Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

விருச்சிகம்: புரட்டாசி ராசி பலன் (விசாகம் 4, அனுஷம், கேட்டை) போட்டியில் வெற்றி விருச்சிகம்: புரட்டாசி ராசி பலன் ... மகரம்: புரட்டாசி ராசி பலன் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) குடும்ப மகிழ்ச்சி மகரம்: புரட்டாசி ராசி பலன் ...
முதல் பக்கம் » ஆடி ராசிபலன் (16.7.2020 முதல் 16.8.2020 வரை)
தனுசு: புரட்டாசி ராசி பலன் (மூலம், பூராடம், உத்திராடம் 1) எதிர்பாராத வருமானம்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2019
15:22

சூரியன் சாதகமான இடமான கன்னி ராசிக்கு வருவதால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதன் செப்.25ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் தருவார். சுக்கிரன் அக்.5க்கு பிறகு நன்மை தருவார். இதனால் உங்களுக்கு இருந்த வீண் பொல்லாப்பு மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை உயரும். சனிபகவானின் 3-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளதால் எண்ணிய செயல் இனிதே நிறைவேறும். பொருளாதார வளம் மேம்படும். பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படையுங்கள்.

குடும்பத்தில் மங்களகரமான சூழ்நிலை உருவாகும். சுபநிகழ்ச்சி குறித்த பேச்சு நடக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு பெண்கள் உறுதுணையாக செயல்படுவர்.  குறிப்பாக அவர்களால் அக்.5,6ல் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். விருந்து, விழா என அடிக்கடி செல்வீர்கள். செப்.30, அக்.1,2ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். அக்.12,13,14ல் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.

பணியாளர்களுக்கு புதனால் நன்மை அதிகரிக்கும். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும். பணப்புழக்கம் இருக்கும். தேவை அனைத்தும் பூர்த்தியாகும். மேலதிகாரிகளின் ஆதரவால் கோரிக்கை நிறைவேறும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்பும் கிடைக்கும். சக பெண் ஊழியர்களின் ஆதரவைக் கண்டு மகிழ்வீர்கள். செப்.28,29ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். கடந்த காலத்தில் இருந்த தடைகள் மறையும். இதனால் கூடுதல் வளர்ச்சி காணலாம். உங்கள் முன்னேற்றத்துக்கு பெண்கள் உறுதுணையாக இருப்பர்.  பெண்களை பங்குதாரராக கொண்ட வணிகம் சிறப்படையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தைக் கொடுக்கும். குறிப்பாக செப்.20,21,அக்.17ல் எதிர்பாராத லாபம் கிடைக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். அக்.3,4,7,8,9ல் சந்திரனால் தடைகள் வரலாம். ராகுவால் அலைச்சல் ஏற்படலாம். வெளியூரில் தங்க நேரிடலாம். சிலர் தீயோர் சேர்க்கையால் பண இழப்பைச் சந்திக்கலாம். எனவே எச்சரிக்கையுடன் பழகவும்.

கலைஞர்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, எதிரி தொல்லை, வீண் மனக்கவலை முதலியன அக்.5க்கு பிறகு மறையும். அதன் பிறகு சிறப்பான முன்னேற்றம் காணலாம். ரசிகர்களின் மத்தியில் புகழுடன் விளங்குவர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சுமாரான பலன் காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்பு இல்லை. செப்.18,19, அக்.15,16ல் சிலருக்கு மன உளைச்சல் ஏற்படலாம்.  

மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் வளர்ச்சி காத்திருக்கிறது. ஆசிரியர்களின் ஆலோசனை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். பேச்சு, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். சிலர் சுற்றுலா சென்று மகிழ்வர்.     

விவசாயிகளுக்கு விளைச்சல் சுமாராக இருந்தாலும் உழைப்புக்கு ஏற்ப வருமானம் கிடைக்கும். பாசிப்பயறு, நெல், பழவகைகள் மூலம் அதிக வருமானம் வரும். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த வருமானம் பெறலாம். புதிதாக சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க நேரிடும்.        

பெண்களுக்கு சகோதரர் வகையில் உதவி கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும்.  அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். சுபவிஷயம் குறித்த பேச்சில் நல்ல முடிவு ஏற்படும். உங்களால் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.  குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். அக்.5க்கு பிறகு சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். அக்.10,11ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.

பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரப் பெறலாம். செப்.22,23ல் விருந்து, விழா என செல்வீர்கள். செவ்வாயால் செப்.26க்கு பிறகு அண்டை வீட்டாரின் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருள் களவு போக வாய்ப்புண்டு. பயணத்தின் போது கவனம் தேவை. செவ்வாயால் செப். 26க்கு பிறகு உஷ்ணம், தோல் தொடர்பான நோய் ஏற்படலாம்.

* நல்ல நாள்: செப்.20,21,22, 23,28,29,30, அக்.1,2,5,6, 10,11,17
* கவன நாள்: செப்.24,25 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2,3
* நிறம்: நீலம், பச்சை

பரிகாரம்:
●  வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு
●  ராகு காலத்தில் பைரவருக்கு நெய் விளக்கு
●  பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரர் தரிசனம்

 
மேலும் ஆடி ராசிபலன் (16.7.2020 முதல் 16.8.2020 வரை) »
temple
பொறுப்புடன் பணியாற்றும் மேஷ ராசி அன்பர்களே! சுக்கிரன், குரு, ராகு தொடர்ந்து முன்னேற்றத்தை ... மேலும்
 
temple
தகுதியுடன் செயலாற்றி வரும் ரிஷப ராசி அன்பர்களே! பொருளாதார வளம் பெருகும் மாதம் இது அமையும். சூரியன், ... மேலும்
 
temple
பொறுமையில் சிறந்த மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் குருவால் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். ... மேலும்
 
temple
கடமையில் ஆர்வம் மிக்க கடக ராசி அன்பர்களே!  சனி, கேதுவால் தொடர்ந்து நற்பலனை எதிர்பார்க்கலாம். மற்ற ... மேலும்
 
temple
சிந்தித்து செயலாற்றி வரும் சிம்ம ராசி அன்பர்களே! குரு, ராகு மாதம் முழுவதும் நற்பலனைக் கொடுப்பர். புதன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.