Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) பெண்களால் நன்மை மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) குருவால் செல்வாக்கு மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை)
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பண புழக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2019
15:53

சூரியன், புதன் மாதம் முழுவதும் நற்பலன் அளிப்பர். குரு அக்.28 வரையிலும், செவ்வாய் நவ.12க்கு பிறகும் நற்பலன் அளிப்பர்.  எனவே கடந்த மாதத்தை விட  பணப்புழக்கம் அதிகரிக்கும். முயற்சி வெற்றி பெறும். ஆடம்பர வசதி பெருகும். முயற்சியில் இருந்த தடைகள் மறையும். நண்பரால் எதிர்பார்ப்பு நிறைவேறும். மூத்த சகோதரர் வகையில் ஆதாயம் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். உறவினர் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்புண்டு. சிலரது வீட்டில் பொருள் களவு போக வாய்ப்புண்டு. நவ.12க்கு பிறகு செவ்வாயால் பொருளாதார வளம் பெருகும். அண்டை வீட்டார் தொல்லை மறையும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும். ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளின் உடல் நலம் சிறப்படையும்.

சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.

சிறப்பான பலன்கள்

தொழிலதிபர்களுக்கு மறைமுகப்போட்டி விலகும். பொருளாதார வளம் பெருகும்.
வியாபாரிகள் போட்டியாளர்களை வெற்றி கொள்வர். கடந்த கால பிற்போக்கான நிலை மாறும்.
அரசு பணியாளர்கள் விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும்.  
தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு சகஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். பணியிடத்தில் செல்வாக்கு கூடும்.   
ஐ.டி. துறையினர் சிறப்பான முன்னேற்றம் காண்பர்.  வாகனம் வாங்கலாம்.
மருத்துவர்களுக்கு பணியில் இருந்த பிரச்னை மறையும்.
வக்கீல்களுக்கு நவ.12 க்கு பிறகு எதிர்பாராத வகையில் பணம் வர வாய்ப்புண்டு.
ஆசிரியர்கள் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். சக ஆசிரியர்களின் மத்தியில் அதிகாரம் கொடிக்கட்டி பறக்கும்.
போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு நவ.12க்கு பிறகு
புதிய பதவி தேடி வரும்.
அரசியல்வாதிகளுக்கு  நவ.12க்கு பிறகு  புகழ், பாராட்டு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடை, மனச் சோர்வு அக்.29க்கு பிறகு மறையும்.
விவசாயிகளுக்கு நெல்,சோளம், மஞ்சள், பாசிப்பயறு தக்காளி, பழ வகைகள் மூலம் வருமானம் உயரும்.
நவ.12க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். கால்நடை மூலம் போதிய வருமானம் கிடைக்கும்.
மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.  கல்லூரி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதோடு விரும்பிய பாடம் கிடைக்கவும் வாய்ப்புண்டு.

சுமாரான பலன்கள்

தொழிலதிபர்கள் ஜாமின் கையெழுத்தை தவிர்க்கவும்.  புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
வியாபாரிகள் அக்.28க்கு பிறகு புதிய வியாபார முயற்சியில் ஈடுபட வேண்டாம்.
தரகு, கமிஷன் தொழிலில் அக்.28க்கு பிறகு பண இழப்போ அல்லது நஷ்டமோ ஏற்பட வாய்ப்புண்டு கவனம்.
ஐ.டி. துறையினருக்கு அக்.28க்கு பிறகு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். பெற்றோரை விட்டு விலகியிருக்கும் நிலை வரலாம்.
வக்கீல்களுக்கு  வீண் விரயம், அலைச்சல் ஏற்படும். ஆசிரியர்களுக்கு அக். 28க்கு பிறகு பொருளாதார சரிவு, வீண் விரோதம் உருவாகலாம்.
போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும்.
அரசியல்வாதிகளுக்கு செவ்வாயால் சிரமம், நஷ்டம் வரலாம். மனதில் இனம் புரியாத கவலையிருக்கும்.
கலைஞர்களுக்கு  அக்.29க்கு பிறகு பெண்கள் வகையில் தொல்லை வரலாம். ஒதுங்கி இருக்கவும்.

* நல்ல நாள்: அக்டோபர் 18,21,22,23,28,29,30,31 நவ.6,7,8,9,10,13,14,15
கவன நாள்: நவம்பர்1,2 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்கள்: 6,7
* நிறம்: சிவப்பு, பச்சை  

* பரிகாரம்:
●  சனியன்று சனீஸ்வரருக்கு எள்தீபம்
●  வெள்ளியன்று நாகதேவதை வழிபாடு
●  வியாழனன்று குருபகவான் தரிசனம்

 
மேலும் வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை) »
temple
பொறுப்புடன் கடமையாற்றும் மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன் ஜுன் 4ல் வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு ... மேலும்
 
temple
இந்த மாதம் உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் ஜுன் 4 வரை நன்மை கொடுப்பார். அதன் பிறகு வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் சூரியன், குரு, சனி, கேது ஆகியோரால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். மேலும் புதன் மே24 வரை நன்மை ... மேலும்
 
temple
இந்த மாதம் 11ம் இடத்தில் இருக்கும் ராகு, 10ம் இடத்தில் இணைந்திருக்கும் புதன், சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.