Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

ரிஷபம் : உஷாருங்க... உஷாரு எட்டாமிடம் வராரு! ரிஷபம் : உஷாருங்க... உஷாரு எட்டாமிடம் ... கடகம்: உல்லாச உலகம் உங்களுக்கே சொந்தம் கடகம்: உல்லாச உலகம் உங்களுக்கே ...
முதல் பக்கம் » சனிப்பெயர்ச்சி பலன்!(19.12.2017 முதல் 20.12.2020 வரை)
மிதுனம்: காலம் மாறலாம் நம் கடமை மாறுமா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2017
14:54

மதிநுட்பத்தால் வாழ்வில் சாதிக்க விரும்பும் மிதுன ராசி அன்பர்களே!

சனி பகவான் இது வரை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான விருச்சிகத்தில் இருந்து  நன்மையை வாரி வழங்கினார். நல்ல பணப்புழக்கம்,  முயற்சியில் வெற்றி கொடுத்தி ருப்பார்.  அபார ஆற்றலை தந்து, எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கி இருப்பார். உடல் நலம், மன நலம் சிறப்பாக இருக்கும். சனிபகவான் 7-ம் இடமான தனுசு ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம் அல்ல.   குடும்பத்தில்  பிரச்னையை உருவாக்குவார். வீண் அலைச்சல் அதிகரிக்கும். விருப்பமில்லாமல் வெளியூர் தங்கும் சூழ்நிலை உருவாகும். காலத்திற்கு ஏற்ப சனிபகவான் இடம் மாறினாலும், உங்களுக்குரிய கடமையைச் கண்ணும் கருத்துமாக சரிவரச் செய்து நிலைமையைச் சமாளிப்பீர்கள்.   சனிபகவான்  2018 ஏப்ரல். 28- முதல் செப்டம்பர் 11- வரை, 2020 மே 1- முதல் செப். 16- வரை வக்ரம் அடைந்தாலும் தனுசு ராசியில் தான் இருக்கிறார்.  

வக்ரத்தில் சிக்கும் போது கெடுபலன் தர மாட்டார் என்பதால் நன்மையே உண்டாகும். ராகு, உங்கள் ராசிக்கு  2-ம் இடமான கடகத்தில் இருக்கிறார்.  குடும்பத்தில் பிரச்னை,  தொலைதூர பயணம், பொருளாதார இழப்பு ஏற்படும்.  கேது  8-ம் இடத்தில் இருப்பதால்  உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம்.  

2018 ஜனவரி – 2019 பிப்ரவரி இந்த காலத்தில் ராகு கடகத்திலும், கேது, மகரத்திலும் இருக்கின்றனர். இரண்டுமே சுமாரான நிலை தான். குருபகவான் 2018 பிப்.14 வரை 5-ம் இடத்தில் இருப்பதால் அவரால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அதன் பிறகு 6ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் நன்மை தர இயலாது.

சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஆனால் குருபகவானின் 9-ம் இடத்து பார்வை மூலம் மந்தநிலை ஓரளவு மாறும். கணவன், -மனைவி இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு உருவாகலாம்.  வீடு, வாகன வகையில் திருட்டு போக வாய்ப்புண்டு. குருபகவான் 2018 ஏப். 9- முதல் செப்.3- வரை வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் நற்பலன் உண்டாகும்.  பெண்களால் மேன்மை கிடைக்கும்.  

திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சி கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் சிலர் வேலை விஷயமாக வெளிநாடு சென்று வருவீர்கள்.  
எதிரிகளின் இடையூறுகள் வரலாம்.  முதலீடு விஷயத்தில்  கவனம் தேவை. புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம்.  

பணியாளர்களுக்கு குருபகவானின் வக்ர காலத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும்.  சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.
மாணவர்கள் முன்னேற்ற நிலையில் காணப்படுவர். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.  ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று நடப்பது வளர்ச்சியளிக்கும்.
விவசாயத்தில் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளி போகலாம். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்கள் உறவினர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும்.  வேலைக்கு  செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். குரு பகவானின் வக்ர காலத்தில் தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். பணம் கிடைக்கும்.  உடல்நலம் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். சற்று கவனம் தேவை.

2019 மார்ச் – 2020 மார்ச் குருபகவான் 7-ம் இடமான தனுசு ராசிக்கு செல்கிறார். இது மிக உயர்வான நிலை.  குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து, சுப நிகழ்ச்சியை தருவார். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் பெருகும்.  

