Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) 60/100 கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) + பணத்தால் மகிழ்ச்சி-உறவினரால் பிரச்னை! (100/65) மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) 70 /100
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 டிச
2014
12:50

எங்கள் வீட்டில்எல்லா நாளும்நியூ இயர்!

குருவை ஆட்சி நாயகனாகக் கொண்ட மீன ராசி அன்பர்களே!

பெரியவர்கள் மீது மரியாதை செலுத்துவதில் உங்களுக்கு நிகர் நீங்களே. உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்துவதில் சாமர்த்தியசாலியாக விளங்குவீர்கள். சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மாத கிரகங்கள் சாதகமான நிலையில் இந்த புத்தாண்டு மலர்கிறது. இப்போது குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருக்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை. இந்த இடத்தில் குரு பகவான் இருக்கும்போது குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். திட்டமிட்டுச் செயல்பட்டு வாழ்வில் சாதனை புரிவீர்கள். பண வரவையும், வாழ்க்கை வளத்தையும், சுபங்களையும் தருவார். இது தவிர குருவின் 5-ம் இடத்துப்பார்வையும், 7-ம் இடத்துப் பார்வையும் சாதகமாக அமைந்துள்ளது. இதனால் எங்கள் வீட்டில் எல்லாநாளுமே புத்தாண்டு தான் என்று மகிழ்வீர்கள்.  சனி பகவான் விருச்சிக ராசியில் உள்ளார். இதனால். உங்கள் முயற்சிகளில் தடங்கல் குறுக்கிடலாம். மறைமுக எதிரிகளின் இடையூறு தலைதூக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலையும் கூட உருவாகும். அதேநேரம், அவரது 3,7,10 பார்வைகளால் சிறப்பான பலன்கள் உங்களுக்கு காத்திருக்கிறது.

நிழல் கிரகமான ராகு 7-ம் இடத்தில் இருக்கிறார். அங்கு அவர் குடும்பத்தில் சில பிரச்னைகளை உருவாக்குவார். வீண் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், பணி ரீதியாக சிலருக்கு வெளியூரில் தங்கும் சூழ்நிலை உருவாகும். இன்னொரு நிழல் கிரகமான கேது உங்கள் ராசியிலேயே இருக்கிறார். இதனாலும் விடாமுயற்சியால் மட்டுமே வெற்றிகளைப் பெறலாம். பகைவர்களின் தொல்லை அவ்வப்போது குறுக்கிடும். உடல் நலம் பாதிக்கப்படலாம். மருத்துவச் செலவைத் தவிர்க்க முடியாது. உணவு விஷயத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. இந்த கிரக நிலைகளின் அடிப்படையில், ஆண்டு முழுவதற்குமான விரிவான பலனைக் காணலாம்.பொருளாதார வளம் இருக்கும். வருமானத்திற்கான புதிய வழிவகை உருவாகும். எடுத்த செயல்கள் தங்கு தடையின்றி நிறைவேறும். குருபகவான் ஜூலை 6ல் சிம்மத்திற்கு மாறுகிறார். இது சாதகமாக அமையவில்லை. அதற்காக கவலை கொள்ள வேண்டாம். குருபகவானின் 9-ம் இடத்துப்பார்வை சாதகமான சூழலை ஏற்படுத்தும். பொருளாதார வளம் சிறக்கும். அதே சமயத்தில் திடீர் செலவும் உருவாகும். உங்கள் செயல்களில் ஏற்படும் தடைகளை தீவிரமுயற்சி எடுத்தால் எதையும் சிறப்பாக முடிக்க முடியும். மதிப்பு, மரியாதை சுமாராகத்தான் இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பம்பணப்புழக்கம் அதிகரிக்கும். ராகுவால் கணவன்-மனைவி இடையே சிற்சில பிரச்னை குறுக்கிடலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். வீண் அலைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூரில் தங்கும் சூழ்நிலை உருவாகும். தீயவர்களின் சேர்க்கை சகவாசத்தால் சிரமம்உருவாகலாம். ஜூன் மாதத்திற்கு பிறகு அதிக முயற்சி எடுத்தால் புதிய வீடு கட்டலாம். ஆனால் அதற்காக கடன் பெற அலைய வேண்டியிருக்கும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதாக நிறைவேறும். புதுமணத் தம்பதியருக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினரின் பாராட்டைப் பெற்று மகிழ்வீர்கள்.  

