Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) 70 /100 மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) + வீடும் காரும் ரெடி- வேண்டாதவர்கள் அடாவடி! (100/70) ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) + பணத்தால் மகிழ்ச்சி-உறவினரால் பிரச்னை! (100/65)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2015
14:02

அமைதியான குணம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

நீங்கள் எதிலும் மதியை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். முக்கிய கிரகங்களில் குருபகவான் தற்போது உங்கள் ராசிக்கு 6-ம் இடமான கன்னியில் உள்ளார். அவரால் மனதில் தளர்ச்சி என்றாலும், அதுபற்றி கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில், அவரது 9-ம் இடத்துப் பார்வையால் நன்மைகள் கிடைக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். மேலும் பிப். 7 முதல் ஆக. 1 வரை அவர் வக்கிரம் அடைகிறார். வக்கிரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் குரு பகவான் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலன்களை தரமாட்டார். இன்னொரு முக்கிய கிரகமான சனி இப்போது 8-ம் இடத்தில் இருக்கிறார். இது அஷ்டமத்து சனி காலம். அவரால் உறவினர்கள் வகையில் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் ஏற்படும்.

சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். ஆனால், இந்த பலன்கள் அப்படியே தொடரும் என்று கவலை கொள்ள வேண்டாம். காரணம் சனிபகவான் மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவர் வக்கிரம் அடைந்தாலும் விருச்சிக ராசிக்குள்ளேயே இருக்கிறார். மேற்கண்ட கிரக நிலைகளைக் கொண்டு விரிவான பலனை காணலாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது. பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பிப்ரவரி மாதத்தில் இருந்து தெளிவான சிந்தனை, தீர்க்கமான முடிவு என்ற நிலையை எடுக்கலாம். கேதுவின் பலத்தால் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். உங்கள் முயற்சியில் ஏற்படும் தடையை குருவின் பார்வையால் தடுத்து நிறுத்தலாம். மதிப்பு,மரியாதை அதிகரிக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மார்ச் மாதத்திற்கு பிறகு மறையும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். கடந்த சில மாதங்களாக தடை பட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் பிப். 7க்குப் பிறகு கைகூடும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே அவர்கள் வகையில் அதிக நெருக்கம் வேண்டாம்.

தொழில், வியாபாரம்: தொழிலதிபர்கள், வியாபாரிகள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். தானிய வியாபாரம் சிறப்பாக இருக்கும். ராகுவால் போட்டியாளர்களின் இடையூறு அவ்வப்போது தலைதுõக்கலாம். ஆனால், குருவின் பார்வையால் எந்த தடையையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் அடைவீர்கள்.

பணியாளர்கள்: ஆண்டின் தொடக்கத்தில் வேலைப்பளு இருக்கத்தான் செய்யும். அலைச்சல் ஏற்படும்.
பிப்ரவரி மாதத்தில் இருந்து மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும்.

கலைஞர்கள்: உங்கள் திறைமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். ஜூலை மாதத்திற்கு பிறகு
எதிலும்  சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டி வரும்.

அரசியல்வாதிகள்: எதிர்பார்த்த பதவி கிடைக்க  முயற்சி ஏதவை. பணப்புழக்கத்தில் எந்த குறையில்லை.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். ஆனால், அடுத்த கல்வி ஆண்டு சிறப்பானதாக அமையும்.

விவசாயிகள்: நவீன வேளாண்மையை கையாண்டு நல்ல வருவாய் பெறுவீர்கள். கரும்பு, எள். பனை , பயறு மற்றும் மானாவாரி பயிர்களில் ஜூலை மாதம் வரை நல்ல மகசூல் கிடைக்கும். ஜூலைக்கு பிறகு நெல், கோதுமை, கொண்டை கடலை போன்ற பயிர் வகைகளில் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம்.

பெண்கள்: புத்தாடை, நகை வாங்கலாம். ஜனவரி, பிப்ரவரி, டிசம்பர் மாதங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். செப்., அக்டோபர் மாதங்களில் எடுத்த காரியம் வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் தட்சணாமூர்த்தியை வழிபட்டு கடலை தானம் செய்யலாம். ராகுவும், சனியும் சிறப்பான நிலையில் இல்லாததால் பத்ரகாளியம்மன் வழிபாடு முன்னேற்றம் அடைய செய்யும்.

செல்ல வேண்டிய கோவில்: விழுப்புரம் அருகிலுள்ள பரிக்கல் நரசிம்மர் கோவில்

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020 »
temple
பொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே! இந்த ஆண்டு குரு, ராகு சாதகமாக உள்ள நிலையில் புத்தாண்டு ... மேலும்
 
temple
நல்லவர் நட்பை விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே! புத்தாண்டின் தொடக்கத்தில் குருவின் பார்வையால் நன்மைகள் ... மேலும்
 
temple
மதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே! உங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் நிலையில் ... மேலும்
 
temple
உழைப்பால் உயர்ந்திடும் கடக ராசி அன்பர்களே!சனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் ... மேலும்
 
temple
மன உறுதியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!இந்த ஆண்டு 11ம் இடத்தில் உள்ள ராகுவும், 5ம் இடத்தில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.