Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) சுக்கிரனால் யோகம் கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பிள்ளைகளால் பெருமை விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை)
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) எதிர்பாராத வருமானம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2019
16:09

இந்த மாதம் சுக்கிரன், கேது, சனியால் நற்பலன் ஏற்படும். குரு அக்.28 வரை நன்மை தருவார். இதனால் மனதில் பக்தி எண்ணம் பெருகும். பொருளாதார வளம் கூடும். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். பொன், பொருள் சேரும். விருந்து, விழா என செல்வீர்கள். கணவன், மனைவி இடையே அன்பு இருக்கும். அக்.28க்கு பிறகு சமூகத்தில் மரியாதை உயரும். புதனால் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். பொறுப்புகளை  குடும்பத்திலுள்ள மூத்த பெண்களிடம் ஒப்படைக்கலாம். சான்றோர்

ஆசி,  மகான்  தரிசனம், திருத்தல யாத்திரை அமைய வாய்ப்பு உண்டு. பெண்கள் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வர். அக்கம் பக்கத்தினரின் சதி எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை உருவாகும். சுய தொழில் புரியும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.

சிறப்பான பலன்கள்

தொழிலதிபர்களுக்கு சனிபகவான் பொருளாதார வளம், தொழில் விருத்தி அளிக்கிறார். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் மூலம் அதிக லாபம் கிடைக்கும்.
தங்கம், வெள்ளி, வைர  வியாபாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் அதிக வருமானம் பெறுவர். அக்.28க்கு பிறகு அரசின் சலுகை கிடைக்கும்.
அரசு பணியாளர்கள் அக்.28க்கு பிறகு முன்னேற்றம்  காண்பர். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு அக்.28க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும்.
ஐ.டி.துறையினர் சக ஊழியர்களின் ஆதரவுடன் செயல்படுவர்.
வக்கீல்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும். பகைவரை வெல்லும் ஆற்றல் உண்டாகும்.
ஆசிரியர்களுக்கு மாத முற்பகுதியில் முன்னேற்றமான பலன் கிடைக்கும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் கேதுவின் துணையோடு உயர்ந்த நிலை அடைவர். புதிய பதவியும் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த புதிய பதவி கிடைக்க வாய்ப்புண்டு.  
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.
விவசாயிகள் மஞ்சள், எள், கொள்ளு, கேழ்வரகு, சோளம் போன்றவற்றில் கூடுதல் மகசூல் கிடைக்கப் பெறுவர். சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.  
கல்லூரி மாணவர்களுக்கு அக்.28க்கு பிறகு கல்வி உதவித்தொகை, போட்டியில் வெற்றி காண்பர்.  

சுமாரான பலன்கள்

தொழிலதிபர்கள் அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும்.
அரசு பணியாளர்கள் மாத முற்பகுதியில் வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருக்கவும்.
தனியார் துறையில் பணிபுரிபவர்கள் புதனால் திடீர் இடமாற்றத்திற்கு ஆளாவர். வீட்டை விட்டு தற்காலிகமாக விலகலாம்.   
மருத்துவர்களின்  செல்வாக்கிற்கு பாதிப்பு ஏற்படலாம். வீண்கவலை வரலாம்.
ஆசிரியர்கள் அக்.28க்கு பிறகு பணிச்சுமைக்கு ஆளாவர். பொறுமை தேவை.
எதிர்பார்த்த பதவி உயர்வுக்கு  தாமதமாகும்.  
தரகு, கமிஷன் தொழிலில் முயற்சியில் தடைகள் வரலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். அக்.28க்கு பிறகு சிலர் மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது.  
பால்பண்ணை தொழிலில் கால்நடைவளர்ப்பில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காது.
பள்ளி மாணவர்கள் புதன் சாதகமற்று இருப்பதால் அசட்டையாக இருக்க வேண்டாம். ஆசிரியர்கள் வழிகாட்டுதலை பின்பற்றுவது  நல்லது.

* நல்ல நாள்: அக்.21,22, 23,24,25,29 நவ.1,2,8,9,10,11,12
* கவன நாள்: அக்.18, நவ.13,14,15 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 5,6
* நிறம்: வெள்ளை, சிவப்பு

* பரிகாரம்
●  வெள்ளியன்று துர்கைக்கு எலுமிச்சை தீபம்
●  தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு
●  சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் தரிசனம்

 
மேலும் வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை) »
temple
பொறுப்புடன் கடமையாற்றும் மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன் ஜுன் 4ல் வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு ... மேலும்
 
temple
இந்த மாதம் உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் ஜுன் 4 வரை நன்மை கொடுப்பார். அதன் பிறகு வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் சூரியன், குரு, சனி, கேது ஆகியோரால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். மேலும் புதன் மே24 வரை நன்மை ... மேலும்
 
temple
இந்த மாதம் 11ம் இடத்தில் இருக்கும் ராகு, 10ம் இடத்தில் இணைந்திருக்கும் புதன், சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.