ற வேடன் கண்டெடுத்து, பூஜித்து நற்கதி அடைந்தான். இதனால், சந்தால் பர்கானா ஆதிவாசி மக்கள் ஈசனை பைஜுநாத் என்று அழைத்தனர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar