Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) குடும்பத்தில் மகிழ்ச்சி மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) ஏற்றம் தருவார் ஏழாமிடத்து குரு மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (28.10.2019 முதல் 13.11.2020 வரை)
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குரு பார்வையால் பணமழை கொட்டும்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2019
12:28

இப்போது குரு 8ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. 8ம் இடத்தில் இருக்கும் குருபகவான் பொதுவாக மன வேதனை, நிலையற்ற தன்மையைக் கொடுப்பார். வீண் விரோதத்தை உருவாக்குவார். ஆனால் இதனை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7ம் இடத்து பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது. அந்த வகையில் இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வை யால் முறியடிப்பீர்கள். அவர் 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை அதிசாரம் பெற்று மகர ராசியில் இருக்கிறார். இந்த காலகட்டத்தில் அவரால் நன்மை அதிகரிக்கும்.  

இனி முக்கிய கிரகங்களை அடிப்படையாக கொண்டு  பொதுவான பலனைக் காணலாம். குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். இருப்பினும் குருவின் 7ம் இடத்து பார்வையால் முன்னேற்றம் ஏற்படும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவி இடையே இருந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.  பெண்களால் பொன், பொருள் சேரும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. சகோதரிகள் மிகவும் உதவிகரமாக இருப்பர். குருவின் 7, 9ம் இடத்துப் பார்வையால் பொருளாதார வளம் கூடும். தொழிலில் பணமழை கொட்டும். 2020 ஆகஸ்ட்31 க்கு பிறகு எந்த ஒரு முக்கிய செயலையும் தீர சிந்தித்த பிறகே தொடங்குவது நல்லது. புதிய வீடு, மனை வாங்க விடாமுயற்சி மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

தொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சல், மனச்சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். சிலர் தற்போதுள்ள இடத்தை வேறு இடத்துக்கு மாற்றும் நிலை ஏற்படலாம். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். எது எப்படியானாலும் குருவின் பார்வையால் பண வரவு அதிகரிக்கும். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை  உங்கள் நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். உங்களின் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும்.  வாடிக்கையாளர்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு சிலர் வியாபாரத்தை ஊர் விட்டு ஊர் மாற்றும் நிலை ஏற்படும். புதிய முதலீட்டில் கவனம் தேவை.

பணியாளர்களுக்கு வேலையில் பளு அதிகரிக்கும்.  சிலருக்கு வெளியூர் மாற்றம் ஏற்படலாம். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அரசு வேலையில் இருப்பவர்கள் கவனமுடன் இருக்கவும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். சக ஊழியர்கள்  ஆதரவுடன் செயல்படுவர். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியாளர்கள் சற்று கவனமாக இருக்கவும்.    

கலைஞர்கள் விடா முயற்சி எடுத்தே புதிய ஒப்பந்தம் பெற வேண்டியதிருக்கும். பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை கலைஞர்களுக்கு முன்னேற்றமான காலகட்டம். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையின் படி நடப்பது நல்லது. சில மாணவர்கள் தகாதவர்களோடு சேர வாய்ப்புண்டு. 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். போட்டிகளில் பங்கேற்று வெற்றி கொள்வர். ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.

விவசாயிகளுக்கு கால்நடை மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. வழக்கு விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம். 2020 மார்ச் 28 தேதி முதல் 2020 ஜூலை 7 வரை பயறு வகைகள், மஞ்சள், நெல், கேழ்வரகு, கரும்பு பனைத்தொழில். பழவகைகள் போன்றவற்றில் மகசூல் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பிலும் ஆதாயம் கிடைக்கும். 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு விவசாயிகள் கடுமையாக உழைக்க நேரிடும்.

பெண்கள் அக்கம் பக்கத்தினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம். பெற்றோரை பிரியும் நிலை வரலாம். வேலைக்கு செல்லும் பெண்கள்  பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். 2020 மார்ச் 2 முதல் 2020 ஜூலை 7 வரை மகிழ்ச்சியுடன் இருப்பர்.   தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். விருந்து விழா என  செல்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.  சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.  உடல் நலனில் கவனம் தேவை.

பரிகாரம்:
*  வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
*  பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு தீபம்
*  தேய்பிறை அஷ்டமியில் பைரவர் தரிசனம்

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (28.10.2019 முதல் 13.11.2020 வரை) »
temple
குருபகவான் 9ம் இடமான தனுசு ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம். இதுவரை அவரால் பட்ட இன்னல்களில் ... மேலும்
 
temple
குருபகவான் 6ம் இடத்தில் இருந்து 7ம் இடத்திற்கு செல்வது மிக உயர்வான நிலை. குருவின் 5ம் இடத்துப் ... மேலும்
 
temple
குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் இருந்து 6ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை ... மேலும்
 
temple
குருபகவான் உங்கள் ராசிக்கு 5 ம் இடத்துக்கு செல்கிறார். இது மிக சிறப்பான நிலை. குருவால் கோடி நன்மைகள் ... மேலும்
 
temple
குருபகவான் 4ம் இடமான தனுசு ராசிக்கு செல்கிறார். இது அவ்வளவு சிறப்பானது எனச் சொல்ல முடியாது. ஆனால் கடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.