Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2): மன உறுதி கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்): நிமிர்ந்து நில்லுங்கள் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்): ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3): சிந்தித்து செயல்பட்டால்நலமோடு வாழலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2018
11:36

கடவுளின் செல்லப்பிள்ளைகளான மிதுன ராசி அன்பர்களே!

உங்கள் ராசி நாயகன், புதன் சாதகமாக இருக்கும் நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. அவர் உங்களை நல்வழியில் அழைத்து செல்வார். பேச்சாற்றல் மூலம் எதையும் சாதிப்பீர்கள். குரு, பிப்.13 வரை உங்கள் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக நிற்பார். அவரால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில்  இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதி ஒற்றுமை மேம்படும்.

உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பிப்,14ல் 6-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறிய பின், உடல்நிலை, மனதில் தளர்ச்சி ஏற்படும். எந்த செயலிலும் சிந்தித்து முன்யோசனையுடன் செயல்பட்டால் நலமாக வாழலாம்.  பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம்.  பகைவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். மேலும் குரு ஏப்.9 -முதல் செப்.3 -வரை வக்கிரம் அடைந்து துலாம் ராசியில் இருக்கிறார். இந்த காலகட்டத்தில் அவரால் நன்மை கிடைக்கும்.

சனி 7-ம் இடமான தனுசு ராசியில் உள்ளார். இது கண்டச்சனி காலம். இந்த இடத்தில் இருக்கும் போது, குடும்பத்தில் பிரச்னையை உருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் வாசம் நிகழும். ஏப்.28- முதல் செப். 11- வரை வக்கிரம் அடைவதால், அவர் தரும் கெடுபலன் குறையும். மொத்த கிரக நிலையின் அடிப்படையில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் வசதிகள் பெருகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. ராகு சிறப்பாக இல்லாததால் கணவன்-, மனைவி இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு வரலாம். விட்டுக் கொடுத்து போகவும். உறவினர்கள் வகையில் ஒதுங்கி இருக்கவும். திருமணம், குழந்தை பாக்கியம், சுபநிகழ்வுகள் நடக்கும்.

பணியாளர்களுக்கு ஆண்டு ஆரம்பத்தில் வேலையில் ஆர்வம் ஏற்படும். அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பர். சம்பள உயர்வு கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப்பெறலாம். மார்ச் முதல் வேலைப்பளு அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படலாம். நவம்பர், டிசம்பர் மாதங்களில் கவனமாக இருக்கவும். கோரிக்கைகள் நிறைவேறும்.

தொழில் வியாபாரத்தில் ஆண்டு துவக்கத்தில் வளர்ச்சி இருக்கும். லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்கள் வகையில் கவனம் தேவை. மார்ச் முதல் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போகலாம். எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பரில் அரசின் கெடுபிடிக்கு ஆளாகலாம். முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய பதவி கிடைக்கப்பெறுவர். அதன்பின் பலன் குறையும். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும். போட்டி கடுமையாக இருந்தாலும் வெற்றி காண்பர்.  விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். நெல், கோதுமை, கடலை போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும். வழக்கு விவகாரங்கள் சீராக இருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். பெண்கள் உற்சாகமாக காணப்படுவர். குழந்தைகளால் பெருமை காண்பீர்கள். விருந்து, விழா என சென்று வருவீர்கள். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.உங்களால் வீட்டிற்கு பெருமை,கிடைக்கும்.

பரிகாரம்
* சனிக்கிழமை பெருமாள் வழிபாடு.
* ராகு, கேதுவுக்கு பால் அபிஷேகம்
* வியாழக்கிழமை குரு பகவானுக்கு அர்ச்சனை.செல்ல வேண்டிய தலம் மதுரை
மீனாட்சியம்மன் கோயில்

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020 »
temple
பொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே!

இந்த ஆண்டு குரு, ராகு சாதகமாக உள்ள நிலையில் புத்தாண்டு ... மேலும்
 
temple
நல்லவர் நட்பை விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே!

புத்தாண்டின் தொடக்கத்தில் குருவின் ... மேலும்
 
temple
மதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே!

உங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் ... மேலும்
 
temple
உழைப்பால் உயர்ந்திடும் கடக ராசி அன்பர்களே!

சனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் ... மேலும்
 
temple
மன உறுதியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!

இந்த ஆண்டு 11ம் இடத்தில் உள்ள ராகுவும், 5ம் இடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.