Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) வசந்தகாலம் பிறக்கிறது வளர்ச்சிக்கதவு திறக்கிறது (70/100) விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) நீங்க தான் ‘பாஸ்’ உங்களுக்கே ‘மாஸ்’ (85/100) மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) தங்க தாம்பாளத்தில் தாங்கப் போகிறார் குரு (65/100)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2016
15:39

ஆன்மிக விஷயங்களில்  ஈடுபாடு கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

இந்த ஆண்டு உங்களுக்கு வளர்ச்சியான ஆண்டாக அமையும். ஜன.16ல் குரு பகவான் 11ம் இடமான துலாம் ராசிக்கு அதிசாரமாக மாறுகிறார்.  குருவால் முயற்சியில் வெற்றி, பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். லாப ஸ்தானத்தில் குரு இருப்பதால் தங்க தாம்பாளத்தில் தாங்கப் போகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.  மார்ச் 10 முதல் ஆக.31 வரை குரு வக்ரம் அடையும் காலத்தில் நற்பலன் குறையும். ராகு 9-ம் இடமான சிம்மத்தில் இருப்பதால்  பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலைக்கு  தள்ளப்பட்டிருப்பீர்கள். ஜூலை 26ல்  ராகு 8-ம் இடமான கடகத்திற்கு வருகிறார். கேது  ராசிக்கு 3-ம் இடமான கும்பத்தில் இருந்து  நன்மை அளித்துக் கொண்டிருக்கிறார். பொருளாதார வளம் சிறக்கும். ஜூலை 26ல்  கேது இடம் மாறி 2-ம் இடமான மகரத்திற்கு வருகிறார்.

இதனால் அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. சனிபகவான்  ராசிக்கு 12-ம் இடத்தில் இருக்கிறார். ஏழரை சனி காலம் என்றாலும்  சனியின் 7-ம் இடத்துப்பார்வை மூலம்  பொருளாதார வளம் சிறக்கும். மறைமுக எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும்.  மார்ச் 10 முதல் ஆக.31 வரை வக்ரம் அடைவதால் நன்மை, தீமை கலந்தே இருக்கும். அவர் டிச.18ல்  விருச்சிகத்தில் இருந்து உங்கள் ராசிக்கு மாறுகிறார். மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனைக் காணலாம். குடும்பத்தில் உங்களுக்கு  சாதகமான சூழ்நிலை அமையும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். புதிய வீடு, மனை வாங்கலாம். சிலர் வசதியான வீட்டிற்கு குடிபோகும் வாய்ப்பு கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி திட்டமிட்டபடி  நடந்தேறும். அதுவும் நல்ல வரனாக அமையும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் பெறுவர். ஆண்டின் முற்பகுதியில் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். சனியும், ராகுவும் சாதகமற்று  இருப்பதால் ஜூலை26க்கு பிறகு  தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு வரலாம்.
    
தொழில், வியாபாரம்: குருவால் லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை மேம்படும். இயந்திர தொடர்பான தொழில், நல்ல வளர்ச்சி அடையும். அரசிடம் இருந்து உதவி கிடைக்கும்.  ஏப்.10  முதல் ஆக.6  வரை சனி வக்ரம் அடைவதால் நன்மை அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சியை ஆண்டின் முற்பகுதியில்  தொடங்குவது நல்லது. போட்டியாளர்கள் மீது ஒரு கண் இருப்பது நல்லது.

பணியாளர்கள்: சிறப்பான முன்னேற்றம் காணலாம். வேலையில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.  சிலருக்கு  பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. வேலையை இழந்தவர்கள் மீண்டும் நல்ல வேலை கிடைக்கப்பெறுவர். மார்ச் முதல் ஆகஸ்ட் வரை  அலைச்சல், பணிச்சுமையைத் தவிர்க்க முடியாது. நெருப்பு தொடர்பான பணியாளர்கள் கவனமாக இருப்பது நல்லது.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் தங்கு தடையின்றி கிடைக்கும். பாராட்டு, விருது போன்றவை வந்து சேரும். மார்ச் முதல் ஆகஸ்ட் வரை விடாமுயற்சியும், உழைப்பும் தேவைப்படும்.

அரசியல்வாதிகள்: சமூகத்தில் அந்தஸ்து கிடைக்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர். ஜூலை 26க்கு பிறகு சுமாரான பலன் கிடைக்கும்.

மாணவர்கள்: கல்வியில் நல்ல வளர்ச்சி காண்பர்.  போட்டி, பந்தயத்தில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் நட்பு, ஆசிரியர்களின் அறிவுரை  வளர்ச்சிக்கு துணைநிற்கும். பிப்ரவரி முதல் ஜூலை வரை படிப்பில் அக்கறை தேவை. ஆனால் குரு பார்வையால் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது.

விவசாயிகள்: நல்ல வளர்ச்சி காண்பர். நெல், சோளம், கேழ்வரகு, எள், பனை போன்ற பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும். மார்ச், ஏப்ரல் மாதத்தில் புதிய சொத்து வாங்கலாம். சிலர் நவீன முறையில் விவசாயம் செய்து கூடுதல் வருவாயைக் காணலாம். வழக்கில்  தீர்ப்பு சாதகமாக அமையும்.

பெண்கள்: குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர். புதிய ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.

செல்ல வேண்டிய கோவில்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்.

பரிகாரம்: சனிக்கிழமை சனீஸ்வரருக்கு  அர்ச்சனை செய்யுங்கள். விநாயகர், ஆஞ்சநேயர் வழிபாடு தடைகளை தகர்க்கும்.   ஏழை மாணவர்களின் கல்விச் செலவுக்கு உதவி செய்யுங்கள். ஞாயிறு ராகு காலத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். பிரதோஷத்தன்று  நந்தீஸ்வரரை தரிசியுங்கள்.

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020 »
temple
பொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே! இந்த ஆண்டு குரு, ராகு சாதகமாக உள்ள நிலையில் புத்தாண்டு ... மேலும்
 
temple
நல்லவர் நட்பை விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே! புத்தாண்டின் தொடக்கத்தில் குருவின் பார்வையால் நன்மைகள் ... மேலும்
 
temple
மதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே! உங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் நிலையில் ... மேலும்
 
temple
உழைப்பால் உயர்ந்திடும் கடக ராசி அன்பர்களே!சனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் ... மேலும்
 
temple
மன உறுதியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!இந்த ஆண்டு 11ம் இடத்தில் உள்ள ராகுவும், 5ம் இடத்தில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.