ராகு உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருந்து குடும்பத்தில் பிரச்னை ஏற்படுத்தி இருப்பார். இனி ராகு உங்கள் ராசிக்கு வருவதும் சுமாரான நிலை தான். அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் இல்லாமல் போகலாம். கேது இதுவரை 8-ம் இடத்தில் இருந்து உடல் உபாதை தந்திருக்கலாம். இப்போது அவர்  7-ம் இடத்திற்கு வருவதும் உகந்த இடம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் எட்டாமிடத்தில் இருந்தது போல் கெடுபலன் உண்டாகாது.  7-ல் கேது இருக்கும்போது மனைவி வகையில் பிரச்னை, அலைச்சலை தரலாம். வீண் மனவேதனை உருவாகலாம். எதிரிகளால் தொல்லை ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.  பணவிஷயத்தில் மற்றவரை நம்பி விட வேண்டாம்.

பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். தடைகள், திருப்தியின்மை போன்றவை  மறையும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். சமூகநல சேவகர்களுக்கு பொது மக்களிடையே நற்பெயர் கிடைக்கும்.
மாணவர்கள் சிலர் வெளிநாடு சென்று படிக்கும் யோகம் பெறுவர். விவசாயிகள் அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம்.  வழக்கு, விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும். பெண்களுக்கு புண்ணிய தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பை பெறுவர். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். உடல்நலக்குறைவு வந்தாலும் நொடிப்பொழுதில் மறைந்துவிடும்.

2020 ஏப்ரல்– டிசம்பர்  குருபகவான், தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு மாறுகிறார். அப்போது அவர் மன வேதனையையும், நிலையற்ற தன்மையையும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதம் உருவாக்குவார். அதற்காக கவலைகொள்ள வேண்டாம். அவர் 2020 ஜூலை 7- முதல் 2020 அக்.14- வரை வக்ரம் அடைந்து தனுசு ராசியில் இருகிறார். இந்த காலத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான வசதி கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புண்டு. கணவன், மனைவி இடையே இணக்கம் அதிகரிக்கும். கையில் பணப்புழக்கம் உயரும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.  

2020 ஆக.31ல்  ராகு, மிதுனத்தில் இருந்து ரிஷப ராசிக்கும் கேது, தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்திற்கும் மாறுகின்றனர். கேதுவால் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லையில் இருந்து விடுபடலாம்.  அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, -ஆபரணங்கள் வாங்கலாம். ராகுவால் வெளியூர் பயணத்தால் இனிய அனுபவம் காண்பீர்கள்.

தொழில், வியாபாரத்தில் பண விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பது அவசியம்.  பணியாளர்கள் சீரான வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.

கலைஞர்கள்  புதிய ஒப்பந்தங்கள் பெற சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும்.  அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நிம்மதியான வாழ்வு பெறுவர்.  

மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். விவசாயிகள் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கப் பெறுவர்.  புதிய சொத்து வாங்கலாம்.  பெண்களுக்கு சகோதர வழியில் உதவி கிடைக்கும்.

பரிகாரப்பாடல்

நீயிலாதென் குறைகள் கேட்பவரும் இல்லை ஒரு
நிழலில்லை எனது மனமோ
நிலை இல்லை என அடையும் நியமங்களில்லை
நின்நினைவன்றி ஒன்றுமில்லை
ஆயிரம் பிழைகள் தனதடியவர் புரிந்தாலும்
ஆதரித்தருளும் அரசே
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே

பரிகாரம்:
● வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வார்ச்சனை
● தேய்பிறை அஷ்டமி நாளில் காலபைரவர் வழிபாடு
● சனிக்கிழமையில் ஐயப்பனுக்கு நெய்தீபம்.

 
மேலும் சனிப்பெயர்ச்சி பலன்!(19.12.2017 முதல் 20.12.2020 வரை) »
temple
நல்லவர் நட்பை விரும்பி ஏற்கும் மேஷ ராசி அன்பர்களே!சனிபகவான் எட்டாமிடத்தில் இருந்து இடர்பாடுகளை ... மேலும்
 
temple
உற்சாகத்துடன் செயலாற்ற விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே!உங்கள் ராசிக்கு 7-ல் இருந்த சனி, குடும்பத்தில் ... மேலும்
 
temple
கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதி மிக்க கடக ராசி அன்பர்களே!சனி பகவான் உங்கள் ராசிக்கு  5-ம் ... மேலும்
 
temple
மனதில் துணிவும், செயலில் உறுதியும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே! சனிபகவான் 4-ம் இடத்தில் இருந்து ... மேலும்
 
temple
நீதிவழி தவறாமல் நடக்க விரும்பும் கன்னி ராசி அன்பர்களே! சனிபகவான் மூன்றாம் இடத்தில் இருந்து நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.