Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) குழந்தை பாக்கியம் கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) சுக்கிரனால் யோகம் கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) குடும்பத்தில் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2019
16:03

சுக்கிரன், சூரியன், ராகு ஆகியோர் சாதகமாக நின்று நன்மைகளை தருவார்கள். மேலும் அக்.28க்கு பிறகு குருவும், நவ.12க்கு பிறகு செவ்வாயும் நன்மை தருவர். முயற்சியில் அனுகூலம் ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சூரியனால் செல்வாக்கு அதிகரிக்கும். பொருள் விரயம் மறைந்து பொருளாதாரம் பெருகும். 

சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  ஆடம்பர வசதிகள் பெருகும். வெளியூர் பயணத்தால் இனிய அனுபவம் கிடைக்கும். மாமன் மைத்துனர் வகையில் உதவி உண்டு. கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அக்.28க்கு பிறகு சமூகத்தில் மதிப்பு உயரும். பெண்களால் மேன்மை கிடைக்கும். உறவினர்களிடம் நெருக்கம் ஏற்படும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். நவ.12க்கு பிறகு பக்தி எண்ணம் மேம்படும். புதிய வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும்.

பெண்களுக்கு பொன், பொருள் சேரும். மனதில் மகிழ்ச்சி நிலவும். சகோதரர்கள் உறுதுணையாக  இருப்பர். ஆடை, அணிகலன் வாங்கலாம். அக்.28க்கு பிறகு நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் கைகூடும். நவ.12க்கு பிறகு  குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வர். வியாபாரம் செய்யும் பெண்கள் கூடுதல் ஆதாயம் காண்பர். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.

சிறப்பான பலன்கள்

தொழிலதிபர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். அரசிடம் எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேறும். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். கைவிட்டு போன பொருள் கிடைக்கும்.
வியாபாரிகள் எதிர்பாராத வகையில் லாபம் பெறுவர். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவர்.
தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகள் அதிக வருமானம் காண்பர். நவ.12க்கு பிறகு கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும்.
அரசு பணியாளர்கள் நவ.12க்கு பிறகு பணிச்சுமையில் இருந்து விடுபடுவர்.
ஐ.டி., துறையினர்  சீரான வளர்ச்சி காண்பர். வழக்கமான சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.
மருத்துவர்களுக்கு நவ.12க்கு பிறகு பாராட்டு கிடைக்கும். எடுத்த செயல்களில் வெற்றி காண்பீர்கள்
வக்கீல்கள் தொழிலைச் சிறப்பாகச் செய்வர். நவ.2க்கு பிறகு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் நவ.12க்கு பிறகு  அவப்பெயர்,
செல்வாக்கு பாதிப்பு, மனக்கவலை முதலியன மறையும். பதவி உயர்வும் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் அக்.28க்கு பிறகு புதிய பதவி கிடைக்கும்.
கலைஞர்கள் ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு பெறுவர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
விவசாயிகள் நெல், சோளம், மஞ்சள், எள், கரும்பு போன்ற பயிர்களில் சிறப்பான மகசூல் பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு.  சொத்து வாங்கும் எண்ணம் நவ.12க்கு பிறகு கைகூடும்.
பள்ளி மாணவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வர். கல்லூரி மாணவர்கள் அக்.28க்கு பிறகு முன்னேற்றம் காண்பர். போட்டிகளில் வெற்றி காண்பர்.

சுமாரான பலன்கள்

தொழிலதிபர்கள், வியாபாரிகள் வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
அரசு பணியாளர்கள் மனதில்  இனம் புரியாத வேதனை குடி கொண்டிருக்கும்.
தனியார் துறையில் பணிபுரிபவர்கள் விடாமுயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும்.  
ஆசிரியர்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். பணிச்சுமையால் சிரமப்பட நேரிடும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களுக்காக அதிக பணம் செலவழிக்க நேரிடும்.
விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் கடுமையாக உழைத்தும் பலன் கிடைக்காது.
மாணவர்களுக்கு நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.   

* நல்ல நாள்: அக்.18,19,20, 24,25,28,29, நவ.3,4,5, 6,7,13, 14,15,16
* கவன நாள்: நவ.8,9,10 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,9
* நிறம்: நீலம், சிவப்பு

* பரிகாரம்
●  நவக்கிரகங்களில்  கேதுவுக்கு அர்ச்சனை
●  செவ்வாயன்று துர்கைக்கு நெய் விளக்கு
●  சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை

 
மேலும் வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை) »
temple
பொறுப்புடன் கடமையாற்றும் மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன் ஜுன் 4ல் வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு ... மேலும்
 
temple
இந்த மாதம் உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் ஜுன் 4 வரை நன்மை கொடுப்பார். அதன் பிறகு வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் சூரியன், குரு, சனி, கேது ஆகியோரால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். மேலும் புதன் மே24 வரை நன்மை ... மேலும்
 
temple
இந்த மாதம் 11ம் இடத்தில் இருக்கும் ராகு, 10ம் இடத்தில் இணைந்திருக்கும் புதன், சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.