Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மகரம்:  (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2): சுற்றி வளைத்து தாக்கினாலும் அதிலும் சுகம் இருக்குது! மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி): உணர்ச்சிவசத்தை தவிர்த்தால் எல்லாம் சுகமே மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1, 2, 3): வெற்றி நிச்சயம் ஆனால் தலைக்கனம் கூடாது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2018
12:00

குணக்குன்றாக விளங்கும் கும்ப ராசி அன்பர்களே!

கடந்த இரண்டரை ஆண்டுகளாக உடல் உபாதைகளையும், தொழிலில் மந்த நிலையையும் சனிபகவான் கொடுத்திருப்பார். உங்கள் செல்வாக்கு, கவுரவத்திற்கு பங்கம் வந்திருக்கும். திறமைக்கு அங்கீகாரம் கிடைத்துஇருக்காது. ஆனாலும் கடந்த சில மாதங்களாக குரு, ராகு நன்மை தந்து உங்களை தாங்கி பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. இந்த ஆண்டு சனி 11-ம் இடத்தில் இருக்கிறார். இது சாதகமான இடம். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம். வாழ்க்கை செழித் தோங்கும். படிப்படியாக முன்னேற்றம் காணலாம். அதற்காக தலைக்கனம் வந்து விடக் கூடாது. இதைத் தவிர்த்தால் வெற்றி நிச்சயம்.

குரு 9-ம் இடத்தில் இருப்பதால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. இவர் மூலம் கிடைக்கும் பலன்கள் பிப்.14- முதல் ஏப்.8 வரைகுறையும். ஏனெனில் அவர் 10-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுவார். ஏப். 9- முதல் செப். 3-வரை வக்கிரம் அடைந்து, துலாம் ராசியில் இருக்கிறார். இந்த கால கட்டத்தில் அவரால் நன்மை கிடைக்கும்.

தற்போது ராகு உங்கள் ராசிக்கு ஆறாம் இடமான கடகத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம். அவர் உங்களை தீயோர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார். கேது, ராசிக்கு 12-ம் இடமான மகரத்தில் இருப்பதால் சில பிரச்னைகள் ஏற்படலாம். மூன்று கிரகங்கள் பெரும்பாலான மாதங்கள் சாதகமாக உள்ளதால், கணவன்–-மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வீடு கட்டலாம். திருமணம், சுப நிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும். உறவினர்கள் வகையில் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும்.

பணியாளர்கள் வேலையில் திருப்தி காணலாம். ஆண்டின் தொடக்கத்தில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வெளியூர் பயணம் அனுகூல பலனை தரும். பணியில் இருந்த பின்தங்கிய நிலை மறையும். வேலைப்பளு குறையும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். தடையின்றி முன்னேறலாம்.  விரயம் தடைபடும். புதிய தொழில் அனுகூலம் ஏற்படும். பங்குதாரர்கள் இடையே ஒற்றுமை ஏற்படும். போட்டியாளர்களின் இடையூறு அவ்வப்போது தலைதுாக்கினாலும் எளிதில் முறியடிப்பீர்கள். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை லாபம் மேலும் அதிகரிக்கும்.  கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர். பணவரவு சிறப்பாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்காது. ஆனால் தலைமையின் பாராட்டு கிடைக்கும். மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டைபோல் மிகவும் பிற்போக்கான நிலை இருக்காது. முயற்சி எடுத்தால் விரும்பிய பாடம் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும்.  

விவசாயிகள் திருப்திகரமான வருவாயை காணலாம். சிலர் சொத்து வாங்குவர். நெல், கோதுமை மற்றும் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூலை பார்க்கலாம். வழக்கு, விவகாரங்களில் தீர்ப்பு உங்கள் பக்கம் அமையும். கைவிட்டுப்போன பொருட்கள் கிடைக்கும்.  பெண்கள், தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யுமளவு வருமானம் இருக்கும். தோழிகள் உதவிகரமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.

பரிகாரம்
* திங்கள் அன்று கேதுவுக்கு அர்ச்சனை.
* அஷ்டமியன்று பைரவர் வழிபாடு
*ஏழைக் குழந்தைகள் படிக்க உதவி.செல்ல வேண்டிய கோயில் காஞ்சிபுரம்
வரதராஜபெருமாள் கோயில்

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020 »
temple
பொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே!

இந்த ஆண்டு குரு, ராகு சாதகமாக உள்ள நிலையில் புத்தாண்டு ... மேலும்
 
temple
நல்லவர் நட்பை விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே!

புத்தாண்டின் தொடக்கத்தில் குருவின் ... மேலும்
 
temple
மதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே!

உங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் ... மேலும்
 
temple
உழைப்பால் உயர்ந்திடும் கடக ராசி அன்பர்களே!

சனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் ... மேலும்
 
temple
மன உறுதியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!

இந்த ஆண்டு 11ம் இடத்தில் உள்ள ராகுவும், 5ம் இடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.