Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) நல்ல நேரம் வந்தாச்சு கல்யாண யோகம் வந்தாச்சு (65/100) கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்): பட்டதெல்லாம் பலனாக மாறும் மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) முன்னேற்றத்தில் மனசு முழு மூச்சாய் உழைப்பு (70/100)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2016
15:43

குடும்பத்தினர் மீது பாசம் மிக்க மீன ராசி அன்பர்களே!

ராசிக்கு 7ல் இருந்து நன்மை வழங்கிய குரு பகவான் ஜன.16ல் 8-ம் இடத்திற்கு அதிசாரமாக வருகிறார். இதனால் நற்பலன் குறையும். அவரது 7-ம் இடத்து பார்வை சாதகமாக உள்ளது. இடையூறுகள் குறுக்கிட்டாலும் அதை குரு பலத்தால் முறியடித்து வெற்றிக்கு வழி காண்பீர்கள். மார்ச் 10 முதல் ஆக.31 வரை குரு வக்ரம் அடைவதால் நன்மை சற்று குறையும். சனிபகவான் 9-ம் இடத்தில் இருப்பதால் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம். சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3,7,10-ம் இடப் பார்வையால் நன்மை கிடைக்கும். ஏப்.10 முதல் ஆக.6 வரை வக்ரம் அடைவதால் கெடுபலன் தரமாட்டார். டிச.18ல் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு மாறுவதால் பெண்கள் வகையில் இடையூறு வரலாம். ராகு 6-ம் இடமான சிம்மத்தில் இருந்து நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார்.

அவரால் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும்.  கேது 12ம் இடமான கும்பத்தில் இருந்து பொருள் இழப்பை ஏற்படுத்தி இருக்கலாம். ஜூலை 26ல் 11-ம் இடமான மகரத்திற்கு பெயர்ச்சியாவதால் பணபலம் அதிகரிக்கும். உடல்நலம் சீராகும். குடும்பத்தில் மேன்மை உண்டாகும். முழு மூச்சுடன் உழைத்து வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனைக் காணலாம். புதிய முயற்சிகளை ஆண்டின் முற்பகுதியில் தொடங்குங்கள். அது வெற்றிகரமாக முடியும். ராகுவின் பலத்தால் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். முன்னேற்றத்துக்கு பெண்கள் உறுதுணையாக இருப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பெரியவர்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சுபவிஷயத்தில் தாமதம் ஏற்பட்டாலும் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். ஆகஸ்ட் மாதத்திற்குள் புது வீடு கட்டுதல், நிலம் வாங்குதல் போன்றவற்றில் ஈடுபடலாம்.

தொழில், வியாபாரம்: முயற்சிக்கேற்ப தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை மேலோங்கும். ஏப்.10 முதல் ஆக.6 வரை பொருளாதார வளம் சிறக்கும். அச்சுத்துறை, கம்ப்யூட்டர் போன்ற தொழில்கள் சிறப்படையும். பெண்கள் முன்னேற்றத்துக்கு உதவிகரமாக இருப்பர். டிச.17க்கு பிறகு விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

பணியாளர்கள்: மார்ச் முதல் ஆகஸ்ட் வரை திருப்திகரமான நிலையில் இருப்பர். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆனால் ஆண்டின் பிற்பகுதியில் நிலைமை சற்று மாறுபடும். வேலைப்பளு அதிகரிக்கும்.

கலைஞர்கள்: மார்ச் முதல் ஆகஸ்ட் வரை சிறப்பான நிலையில் இருப்பர். புகழ், பாராட்டு போன்றவை வந்து சேரும். அதன் பின் புதிய ஒப்பந்தம் பெறுவதில் விடாமுயற்சி தேவைப்படும்.

அரசியல்வாதிகள்: பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். அதே நேரம் கவுரவத்திற்கு குறைவிருக்காது. ஜூலை 26க்கு பிறகு பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும்.

மாணவர்கள்: உழைப்புக்கு ஏற்ற பலனைக் காணலாம். குருவின் பார்வையால் சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். மார்ச் முதல் ஆகஸ்ட் வரை கல்வியில் சிறப்படைவர். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும்.

விவசாயிகள்: உழைப்பை விட சற்று குறைந்த வருமானம் கிடைக்கும். அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத் தவிர்க்கலாம். ஆண்டின் பிற்பகுதியில் நெல், கேழ்வரகு, சோளம், கோதுமை, மஞ்சள் மற்றும் மானாவாரி போன்ற பயிர்கள் மூலம் நல்ல மகசூலைக் காணலாம். ஜூலை 26க்கு பிறகு புதிய சொத்து வாங்குவதற்கான காலம் கனிந்து வரும்.

பெண்கள்: குடும்பத்தை பொறுத்தவரை விட்டு கொடுத்து போவது நல்லது. மார்ச் மாதத்திற்கு பின் நிலைமை சீராகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி கைகூடும். வேலைக்குச் செல்லும் பெண்கள் செல்வாக்கோடு இருப்பர். ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பணிச்சுமையைச் சந்திக்க நேரிடும். ஜூலை 26க்கு பிறகு பணியிடத்தில் சுதந்திரமாகச் செயல்படுவர். புதிய பதவி தேடி வரும்.

செல்ல வேண்டிய கோவில்: திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில்.

பரிகாரம்: சனிக்கிழமையில் பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சாத்தி வணங்குங்கள். மாணவர்களின் படிப்புச் செலவுக்கு உதவுங்கள். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுங்கள். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை தரிசியுங்கள்.

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020 »
temple
பொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே!

இந்த ஆண்டு குரு, ராகு சாதகமாக உள்ள நிலையில் புத்தாண்டு ... மேலும்
 
temple
நல்லவர் நட்பை விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே!

புத்தாண்டின் தொடக்கத்தில் குருவின் ... மேலும்
 
temple
மதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே!

உங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் ... மேலும்
 
temple
உழைப்பால் உயர்ந்திடும் கடக ராசி அன்பர்களே!

சனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் ... மேலும்
 
temple
மன உறுதியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!

இந்த ஆண்டு 11ம் இடத்தில் உள்ள ராகுவும், 5ம் இடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.