Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3): சிந்தித்து செயல்பட்டால்நலமோடு வாழலாம் மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1): எதிர்நீச்சல் ஒன்றே இலக்கை அடைய வழி சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1): ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்): நிமிர்ந்து நில்லுங்கள் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2018
11:44

கல்லைக் கனியாக்கும் கடக ராசி அன்பர்களே!

சந்திரனை ஆட்சி நாயகனாக கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும், சனிபகவான் 6-ம் இடமான தனுசு ராசியில் நின்று நன்மைகளை தருவார். உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடைய செய்வார். பணப்புழக்கத்தை கொடுப்பார். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவார். மேலும் சனியின்10-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலம் தொழிலில்  முன்னேற்றம் தருவார். அதிர்ஷ்டமான ஆண்டு என்பதால், நிமிர்ந்து நிற்கலாம்.

ராகுவால் வீண் அலைச்சல் ஏற்படலாம். கேதுவால் மனைவி வகையில் பிரச்னை, அலைச்சல் ஏற்படும். சனியால் நன்மை ஏற்பட்டாலும், குரு4ல் உள்ளதால் மன வேதனையும், நிலையற்ற தன்மையும் ஏற்படும்.  உறவினர் வகையில் பகையை உருவாக்குவார். ஆனால் அதை கண்டு கவலை கொள்ள வேண்டாம். அவர் பிப்.14ல் விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். திருமணம், சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதாரத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஏப். 9- முதல் செப்.3- வரை வக்கிரம் அடைந்து துலாம் ராசியில் இருக்கிறார். அப்போது நற்பலன்கள் சற்று குறையலாம்.

எந்த செயலையும் சிறப்பாக செய்து முடிக்கலாம். தேவைகள் பூர்த்தி ஆகும். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும்.  செல்வாக்கு அதிகரிக்கும். ஆகஸ்டிற்கு பின் பொருளாதாரம் மேலும் அதிகரிக்கும். கணவன், -மனைவி இடையே அன்பு இருக்கும். தடைபட்டு வந்த திருமணம்,  சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு வீடு கட்டும் யோகம் வரும். வாகனம் வாங்கலாம்.

பணியாளர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் அதிக வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்களிடம் பகைக்காமல் நடந்து கொள்ளவும். முயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும். பிப்.13-க்கு பிறகு வேலையில் முன்னேற்றம் காணலாம். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.

தொழில், வியாபாரத்தில் இது பொற்காலம். எந்த தொழிலிலும் அதிக வருமானத்தை காணலாம். புதிய வியாபாரம் நல்ல லாபத்தை தரும். பங்குதாரர்கள் இடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும். கேது சாதகமற்ற நிலையில் இருப்பதால் அலைச்சல், செலவு கூடும்.கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் தாராளமாக கிடைக்கும். புகழ், பாராட்டு வரும். அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைக்கும்.

மாணவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் முயற்சி எடுத்து படிக்க வேண்டும். பிறகு குரு சிறப்பாக இருப்பதால் முயற்சிக்கு பலன் கிடைக்கும். ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு சிறப்பாக அமையும். நல்ல மதிப்பெண் பெறலாம். விரும்பிய பாடம் கிடைக்கும். விவசாயிகள் புதிய சொத்து வாங்கலாம்.

பெண்கள், கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பை பெறுவர். தடைபட்டு வந்த திருமணம், சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சகோதரர்களால் உதவி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.

பரிகாரம்:
* தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள்.
* ராகு, கேதுவுக்கு அர்ச்சனை
* செவ்வாயன்று துர்க்கை வழிபாடு.செல்ல வேண்டிய தலம் திருச்சி மாவட்டம்
சமயபுரம் மாரியம்மன்

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020 »
temple
பொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே! இந்த ஆண்டு குரு, ராகு சாதகமாக உள்ள நிலையில் புத்தாண்டு ... மேலும்
 
temple
நல்லவர் நட்பை விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே! புத்தாண்டின் தொடக்கத்தில் குருவின் பார்வையால் நன்மைகள் ... மேலும்
 
temple
மதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே! உங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் நிலையில் ... மேலும்
 
temple
உழைப்பால் உயர்ந்திடும் கடக ராசி அன்பர்களே!சனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் ... மேலும்
 
temple
மன உறுதியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!இந்த ஆண்டு 11ம் இடத்தில் உள்ள ராகுவும், 5ம் இடத்தில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.