Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) சனியால் தொல்லை ஓராண்டுக்கு இல்லை ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) வெற்றி மேல வெற்றி தரும் பொற்காலம் பிறந்தாச்சு! கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (28.10.2019 முதல் 13.11.2020 வரை)
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) குடும்பத்தில் மகிழ்ச்சி தொழிலில் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2018
12:48

மதிநுட்பத்துடன் செயலாற்றும் மிதுன ராசி அன்பர்களே!

குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு செல்வது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. பொதுவாக 6-ம் இடத்தில் உடல்நலம் பாதிக்கலாம்.  மனதில் தளர்ச்சி உண்டாகும். ஆனாலும் குருவின் 5,7,9ம் இடத்து பார்வைகள்  சாதகமாக உள்ளதால்  எந்த இடையூறையும் சமாளிக்கும் வல்லமை உண்டாகும். மேலும் குருபகவான் 2019 மார்ச் 13ல் அதிசாரமாக தனுசு ராசிக்கு மாறுகிறார். அதனால் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

ராகுபகவான் ராசிக்கு 2-ம் இடமான கடகத்திற்கு 2019 பிப்.13ல் மாறுகிறார். இதுவும் சுமாரான நிலையே. இதனால் மன உளைச்சல், வீண் அலைச்சல் ஏற்படலாம். முயற்சிக்குரிய பலன் இல்லாமல் போகலாம். இதே நாளில்  8-ம் இடத்தில் உள்ள கேது 7 இடத்திற்கு மாறுவதால் மனைவியால் பிரச்னையை சந்திக்க நேரிடலாம். சனிபகவான் தற்போது 7-ம் இடமான தனுசு ராசியில் இருப்பதும் சிறப்பானது அல்ல. வெளியூரில் தங்கும் சூழ்நிலை உருவாகும். தீயோர் சேர்க்கையால் அவதியுறலாம்.

இனி பொதுவான பலனைக் காணலாம். குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். சொந்த வீடு வாங்கவோ அல்லது புதுவீடு கட்டவோ யோகமுண்டாகும். வருமானம் அதிகம் இருந்தாலும் அதற்கேற்ப செலவும் கூடும். மற்றவர் வம்புக்கு வந்தாலும் வாக்குவாதம், சண்டையை தவிர்க்கவும். இல்லா விட்டால் நிம்மதி இழக்க நேரிடலாம். முக்கிய விஷயங்களில் பெரியோர் ஆலோசனையை பின்பற்றுவது நன்மை தரும். குருபகவானின் 5,7,9ம் பார்வையால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். 2019 மார்ச் 10க்கு பிறகு  பெண்களால் மேன்மை உண்டாகும்.  குடும்பத்தில் கணவன், மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். குருவின் பார்வை 2ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் படுவதால்  குதூகலமான வாழ்வு அமையும். ராகுவால் அவ்வப்போது கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் பாதிப்பு வராது. புத்தாடை, அணிகலன்கள் சேரும்.  பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை சேர்ப்பர்.  

பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும். கடந்த காலத்தில் நிர்வாகத்தின் எதிர்ப்பை சந்தித்தவர்கள் அதிலிருந்து விடுபட்டு நிம்மதி காண்பர். சிலருக்கு விரும்பிய பணிமாற்றம், இடமாற்றம் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள்  2019 மார்ச் 10க்கு பிறகு பணியில் திருப்தி காண்பர். சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.

தொழில், வியாபாரத்தில் அமோக வளர்ச்சி உண்டாகும். கடந்த காலத்தில் குறுக்கிட்ட தடைகள் விலகி ஆதாயம் அதிகரிக்கும். விரிவாக்கப்பணிக்காக வங்கியில் பெற்ற கடன் முழுவதுமாக  அடைபடும்.  வெளிநாடுகளில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழிலில் நல்ல ஆதாயம் கிடைக்கும். 2019 மார்ச் 10 க்கு பிறகு கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். பகைவர் தொல்லை  மறையும். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவர்.

கலைஞர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில்ரீதியான வெளியூர், வெளிநாட்டு பயணம் வெற்றி பெறும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் புதிய பதவி கிடைக்கப் பெறுவர். ஆனால் எதிர்பார்த்த பொருளாதார உயர்வு கிடைக்க வாய்ப்பு இல்லை. 2019 மார்ச் 10க்கு பிறகு தொண்டர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

மாணவர்கள் போட்டி கடுமையாக இருந்தாலும் அதில் வெற்றி காண்பர்.  இந்த கல்வி ஆண்டு முழுவதும் சிறப்பானதாக இருக்கும். குருவின் பார்வை பலமாக இருப்பதால்  முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். சிலர் வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பை பெறுவர்.  

விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் அதற்கு ஏற்ப வருமானம் கிடைக்காமல் போகலாம். அதிகம்  செலவு பிடிக்கும் பணப்பயிர்களை தவிர்க்கவும். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்காது. நிலத்தை குத்தகைக்கு விட்டு வருமானம் பெறுவது நல்லது.

பெண்கள் குடும்பத்தில் உற்சாகமாக காணப்படுவர். கடந்த கால சேமிப்பு மூலம் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். குழந்தைகளின் செயல்பாடு கண்டு பெருமிதம் கொள்வர். விருந்து, விழா என  அடிக்கடி சென்று வருவர். கணவன், மனைவி உறவில் அன்பு மேலோங்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வேலை தேடும் பெண்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். அது அரசு வேலையாகவும் இருக்கலாம். குருவின் பார்வை பலத்தால் ஆரோக்கியம் மேம்படும்.

பரிகாரம்:
●  வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி வழிபாடு
●  வெள்ளியன்று துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு
●  சங்கட சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல்

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (28.10.2019 முதல் 13.11.2020 வரை) »
temple
குருபகவான் 9ம் இடமான தனுசு ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம். இதுவரை அவரால் பட்ட இன்னல்களில் ... மேலும்
 
temple
இப்போது குரு 8ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. 8ம் இடத்தில் ... மேலும்
 
temple
குருபகவான் 6ம் இடத்தில் இருந்து 7ம் இடத்திற்கு செல்வது மிக உயர்வான நிலை. குருவின் 5ம் இடத்துப் ... மேலும்
 
temple
குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் இருந்து 6ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை ... மேலும்
 
temple
குருபகவான் உங்கள் ராசிக்கு 5 ம் இடத்துக்கு செல்கிறார். இது மிக சிறப்பான நிலை. குருவால் கோடி நன்மைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.