Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

மேஷம்: காலம் கனிந்தது கதவுகள் திறந்தது மேஷம்: காலம் கனிந்தது கதவுகள் ... மிதுனம்: காலம் மாறலாம் நம் கடமை மாறுமா மிதுனம்: காலம் மாறலாம் நம் கடமை ...
முதல் பக்கம் » சனிப்பெயர்ச்சி பலன்!(19.12.2017 முதல் 20.12.2020 வரை)
ரிஷபம் : உஷாருங்க... உஷாரு எட்டாமிடம் வராரு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2017
14:50

உற்சாகத்துடன் செயலாற்ற விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 7-ல் இருந்த சனி, குடும்பத்தில் பிரச்னையை கொடுத்திருப்பார். தம்பதியிடையே கருத்து வேறுபாடு உருவாகியிருக்கலாம். தீயோர் சேர்க்கையால் அவப்பெயர்,  பண விரயத்தை சந்தித்திருக்கலாம்.  இப்போது சனி 8-ம் இடத்திற்கு செல்கிறார். அஷ்டமத்து சனியால் முயற்சியில் தடை ஏற்படும்.  

உறவினர் வகையில் கருத்து வேறுபாடும் ஏற்படும்.  சிலர் ஊர் விட்டு, ஊர் செல்லும் நிலை உருவாகும்.-   எதிலும் உஷாராக இருந்தால் பிரச்னை குறையும்.   

2018 ஜனவரி – 2019 பிப்ரவரி குருபகவான் 2018 பிப். 14-ல் 7-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். மனதில் பக்தி உயர்வு மேம்படும்.  ஆடம்பர வசதி பெருகும். எடுத்த முயற்சி வெற்றி அடையும்.  

சுபநிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடந்தேறும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். புத்தாடை, அணிகலன் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகையும்  அவர்களால்
நன்மையும் கிடைக்கும். குருபகவானின்  5ம் இடத்து பார்வை மூலம் நற்பலன் உண்டாகும். கேதுவால்  சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு. பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். ராகுவால் தொழிலில் வளர்ச்சி உண்டாகும். பகைவர் சதியை, சாதுர்யத்தால் வெல்லும் திறமை பெறுவீர்கள். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பணியாளர்களுக்கு 2018 பிப்.14க்கு பிறகு பணியிடத்தில் செல்வாக்கு உயரும். சிலர் அதிர்ஷ்ட வசமாக பதவி உயர்வு காண்பர்.  மேலதிகாரிகளின் ஆதரவு  இருக்கும். வேலை நிமித் தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவர். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.   2018 ஏப்.9- முதல் செப்.3- வரை வேலைப் பளுவும், அலைச் சலும் அதிகமாக இருக்கும்.  கோரிக்கைகள் நிறைவேறுவதில் தாமதம் ஆகலாம். உங்கள் பணியை மற்றவரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது.

கலைஞர்களுக்கு ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்கும். சிலருக்கு அரசிடம் இருந்து விருது கிடைக்க வாய்ப்புண்டு. 2018 ஏப். 9- முதல் 2018 செப்.3- வரை புதிய ஒப்பந்தம் பெற  விடாமுயற்சி எடுக்க வேண்டியது இருக்கும்.   அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர்.  

மாணவர்களுக்கு குரு சிறப்பாக இருப்பதால் கல்வி வளர்ச்சி உண்டாகும். ஆசிரியர்களின் அறிவுரை நல்வழி காட்டும்.   2018 ஏப்.9- முதல் 2018 செப்.3- வரை அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கப் பெறுவர். கால்நடை மூலம் அவ்வளவாக வருமானம் கிடைக்காது. வழக்கு விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம். பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.   உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

2019 மார்ச் – 2020 மார்ச் கணவன், -மனைவி இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்படலாம்.  ஒருவருக்கொருவர் பொறுமையுடன் விட்டுக் கொடுப்பது நல்லது.  2019 மார்ச் 10-ல் குருபகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார். அவரால்  மன வேதனையும், நிலையற்ற தன்மையும் ஏற்படலாம். வீண் விரோதத்தை உருவாக்குவார். 2019 மே 19- முதல் அக். 27-வரை வக்ரம் அடைந்து 7-ம் இடத்தில் இருப்பதால் அவரால் நன்மை அதிகரிக்கும். இந்த காலத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சுப நிகழ்ச்சி திட்டமிட்டபடி நிறைவேறும்.  சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

