Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1): எதிர்நீச்சல் ஒன்றே இலக்கை அடைய வழி சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1): ... துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3): உலகமே இனி உங்கள் கையில் துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2019
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2): உழைப்பு ஒன்றே உங்களை உயர்த்தும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2018
11:46

கனிவாகப் பேசும் கன்னி ராசி அன்பர்களே!

கடந்த ஆண்டு சனி,  ராகு தந்த நன்மைகள் உங்களை கீழே தடுக்கி விடாமல் தாங்கி பிடித்து இருக்கும். தற்போது சனிபகவான் 4-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. குடும்பத்தில் விரோதம், தாயை பிரியும் நிலை ஏற்படலாம். சனியின் 3-ம் இடத்துப்பார்வை மூலம் மட்டும் சில நன்மைகள் நடக்கும். ராகு 11-ம் இடத்தில் இருப்பது சிறப்பு. அவர் பொருளாதார வளத்தைத் தருவார். கேது 5-ம் இடமான மகரத்தில் இருக்கிறார். அவர் அரசு வகையில் சில பிரச்னைகளை தரலாம்.உழைப்பு ஒன்றே  உங்களை உயர்த்தும்.

குரு ஆண்டு துவக்கத்தில் ராசிக்கு 2-ல் இருப்பார். இது சிறப்பான அம்சம். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி எடுபடாது.  பிப்.14-ல் அவர் விருச்சிக ராசிக்கு மாறுவதால் முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு  கிடைக்காது.  அவரின் 5,7 மற்றும் 9-ம் இடத்து பார்வை கெடுபலனை ஓரளவு குறைக்கும். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை சாதகமான நிலை உருவாகும். வீடு, காலி மனை, வாகனம் வாங்க யோகம் கை கூடி வரும். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சீரான வசதி இருக்கும். தம்பதியினரிடையே அன்பு நீடிக்கும். உறவினர் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும்.

திருமணம், கிரகப்பிரவேசம், சுபநிகழ்ச்சிகள் ஏப்ரல் முதல் ஆகஸ்டிற்குள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் யாரையும் நம்பி விட வேண்டாம். புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். எதையும் பலமுறை சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. குருவின் 5,7 மற்றும் 9-ம் இடத்துப்பார்வையும்,சனியின் 3-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக அமைந்திருப்பதால் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படமாட்டீர்கள் என்றாலும், கவனம் தேவை. தொழில் ரீதியான வெளியூர் பயணம் மூலம் ஆதாயம் கிடைக்கும். பணியாளர்களுக்கு உயர்பதவி, சம்பள உயர்வு கிடைக்கும்.  வேலைப்பளு அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டாகும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருமானம் உயரும். சக பெண் கலைஞர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.  அரசியல்வாதிகளுக்கு பதவியும், பணமும் கிடைக்கும். தொண்டர் மத்தியில் செல்வாக்கு மேலோங்கும். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டும்.  ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை சிறப்பாக இருக்கும். தேர்வில் வெற்றி பெறுவதோடு, மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பை பெறுவர். கலை, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பெற்றோருக்கு பெருமை சேர்ப்பர். விவசாயிகள் சொத்து வாங்கலாம். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் கிடைக்கப் பெறுவர். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர். நவீன  இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு. வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்களுக்கு கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும், உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும். நகை, புத்தாடை தாராளமாக சேரும். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி காண்பர்.  பிள்ளைகளின் செயல்பாடு கண்டு பெருமை கொள்வீர்கள்.  வீண் செலவு ஏற்படலாம்
கவனமாக இருப்பது புத்திசாலித்தனம்.  உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்
* விநாயகரை வணங்கி வாருங்கள்.
* சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்கு சென்று வாருங்கள்.
* வெள்ளியன்று ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.செல்ல வேண்டிய தலம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2019 »
temple
குடும்பத்தினர் மீது பாசம் மிக்க மேஷ ராசி அன்பர்களே!

நட்புக்கிரகமான  சுக்கிரன் சாதகமாக இருக்கும் ... மேலும்
 
temple
கலை ரசனையுடன் செயல்பட்டு வரும் ரிஷப ராசி அன்பர்களே!

ராசிக்கு நட்பு கிரகமான குருபகவான் நன்மை தரும் ... மேலும்
 
temple
அனைவரிடமும் இதமாக பேசி பழகும் மிதுன ராசி அன்பர்களே

இந்த ஆண்டு தொடக்கம் சற்று சுமாராகவே இருக்கும். ... மேலும்
 
temple
மனஉறுதியுடன்  செயல்பட்டு வெற்றி காணும் கடக ராசி அன்பர்களே!

சந்திரனை ஆட்சி நாயகனாக கொண்ட ... மேலும்
 
temple
திறமையால் பிறரைக் கவரும் சிம்ம ராசி அன்பர்களே!

ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கும் கேதுவால் செயலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.