Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்): நிமிர்ந்து நில்லுங்கள் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்): ... கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2): உழைப்பு ஒன்றே உங்களை உயர்த்தும் கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1): எதிர்நீச்சல் ஒன்றே இலக்கை அடைய வழி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2018
11:45

வெற்றிக்கனிக்காக போராடும் சிம்ம ராசி அன்பர்களே!

தற்போது 6-ம் இடத்தில் உள்ள கேது  நன்மை தந்து கொண்டிருக்கிறார். அவர் மூலம் காரிய அனுகூலம், பொருளாதார வளம் ஆகியவை கிடைத்துக் கொண்டிருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கேது சாதகமாக நின்றாலும் சனியும், ராகுவும், குருவும் நன்மை தரும் இடத்தில் இல்லை. இந்த நிலையில்தான் இந்த ஆண்டு மலர்கிறது.சனிபகவான் தற்போது 5-ம் இடமான தனுசு ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் அல்ல. 5-ல் சனி இருக்கும் போது பிரச்னைகளை தருவார். அவர் திருப்தியற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 7-ம் இட பார்வையால் நன்மைகள் நடக்கும்.

ராகு 12-ம் இடத்தில் இருக்கிறார். அவர் தூரதேச பயணத்தை கொடுப்பார். குரு ராசிக்கு 3-ம் இடத்தில் இருக்கிறார். அவரால் சிறு தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. ஆனால் அவரது 5,7,9-ம் இடத்து பார்வையால் எந்த இடையூறும் தகர்ந்து போகும். வருடஆரம்பத்தில் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். செல்வாக்கு மேலோங்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-, மனைவி இடையே அன்பு இருக்கும். ஆனால் பிப். 13-க்கு பிறகு எதிர்நீச்சல் அடித்து தான் எதையும் சாதிக்க வேண்டி இருக்கும். கணவன்–-மனைவி இடையே மனக்கசப்பு வரலாம் எந்த ஒரு முக்கிய காரியத்தையும் தீர சிந்தித்த பிறகே தொடங்க வேண்டும். ஏப். முதல் ஆகஸ்ட் வரை குருவின் பார்வையால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.  குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு வளர்ச்சி சீராக இருக்கும். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். அனாவசிய செலவை தவிர்க்கவும். குடும்ப பிரச்னையை தொழிலில் காட்டாமல் உழைத்தால் வளம் காணலாம். அரசு வகையில் சலுகை எதிர்பார்க்க முடியாது. பணவிரயம், பணம் திருட்டு தடுக்கப்படும். வெளியூர் பயணம் அனுகூலத்தைத் தரும். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை குருவின் பார்வையால் தொழில் வளர்ச்சி அடையும்.

போட்டியாளர்கள் போட்ட முட்டுக்கட்டைகள் விலகும். பொருளாதாரம் கூடும். பணியாளர்களுக்கு வேலையில் பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். வழக்கமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலர் அதிக செலவை சந்திக்க வேண்டியிருக்கும். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை குருவின் பார்வையால் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற வசதிகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத வகையில் மாற்றம் ஏற்படலாம். நவம்பர், டிசம்பரில் வேலையில் கவனம் தேவை.

கலைஞர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டுகள் கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைக்க வாய்ப்புண்டு.  மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். ஆசிரியரின் ஆலோசனையை பெறுவது நன்மை தரும். சிலருக்கு வெளிநாட்டு கல்வி யோகமும் உண்டு. போட்டிகளில் வெற்றி காண்பீர்கள்.  விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வளம் காண்பர். கால்நடை வளர்ப்பு போன்றவற்றிலும் வருவாய் கிட்டும்.  சொத்து வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். பெண்கள் ஆடம்பர பொருட்களை வாங்குவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உழைப்புக்கு ஏற்ற மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.

பரிகாரம்
* சனீஸ்வரருக்கு எள் சோறு படைத்தல்
* ராகுவுக்கு நீல வஸ்திரம் சாத்தி அர்ச்சனை.
* வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு பூஜை.செல்ல வேண்டிய தலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020 »
temple
பொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே! இந்த ஆண்டு குரு, ராகு சாதகமாக உள்ள நிலையில் புத்தாண்டு ... மேலும்
 
temple
நல்லவர் நட்பை விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே! புத்தாண்டின் தொடக்கத்தில் குருவின் பார்வையால் நன்மைகள் ... மேலும்
 
temple
மதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே! உங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் நிலையில் ... மேலும்
 
temple
உழைப்பால் உயர்ந்திடும் கடக ராசி அன்பர்களே!சனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் ... மேலும்
 
temple
மன உறுதியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!இந்த ஆண்டு 11ம் இடத்தில் உள்ள ராகுவும், 5ம் இடத்தில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.