Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குருபகவான் பார்க்கிறார் குறையனைத்தும் தீர்க்கிறார் (65/100) ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பேர் சொல்லும் பிள்ளை ஊர் போற்றும் நாளை! (70/100) கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) ஹேப்பி...ஹேப்பி! இந்த வருஷம் ஹேப்பி! (80/100)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2016
15:27

இனிமையாகப் பேசிப் பழகும் மிதுன ராசி அன்பர்களே!

உங்கள் ராசி நாயகன் புதன் சாதகமாக இருக்கும் நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. சாதுர்யமாகப் பேசி எதிலும் சாதனை புரிவீர்கள். ‘ஹேப்பி... இந்த வருஷம் ஹேப்பி’ என்று பாடி மகிழும் விதத்தில் இந்த புத்தாண்டு அமைந்திருக்கும். உங்கள் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக குருபகவான் இருக்கிறார். ஜன.16ல் அதிசாரமாக துலாம் ராசிக்கு மாறுகிறார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். மார்ச் 10 முதல் ஆக.31 வரை வக்ரம் அடைகிறார். இந்த கால கட்டத்தில் அவரால் கிடைக்கும் நற்பலன் சற்று குறையலாம். ராகு ராசிக்கு 3-ம் இடமான சிம்மத்தில் இருந்து நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். செயலில் வெற்றியும், தொழிலில் அதிக ஆதாயமும் அளித்திருக்கலாம். ஆனால், ராகு ஜூலை26ல் 2-ம் இடமான கடகத்திற்கு மாறுகிறார். இதன் பின் குடும்பத்தில் கருத்துவேறுபாடு தலைதுõக்கலாம். கேது 9-ம் இடமான கும்பத்தில் இருந்து பொருள் இழப்பு அளித்திருக்கலாம். அவர் ஜூலை 26ல் 8-ம் இடத்திற்கு மகரத்திற்கு மாறுவதன் மூலம் நிலைமை சீராகும். சனிபகவான் தற்போது 6-ம் இடமான விருச்சிகத்தில் இருப்பதால் நல்ல பணப்புழக்கம், தொழில் வளர்ச்சி உண்டாகும். சனிபகவான் ஏப்.10 முதல் ஆக.6 வரை வக்ரம் அடைவதால் நற்பலன் சற்று குறையலாம். அவர் டிச.18ல் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனைக் காணலாம். ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதார வளம் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ஆடம்பரச் செலவு செய்வீர்கள்.  விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறும். ஜூலை25க்கு பிறகு ராகுவால், கணவன், மனைவிக்குள் கருத்துவேறுபாடு உருவாகலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.

தொழில், வியாபாரம்: நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். அமோக லாபம் உண்டாகும். சிலர் தொழில் விஷயமாக வெளியூர், வெளி நாடு சென்று ஆதாயத்துடன் திரும்புவர்.
கூட்டாளிகள் இடையே ஒற்றுமை மேலோங்கும். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை
நற்பலன் சற்று குறையும்.

பணியாளர்கள்: ஆண்டின் தொடக்கத்தில் குருவின் பலத்தால் நன்மையைக் காணலாம். பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பர்.
சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆனால் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை வேலைப்பளு அதிகரிக்கும். கோரிக்கை நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கப் பெறுவர். ரசிகர்களின் மத்தியில் மதிப்பு உயரும். அரசிடமிருந்து விருது, பட்டம் கிடைக்கும். தொழில்ரீதியான பயணம் மூலம் இனிய அனுபவம் உண்டாகும்.

அரசியல்வாதிகள்: எதிர்பார்த்த புதிய பதவி கிடைக்கப் பெறுவர். மார்ச் 10க்கு பிறகு
விடாமுயற்சி தேவைப்படும். ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பணப்புழக்கம் அதிகரிக்கும்.       
மாணவர்கள்: கல்வி வளர்ச்சிக்கான சூழல் அமையும். தேர்வில் தரத்தேர்ச்சியும், நல்ல மதிப்பெண்களும் பெறலாம். ஆனால் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ஜூன், ஜூலை புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் நன்மை எதிர்பார்க்கலாம். விளையாட்டு போட்டியிலும் பங்கேற்று வெற்றி காண்பர்.

விவசாயிகள்: ஆண்டின் முற்பகுதியில் நற்பலனைக் காணலாம். நெல், கேழ்வரகு, பழ வகைகள், சோளம் போன்றவற்றின் மூலம் சிறப்பான மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். ஜூலை 25க்கு பிறகு தொழிலில் அக்கறை அவசியம்.

பெண்கள்: சந்தோஷ வாழ்வு நடத்துவீர்கள். அக்கம்பக்கத்தினர் மத்தியில் செல்வாக்கு உயரும். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்று மகிழ்வீர்கள். கணவன் மற்றும்
குழந்தைகளுடன் புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஜூலை 25க்கு பிறகு குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.

செல்ல வேண்டிய கோவில்: மதுரை மீனாட்சியம்மன் கோவில்.

பரிகாரம்: காளியம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி பூஜை செய்யவும். சனியன்று பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுங்கள். ராகுகாலத்தில் பைரவரை வணங்குங்கள். பசுவிற்கு புல், கீரை உணவு கொடுங்கள். ஏழைக் குழந்தைகள் படிக்க இயன்ற உதவி செய்யுங்கள்.

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020 »
temple
பொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே! இந்த ஆண்டு குரு, ராகு சாதகமாக உள்ள நிலையில் புத்தாண்டு ... மேலும்
 
temple
நல்லவர் நட்பை விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே! புத்தாண்டின் தொடக்கத்தில் குருவின் பார்வையால் நன்மைகள் ... மேலும்
 
temple
மதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே! உங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் நிலையில் ... மேலும்
 
temple
உழைப்பால் உயர்ந்திடும் கடக ராசி அன்பர்களே!சனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் ... மேலும்
 
temple
மன உறுதியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!இந்த ஆண்டு 11ம் இடத்தில் உள்ள ராகுவும், 5ம் இடத்தில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.