Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) + ஜூலைக்குள் சாதனை - ஆகஸ்ட் முதல் சோதனை! (100/55) கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) கை நிறைய காசு (60/100) மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2019
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) + அமோக லாபம் - எதிரி தொல்லை! (100/60)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2015
14:17

வெள்ளை உள்ளம் படைத்த மீன ராசி அன்பர்களே!

கடந்த ஆண்டு நீங்கள் எண்ணற்ற பிரச்னைகளை சந்தித்து இருக்கலாம். அதற்கு காரணம் முக்கிய கிரகங்கள் அனைத்தும் சாதகமாக இல்லாததே. புத்தாண்டில் இந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் காண்பீர்கள். குருபகவான் 7-ம் இடத்தில் இருப்பது உயர்வான நிலை. அவரின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி நடந்தேறும். மக்கள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் உயர்வதால் தேவைகள் பூர்த்தியாகும். பிப். 7 முதல் ஆக. 1வரை குரு வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவரால் நன்மை பெற இயலாது சனிபகவான் 9-ம் இடத்தில் இருக்கிறார். அவரால் எதிரிகளின் இடையூறு தலைதுõக்கும், பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். சனிபகவான் சாதகமற்று இருந்தாலும் அவரது பார்வை பலத்தால் நன்மை கிடைக்கும். சனிபகவான் மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை வக்கிரத்தில் சிக்குகிறார். இந்த காலத்தில் கெடுபலன் தர மாட்டார்.

ராகு ஜன. 8ல் 6-ம் இடமான சிம்மத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம். அவர் முன்னேற்றத்துக்கு வழி வகுப்பார். கேது ஜன. 8ல் உங்கள் ராசிக்கு 12-ம் இடமான கும்பத்திற்கு செல்கிறார். இவரால் பொருள் விரயம் ஏற்படலாம். உடல் உபாதை உருவாகலாம். குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் அடிப்படையில் பொதுவான பலனைக் காணலாம். பொருளாதாரம் அதிகரிக்கும். எடுத்த முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சமூகத்தில் கவுரவம் மேம்படும். உங்களை சுற்றி இருப்பவர்கள் ஓகோ என்று உங்களை புகழ்வார்கள். ஆனால் பிப்ரவரி முதல் ஜூலை வரை தானத்துடன் செயல்படவும். வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம். தடைபட்டு வந்த திருமணம் ஜூலை மாதத்திற்கு பிறகு கைகூடும். புதிய வீடு சொத்து போன்றவை வாங்கலாம். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
குடும்பத்தோடு புண்ணிய தலங்களுக்கு சென்று வரலாம்.

தொழில், வியாபாரம்: கடந்த காலத்தில் செய்த உழைப்பிற்கான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் அமோக லாபம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுப்படுத்த ஜூலை மாதத்திற்கு பிறகு நல்ல காலம். வேலை இன்றி இருப்பவர்கள் புதிய தொழிலை துணிந்து தொடங்கலாம். தொழில் ரீதியான வெளியூர் பயணத்தால் வருமானம் உயரும் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு துணை நிற்கும். எதிரிகளின் இடையூறு குறுக்கிட்டாலும்,  சாதுர்யமாக சமாளித்து விடுவீர்கள்.

பணியாளர்கள்: பணியாளர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். கடந்த காலங்களில் இருந்த பிற்போக்கான நிலை மாறும். பணியில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உங்களை புரிந்து கொள்ளாமல் விலகியவர் கூட தங்களின் தவறை உணர்ந்து கொள்வர். பணியில் திறமையை வெளிப்படுத்தி பதவி உயர்வு பெறுவீர்கள். ஜூலை மாதத்திற்கு பிறகு மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கப் பெறுவர். திறமையை வெளிப்படுத்தி நற்பெயர் பெறுவீர்கள். பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், வக்கீல் தொழில் புரிவோர் சிறந்த நிலையிலேயே இருப்பர்.

கலைஞர்கள்: கடந்த காலத்தில் இருந்த பின்தங்கிய நிலை மாறும். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவீர்கள். பிப்ரவரி முதல் ஜூலை வரை பொறுமையாக இருப்பது நல்லது. அதன் பிறகு வருமானம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் வளர்ச்சிப்பாதையில் செல்வர். தலைமையின் ஆதரவால் சிலர் புதிய பதவி கிடைக்கப் பெறுவர்.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். தேர்வில் மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பை பெறுவர்.

விவசாயிகள்:  நெல், கோதுமை, கேழ்வரகு, கடலை மற்றும் மானாவாரி பயிர்களில் மகசூல் அதிகரிக்கும். நவீன விவசாயத்தை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பர். கால்நடை வளர்ப்பின் மூலம் அதிக லாபம் கிடைக்கும். கூலி வேலை செய்பவர்கள் சுய தொழிலில் இறங்கும் காலம் உருவாகும்.

பெண்கள்: பெண்கள் திருப்திகரமாக இருப்பர். வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கும். உறவினர் மத்தியில் கவுரவம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.

பரிகாரம்: நவக்கிரகங்களில் சனி, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனியன்று ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.  ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடத்துவது நன்மை தரும். சன்னியாசிகளுக்கும் இயன்ற உதவி செய்யலாம். பிப்ரவரி முதல் ஜூலை வரை வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

செல்ல வேண்டிய கோவில்
: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2019 »
temple
குடும்பத்தினர் மீது பாசம் மிக்க மேஷ ராசி அன்பர்களே!

நட்புக்கிரகமான  சுக்கிரன் சாதகமாக இருக்கும் ... மேலும்
 
temple
கலை ரசனையுடன் செயல்பட்டு வரும் ரிஷப ராசி அன்பர்களே!

ராசிக்கு நட்பு கிரகமான குருபகவான் நன்மை தரும் ... மேலும்
 
temple
அனைவரிடமும் இதமாக பேசி பழகும் மிதுன ராசி அன்பர்களே

இந்த ஆண்டு தொடக்கம் சற்று சுமாராகவே இருக்கும். ... மேலும்
 
temple
மனஉறுதியுடன்  செயல்பட்டு வெற்றி காணும் கடக ராசி அன்பர்களே!

சந்திரனை ஆட்சி நாயகனாக கொண்ட ... மேலும்
 
temple
திறமையால் பிறரைக் கவரும் சிம்ம ராசி அன்பர்களே!

ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கும் கேதுவால் செயலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.