Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) காலம் மாறலாம் நம் கடமை மாறுமா கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: விசாகம் 4, அனுஷம், கேட்டை) குறையெல்லாம் தீரும் குருவின் பார்வையாலே விருச்சிகம்: விசாகம் 4, அனுஷம், கேட்டை) ...
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (13.2.2019 முதல் 13.8.2020 வரை)
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) தெய்வ அருளால் எதிர்பார்ப்பு நிறைவேறும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2019
17:06

ராகு 9ம் இடமான மிதுனராசிக்கு மாறுகிறார். கடந்த காலத்தில் இருந்த பின்தங்கிய நிலை மறையும். செயலில் தடை உருவாகலாம். கேது 3ம் இடமான தனுசு ராசிக்கு வருவதால் நன்மை அதிகரிக்கும். தெய்வ அருளால் எதிர்பார்ப்பு நிறைவேறும். உடல் உபாதை குணமாகும். குருவால் ஆற்றல் மேம்படும்.  பணவரவு அதிகரிக்கும். அவரது அனைத்து பார்வைகளும் சிறப்பான இடத்தில் விழுகின்றன. ஆதலால் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமையும். சனிபகவான் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடையச் செய்வார்.

2019 பிப்ரவரி – அக்டோபர்
புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். பணப்புழக்கத்துக்கு குறைவிருக்காது. சமூகத்தில் மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். கடந்த காலத்தைவிட மகிழ்ச்சி அதிகரிக்கும். விருந்து, விழா என அடிக்கடி செல்வீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள் கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். மே 19 முதல் அக்.26 வரை குருபலத்தால் தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.

வேலை நிமித்தமாக குடும்பத்தை பிரிந்தவர்கள் ஒன்று சேருவர்.  தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு அலைச்சல் இருக்கும். இருப்பினும் குருவின் வக்கிர காலத்தில் உத்தியோகம் சிறப்படையும். வியாபாரிகளுக்கு பொருளாதார வளம் பெருகும். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள், பொதுநலத்தொண்டர்கள் சிறப்பான பலனை காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள் சிரத்தையுடன் படிப்பது நல்லது. ஆனாலும் குருவின் வக்கிர காலத்தில் போட்டிகளில் வெற்றி பெறலாம்.

விவசாயிகளுக்கு கால்நடை செல்வம் பெருகும். மானாவாரி பயிர்களின் மூலம் அதிக மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் வண்ணம் கைகூடும். 

பெண்களுக்கு கணவரின் அன்பும்,  ஆதரவும் கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளின் செயல்பாட்டால் பெருமை அடைவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு அரசு வகையில் சலுகை கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

2019 நவம்பர் – 2020 ஆகஸ்ட்
தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். எதையும் வெற்றிகரமாக முடித்து அனுகூலம் காண்பீர்கள். குருவின் பார்வையால்  வாழ்வில் குதூகலம் உண்டாகும்.
சுபநிகழ்ச்சி நடந்தேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 2020 மார்ச்26க்கு பிறகு குருபகவான் மன உளைச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார்

பணியாளர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர்.  தனியார் துறையில் இருப்பவர்கள் பணிச்சுமையை சந்திக்க நேரிடும். அதிகாரிகளுடன் அனுசரித்து போகவும்.  சிலருக்கு வேலை மீது வெறுப்பு வரலாம். ஆனால் குருவின் பார்வையால் பணப்புழக்கம் இருக்கும்.  2020 மார்ச் 26க்கு பிறகு கடின உழைப்பு தேவைப்படும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய தொழில் அனுகூலத்தை தரும்.   

கலைஞர்களுக்கு விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசு வகையில் புகழ், பாராட்டு கிடைக்கும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம்.

மாணவர்கள் குருபார்வையால் சிறப்பான பலன் காணலாம்.  2020 மார்ச் 26க்கு பிறகு மனக்குழப்பம் ஏற்படலாம்.

விவசாயிகளுக்கு நெல், கோதுமை தானியத்தால் வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்க யோகமுண்டு.  வழக்கு விவகாரத்தில் தீர்ப்பு சாதகமாக அமையும்.

பெண்கள் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிள்ளைகளால்  பெருமை கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை உயரும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். 2020 மார்ச் 26க்கு பிறகு பொறுமையை கடைபிடிக்க வேண்டியதிருக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலைச்சலும், பளுவும் அதிகரிக்கும்.  உடல்நிலை திருப்தியளிக்கும்.  

பரிகாரம்:
* வியாழனன்று குருபகவானுக்கு அர்ச்சனை
* வெள்ளியன்று ராகுகாலத்தில் நாகர் வழிபாடு
* பவுர்ணமியன்று அம்மனுக்கு நெய் விளக்கு

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (13.2.2019 முதல் 13.8.2020 வரை) »
temple
ராகு, கேது பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன் தருவர்.  காரணம் ராகு சாதகமான இடத்திற்கு வருகிறார். ... மேலும்
 
temple
ராகு ராசிக்கு 2ம் இடமான மிதுன ராசிக்கு செல்வதால் குடும்பத்தில்  பிரச்னை, தொலைதூர பயணம் ... மேலும்
 
temple
ராகு  உங்கள் ராசிக்கு பெயர்ச்சியடைவது சுமாரான நிலை தான். இனி முயற்சிக்குரிய பலன் இல்லாமல் போகலாம். ... மேலும்
 
temple
ராகு, கேது பெயர்ச்சியில் கேது நன்மை தரும் 6ம் இடத்திற்கு வந்துள்ளார். நல்லகாலம் நெருங்குவதால் ... மேலும்
 
temple
ராகு  ராசிக்கு 11ம் இடமான மிதுனத்திற்கு செல்வது சிறப்பான இடம். அவரால் இதுவரை ஏற்பட்ட பிரச்னை இனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.