Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) போட்டியில் வெற்றி துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பிள்ளைகளால் பெருமை தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...
முதல் பக்கம் » தை ராசிபலன் (15.1.2020 முதல் 12.2.2020 வரை)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பதவி உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2019
13:27

இந்த மாதம் சூரியன் சாதகமான இடத்துக்கு வருகிறார். புதன் ஆக.21ல் இடம் மாறி நன்மை தருவார். சுக்கிரன் செப்.10க்கு பிறகு நற்பலன் கொடுப்பார். மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் நன்மை குறையாது. சூரியனால் முயற்சி அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். பொருளாதார வளம் சிறக்கும். மனதில் சந்தோஷம் நிலைக்கும். குருபகவான் உங்கள் ராசியில் இருப்பதால் மந்த நிலை ஏற்படலாம்.   

குடும்பத்தினரின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். வாழ்வில் குதூகலம் உண்டாகும். ஆடம்பர வசதிகள் பெருகும். குருவின் பார்வையால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். ஆக.21 க்கு பிறகு பெண்கள் அனுகூலமாக இருப்பர். அவர்களால் பொன், பொருள் சேரும். குறிப்பாக ஆக.22,23,24, செப்.5,6 ல் அவர்களால் சுகம் ஏற்படும். பண உதவி கிடைக்கும். செப்.1,2ல் உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். செப்.12,13,14ல் உறவினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.

தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஆக.21 வரை பணியிடத்தில் சிலரது பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். அதன் பிறகு சூரியனோடு புதன் சேர இருப்பதால் யோகபலன் உண்டாகும். இதனால் பதவி உயர்வு கிடைக்கும். நிர்வாகத்தினர் மத்தியில் நற்பெயர் ஏற்படும். யாருடைய உதவியும் நாடாமல் காரியத்தை சாதிக்கலாம். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சக பெண் ஊழியர்கள்  ஆதரவுடன் செயல்படுவர். ஆக.30,31ல் சிறப்பான பலன்களை காணலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.

வியாபாரத்தில் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து ஆக.21க்கு பிறகு விடுபடுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் மூலம் அதிக லாபம் கிடைக்கும்.  திட்டமிட்டபடி தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். எதிரிகளின் இடையூறுகள் இருக்கும் இடம் தெரியாமல் மறையும்.  கேதுவால் அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அத்துடன் சிலருக்கு அரசு வகையில் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் வரவு, செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். ஆக.21,22, செப்.17ல் திடீர் பணவரவு இருக்கும். செப்.3,4,7,8,9ல் சந்திரனால் தடைகள் வரலாம். பண விரயம் ஏற்படலாம். சனி பகவானால் சிலர் பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.

கலைஞர்களுக்கு எதிரி தொல்லைகள், அவப்பெயர், போட்டிகள் முதலியன செப்.10க்கு பிறகு மறையும். அதன்பின் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழும், பாராட்டும் கிடைக்க பெறுவர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்களுக்கு  புதனால் ஏற்பட்ட பிரச்னை அனைத்தும் ஆக.21க்கு பிறகு மறையும். அதன்பின் சிறப்பான வளர்ச்சி உண்டாகும். ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். தேர்வில் அதிக  மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். போட்டி, பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர்.  

விவசாயிகள்  சீரான மகசூல் காண்பர். பழவகைகள், கீரை வகைகளில் நல்ல வருமானம் கிடைக்கும். ஆக.21 க்கு பிறகு கால்நடைகள் வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.  

பெண்களுக்கு குடும்பத்தாரின் மத்தியில் மதிப்பு உயரும். செப்.10,11ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருட்கள் வரப் பெறலாம். ஆக.23,24,25ல் விருந்து, விழா என செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.  சகோதர வழியில் பண உதவி கிடைக்கும். ஆக.28க்கு பிறகு  சுய தொழில் புரியும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.  வங்கியில் விண்ணப்பித்த கடன் எளிதாக கிடைக்கும். தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.  

* நல்ல நாள்: ஆக.21,22,23, 24,25,30,31, செப்.1,2,5, 6,10,11,17
* கவன நாள்: ஆக.26,27 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2,3.
* நிறம்: நீலம், பச்சை

பரிகாரம்:
●  சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
●  சனிக்கிழமையில் ராமருக்கு துளசிமாலை
●  திங்கட்கிழமை சிவனுக்கு வில்வ அர்ச்சனை

 
மேலும் தை ராசிபலன் (15.1.2020 முதல் 12.2.2020 வரை) »
temple
மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் சூரியன் 10ம் இடத்திற்கு வந்து சாதகமான பலன் தர உள்ளார். அதே ... மேலும்
 
temple
ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் புதன் ஜன.22க்கு பிறகும் சுக்கிரன் பிப்.9க்கு பிறகும் சாதகமான ... மேலும்
 
temple
மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் புதன் ஜன.22 வரையும், சுக்கிரன் பிப்.4 வரையும், செவ்வாய் பிப்.9 வரையும் ... மேலும்
 
temple
கடக ராசி அன்பர்களே!

இந்த மாதம் பிற்பகுதியில் அதிக நன்மை காண்பீர்கள். காரணம் புதன் ஜன.22க்கு பிறகும், ... மேலும்
 
temple
சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் சூரியன், குரு, ராகுவால் சிறப்பான பலன் கிடைக்கும். சுக்கிரனால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.