தொழில், வியாபாரம்எதிர்கால முன்னேற்றத்துக்கான அடித்தளம் அமைப்பீர்கள். புதிய தொழில் முயற்சி ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். அதிக பணத்தை முதலீடு செய்வதை விட உழைப்பின் மூலம் வருவாயை தேடுவது நல்லது. சிலர் தொழில் காரணமாக இருப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் உருவாகும். ஜூன் மாதத்திற்கு பிறகு லாபம் படிப்படியாக அதிகரிக்கும். அதே நேரம் நிர்வாகச் செலவும் அதிகரிக்கும். கஷ்டப்பட்டு முன்னேற வேண்டிய சூழல் உருவாகும். அரசாங்க வகையில் நன்மையேதும் கிடைக்க வாய்ப்பில்லை. வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்வது நல்லது. தொழிலாளர் ஆதரவு நல்ல முறையில் அமைந்திருக்கும். பணியாளர்கள்சீரான முன்னேற்றம் காணலாம். வேலையில் பளு இருந்தாலும் அதற்கான ஆதாயபலன் கிடைக்கும். சிலர் இழந்த பதவி மீண்டும் கிடைக்க பெறுவர். சலுகைகள் கிடைப்பதில் எந்த தடையும் ஏற்படாது. ஏப்ரல் மே, மாதங்களில் போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு வேலையில் பளு அதிகரிக்கும். சிலர் எதிர்பாராத வகையில் இடமாற்றம் காண்பர். முதலில் அது பிடிக்காததாக இருந்தாலும் போகப்போக அது உகந்ததாக அமையும். சம்பள உயர்வு வழக்கம் போல் இருக்கும். வேலை நிமித்தமாக சிலருக்கு குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரியும் நிலையும் உருவாகலாம். சக ஊழியர்களுடன் நட்புணர்வுடன் பழகி மகிழ்வீர்கள்.

கலைஞர்கள்சிரத்தை எடுத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். உங்களுக்கு வர வேண்டிய விருது தட்டி பறிக்கப்படலாம். அதே நேரம் வருமான விஷயத்தில் எந்த பின்னடைவும் இருக்காது. சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு எப்போதும் போல இருந்து வரும். தொழில்ரீதியான பயணத்தின் மூலம் இனிய அனுபவத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள்பொருளாதார வளம் இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைக்காது. அரசு அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். தலைமையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நற்பெயர் காண்பீர்கள். மாற்றுக் கட்சியினரிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டு செல்வாக்கை தக்க வைத்துக் கொள்வீர்கள்.

மாணவர்கள் இந்த கல்வியாண்டில் முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். நல்ல தேர்ச்சியும், உயர் மதிப்பெண்ணும் கிடைக்கும். விரும்பிய பாடப் பிரிவில் சேர்ந்து ஆர்வமுடன் படிப்பீர்கள். ஆனால். அடுத்த கல்வி ஆண்டில் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்க வேண்டும். எதிர்காலத்தில் விரும்பிய பாடம் கிடைக்க இந்த கல்வியாண்டில் கடுமையாகப் படியுங்கள்.

விவசாயிகள் சீராக நடக்கும். அதிக உடல் உழைப்பை சிந்த வேண்டி வரும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடுவதும் நன்மை தான். அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத் தவிர்க்கவும். மே மாதத்திற்கு பிறகு வருமானம் சற்று அதிகரிக்கும். ஏப்ரல் மே, மாதங்களில்வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். கால்நடை வளர்ப்பின் மூலம் ஓரளவு ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.

பெண்கள்பல்வேறு  முன்னேற்றமான பலனைக் காணலாம். குழந்தை பாக்கியம் பெறலாம். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். ஆகஸ்ட்,செப்டம்பர் மாதங்களில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். அக்டோபர்,நவம்பர், மாதங்களில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.  புத்தாடை, நகை விருப்பம் போல வாங்கலாம். பிள்ளைகளின் செயல்பாட்டால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.

பரிகாரப் பாடல்: உலகம் யாவையும் தாமுள வாக்கலும்நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலாஅலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களேஅருள்மறை முதல்வனை ஆழி மாயனைக்கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணனைத் திருமகள் தலைவனைத் தேவ தேவனை இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்.

பரிகாரம்: விநாயகரை வணங்கி வாருங்கள். ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு உங்கள் துயரத்தை போக்கி தைரியத்தை வரவழைக்கும். புதன்கிழமைகளில் குல தெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்.  கிருஷ்ணரை வழிபட்டு பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்க பிரச்னை நீங்கிநன்மை மேலோங்கும். வெள்ளியன்று அம்மன் கோயிலில் விளக்கேற்றி வழிபடுங்கள்.

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020 »
temple
பொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே! இந்த ஆண்டு குரு, ராகு சாதகமாக உள்ள நிலையில் புத்தாண்டு ... மேலும்
 
temple
நல்லவர் நட்பை விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே! புத்தாண்டின் தொடக்கத்தில் குருவின் பார்வையால் நன்மைகள் ... மேலும்
 
temple
மதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே! உங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் நிலையில் ... மேலும்
 
temple
உழைப்பால் உயர்ந்திடும் கடக ராசி அன்பர்களே!சனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் ... மேலும்
 
temple
மன உறுதியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!இந்த ஆண்டு 11ம் இடத்தில் உள்ள ராகுவும், 5ம் இடத்தில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.