தொழில், வியாபார விஷயமாக சிலர் வெளிநாடு செல்ல நேரிடும். சிலர் வியாபாரத்தை ஊர்விட்டு ஊர் மாற்றும் நிலை ஏற்படலாம். எதிரிகளின் இடையூறு குறுக்கிடும் என்பதால் அவர்களின் வகையில் ஒரு கண் இருப்பது நல்லது.  புதிய முதலீடு விஷயத்தில் கவனம் தேவை. குருவக்ர காலத்தில் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.  சிலருக்கு திடீர் பணி, இடமாற்றத்திற்கு ஆளாவர். இதனால் தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும். 2019 மே 19- முதல் அக்.27- வரை திருப்திகரமான நிலையில் இருப்பர். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.  அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் விடாமுயற்சியால் கையெழுத்தாகும். அரசியல் வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.  மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. 2019 மே 19- முதல் அக். 27 வரை  குருவின் பலத்தால் நல்ல முன்னேற்றம் காணலாம். போட்டி பந்தயத்தில் பங்கேற்று வெற்றி காண்பர். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும்.

விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும்.  கால்நடைகள்  வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் இல்லை. வழக்கு விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும்.  

பெண்களுக்கு குடும்பத்தில் பொறுமையுடன்  விட்டுக் கொடுத்து போகவும். 2019 மே 19- முதல் அக். 27- வரை  குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். அண்டை வீட்டார் அனுகூலமாக செயல்படுவர்.  சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும்.  கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.  வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர்.  உஷ்ணம், தோல் தொடர்பான நோய் வரலாம். லேசான பாதிப்பு வந்தாலும் உடனே சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

2020 ஏப்ரல் –  டிசம்பர் 2020 ஆக. 31-ல் கேது, தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்திற்கு மாறுகிறார். அவரால் அலைச்சல் ஏற்படலாம்.  மனைவி வகையில் தொல்லை வரலாம்.  உடல் நலம் சுமாராக இருக்கும்.  ராகு, மிதுனத்தில் இருந்து உங்கள் ராசிக்கு மாறுகிறார். இந்த இடமும்  சாதகமானது அல்ல என்பதால் உடல் நலம் பாதிக்கப்படலாம். உறவினர் வகையில் வீண் மனக்கசப்பு வரலாம். நெருப்பு தொடர்பான பணியாளர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.

தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். 2020 ஜூலை 7- முதல் அக்.14 வரை எதிரிகளின் இடையூறு எப்போதும் தலைதுாக்கலாம். விழிப்புடன் இருப்பது நல்லது.  குடும்ப பிரச்னையை மறந்து, தொழிலை அக்கறையுடன் செய்வது அவசியம். பணியாளர்களுக்கு மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் உறுதுணையாக செயல்படுவர். வேலை இன்றி இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் பணி கிடைக்கும்.
கலைஞர்கள் எதிர்பார்த்த ஒப்பந்தம்  கிடைக்கப் பெறுவர்.  அரசியல்வாதிகள், எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதமாகலாம்.

மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவர்.  விளையாட்டு போட்டிகளில் பங்கே ற்று வெற்றி காண்பர்.  விவசாயிகள் நல்ல மகசூல் பெறுவர். பெண்கள்  குழந்தைகளால் பெருமை காண்பர்.  

பரிகாரப்பாடல்:
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை.
மண்ணுல கத்தினில் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்.

பரிகாரம்:
● சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
● கார்த்திகையன்று முருகனுக்கு பாலாபிஷேகம்
● பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு அர்ச்சனை.

 
மேலும் சனிப்பெயர்ச்சி பலன்!(19.12.2017 முதல் 20.12.2020 வரை) »
temple
நல்லவர் நட்பை விரும்பி ஏற்கும் மேஷ ராசி அன்பர்களே!சனிபகவான் எட்டாமிடத்தில் இருந்து இடர்பாடுகளை ... மேலும்
 
temple
மதிநுட்பத்தால் வாழ்வில் சாதிக்க விரும்பும் மிதுன ராசி அன்பர்களே! சனி பகவான் இது வரை உங்கள் ராசிக்கு ... மேலும்
 
temple
கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதி மிக்க கடக ராசி அன்பர்களே!சனி பகவான் உங்கள் ராசிக்கு  5-ம் ... மேலும்
 
temple
மனதில் துணிவும், செயலில் உறுதியும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே! சனிபகவான் 4-ம் இடத்தில் இருந்து ... மேலும்
 
temple
நீதிவழி தவறாமல் நடக்க விரும்பும் கன்னி ராசி அன்பர்களே! சனிபகவான் மூன்றாம் இடத்தில் இருந்து நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.