Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், அயில்யம்) பொன் பொருள் சேரும் கடகம்: (புனர்பூசம் 4, பூசம், அயில்யம்) ...
முதல் பக்கம் » கார்த்திகை ராசி பலன் 17.11.2023 முதல் 16.12.2023 வரை
மிதுனம்: (மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3) பயணத்தால் வெற்றி
எழுத்தின் அளவு:
மிதுனம்: (மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3) பயணத்தால் வெற்றி

பதிவு செய்த நாள்

12 நவ
2018
12:54

புதன் உங்கள் ராசிக்கு 5-ம் இடமான துலாமில் வக்கிரம் அடைந்திருக்க இந்த மாதம் தொடங்குகிறது. இது சுமாரான நிலை. குடும்பத்தில்  பிரச்னை உருவாகலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.  அடிக்கடி வெளியூர் பயணம் ஏற்படலாம் அவர் டிச.8ல் வக்கிர நிவர்த்தி அடைந்து 6-ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். அவரால்  பொருளாதார வளம் சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிலவும். எடுத்த முயற்சி வெற்றி அடையும். சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும்.

கார்த்திகை மாதத்தில் சூரியன் உங்கள் ராசிக்கு 6-ம் இடமான விருச்சிக ராசியில் தான் இருக்கிறார். இது சாதகமான இடம். அவரால்  பணவரவு திருப்திகரமாக இருக்கும். சனி, ராகுவால் பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும் அதை சூரியன்,சுக்கிரன் முறியடிப்பார்கள். செயலில் அனுகூலம் உண்டாகும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெற்று இருக்கிறீர்கள். ஆற்றல் மேம்படும். முக்கிய பொறுப்புகளை குடும்ப பெரியவர்களின் வசம் ஒப்படையுங்கள்.

குடும்பத்தில் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக  செயல்படுவர். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். மனதில் பக்தி உயர்வு மேம்படும். தேவைகள் குறைவின்றி பூர்த்தியாகும். நவ.21,22ல் உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களால் நன்மை ஏற்படும். அதே நேரம்  டிச.2,3ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். நவ.25,26ல் பெண்களால் நற்பலனை எதிர்நோக்கலாம். விருந்து, விழா என சென்று வருவீர்கள். டிச.7க்கு பிறகு கணவன், மனைவி இடையே அன்னியோன்ய சூழ்நிலை ஏற்படும்.

பணியாளர்களுக்கு  உழைப்புக்கு தக்க பலன்கள் கிடைக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள்  டிச.7க்கு பிறகு ஒன்று சேருவர். அதன் பிறகு சிலர் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு வளர்ச்சிக்கு துணைநிற்கும்.

வியாபாரிகளுக்கு பணவரவுக்கு பஞ்சம் இருக்காது.  லாபம் அபரிமிதமாக கிடைக்கும். எதிரிகளால் இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். கூட்டாளிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். நவ.23,24,27,28ல் சந்திரனால் தடைகள் வரலாம்.  டிச.6,7ல் எதிர்பாராத வகையில் அதிக வருமானம் கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் டிச.7க்கு பிறகு வீடு திரும்புவர்.

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். தொழில்ரீதியான பயணம் வெற்றி பெறும். அரசியல்வாதிகள், பொதுநல தொண்டர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர்பார்க்க முடியாது. மாணவர்கள்  கல்வியில் சிறந்த நிலையில் இருப்பர். டிச.7-க்குப் பிறகு புதன் சாதகமாக காணப்படுவதால்  நல்ல பலனை காணலாம். பொது அறிவு வளரும் ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெறுவர்.

விவசாயிகள் நெல், கோதுமை, கேழ்வரகு, சோளம், காய்கறி வகைகள் போன்ற பயிர்கள் மூலம் நல்ல மகசூலை பெறுவர். கறுப்பு நிற தானியங்கள் பயிரிடுவதை தவிர்க்கவும் புதிய சொத்து வாங்கும் வண்ணம் கைகூடாமல் போகலாம்.  விவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் காண்பர். உறவினர்களின் மத்தியில் சுமுக நிலை ஏற்படும். தோழிகள் உதவிகரமாக இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். டிச.7க்கு பிறகு நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவரிடத்தில் அன்பு அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பின்தங்கிய நிலை இனி இருக்காது. சம்பள உயர்வுக்கு தடை ஏதும் இல்லை. சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். டிச. 8ல்  விருந்து,  விழா என சென்று வருவீர்கள். சகோதர, சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர்.


* நல்ல நாள்: நவ.18, 19, 20, 21, 22, 25, 26, 29, 30, டிச.1, 6, 7, 8, 9, 10

* கவன நாள்: டிச. 11, 12 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 7, 9

* நிறம்: சிவப்பு வெள்ளை


பரிகாரம்
● செவ்வாயன்று முருகனுக்கு அபிஷேகம்
● அஷ்டமியன்று பைரவருக்கு வடைமாலை
● வியாழக்கிழமையில் குருபகவான் தரிசனம்

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar