Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) 75/100 மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) 70 /100 மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2019
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) 60/100
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 டிச
2014
12:49

கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்தங்கத்தாலி கட்டுற கல்யாணம்!

சனியை ஆட்சியாக கொண்டு இயங்கி வரும் கும்ப ராசி அன்பர்களே!

மதிப்பு, மரியாதையும், கவுரவமும் உங்கள் உடன் பிறந்தவை. இதனை விட்டு கொடுக்க மாட்டீர்கள். இந்த ஆண்டு பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருக்கும் நிலையில்தான் பிறக்கிறது. இருந்தாலும் ஆண்டின் மத்தியில் குருபகவான் சாதகமான இடத்துக்கு வருகிறார். சனி உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. தொழிலில் சிறுசிறு பின்னடைவுகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு முன்பு போல் இல்லாமல் போகலாம். உடல் உபாதைகள் லேசாக நோக செய்யலாம். குரு பகவான் ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கிறார். இது சாதகமான நிலை இல்லை. பொதுவாக 6-ம் இடத்தில் இருக்கும் குரு உடல் நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார். ஆனாலும் கவலை வேண்டாம். குருபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்து பார்வையால் உங்களுக்கு சில நன்மைகள் கிடைக்கும். இதனால் எந்த இடையூறையும் நீங்கள் முறியடித்து வெற்றி காண்பீர்கள். உங்களையும் அறியாமல் உங்கள் ஆற்றல் வெளிப்பட்டு கொண்டு இருக்கும். அதனைக் கண்டு பகைவர்களும் அஞ்சும் நிலைஉருவாகும். நிழல் கிரகமான ராகு தற்போது 8-ம் இடமான கன்னியில் இருக்கிறார். அங்கு முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பை ஏற்படுத்தலாம். இன்னொரு நிழல் கிரகமான கேது 2-ம் இடத்தில் இருக்கிறார். அங்கு பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும். வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். மேற்கண்ட கிரக நிலையின் அடிப்படையில், ஆண்டு முழுமைக்குமான பலனை காணலாம். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். ஜூன் மாதத்திற்கு பிறகு குருவால் பொருளாதார வளம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். குரு ஜூலை 6-ந் தேதி சிம்மத்திற்கு மாறுகிறார். இது சாதகமான இடம். அதோடு அவரின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். மதிப்பு மரியாதை சிறப்படையும். பொருளாதார வளம் அதிகரிக்கும். எந்த செயலையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். ஆற்றல் மேம்படும்.

வீடு-மனை வாங்கும் எண்ணம் கைகூடி வரும். ஆனால், இதற்காக சில காலம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். ஜூன் வரை அவசரம் கூடாது. பதறாத காரியம் சிதறாது என்பார்கள். இந்த இடத்தில் தான், நீங்கள் நளமகாராஜாவை மனதில் நினைக்க வேண்டும். அவர் பூஜை செய்ய கிளம்பும் முன் கால் அலம்பினார். என்ன அவசரமோ தெரியவில்லை. அரைகுறையாகக் கழுவி விட்டார். இந்த அவசரத்தின் விளைவை சனி பகவான் பயன்படுத்திக் கொண்டார். அவரது குதிகால் வழியே புகுந்து ஆக்கிரமித்துக் கொண்டார். காட்டிற்கே அவரை குடும்பத்தோடு அனுப்பி சோதித்து விட்டார். ஏன் இந்த அவசரம்? சோதனைகளைத் தடுப்பதும், அதை விலை கொடுத்து வாங்கிக் கொள்வதும் என்பதும் நமது கையில் தான் இருக்கிறது. நீங்கள் அவசரப்படாமல் இருந்து ஜூலைக்குப் பின் மனை அல்லது வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும். அவசரப்பட்டால் சட்டசிக்கலோ, பணச்சிக்கலோ வரலாம். நீங்களோ சனீஸ்வரரின் வீட்டுக்குச் சொந்தக்காரர். உங்களை அவருக்கு மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்டவர், உங்களுக்கு ஒரு இடம் வாங்கித் தராமலா போய் விடுவார்! எனவே பொன்னான இந்த ஆண்டின் பிற்பகுதி வரை பொறுமை காக்கவும். குடும்பம்ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்துவேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு உறவினர்கள் உதவுவர். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டுபோகலாம். ஜூன் மாதத்திற்கு பிறகு குதுõகலம் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே பிரச்னை மறைந்து அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். குடும்ப முன்னேற்றம் எளிதில் கைகூடும். பெற்றோர் மற்றும் உறவினர் வகையில் இருந்துவந்த கருத்து வேறுபாடு மறைந்து விடும்.

தொழில், வியாபாரம்ஓரளவு லாபம் இருக்கும். எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். இருப்பதைப் பயன்படுத்தி முன்னேற வழிகாணுங்கள். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே, கணக்கு வழக்கு விஷயங்களில் நேரடி கவனம் வைத்திருங்கள். அது தொடர்பானஆவணங்களையும் பத்திரமாக வையுங்கள். ஜூனுக்குப் பிறகு லாபம் வெகுவாக அதிகரிக்கத் துவங்கி விடும். தொழில் தொடர்பாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். இதைப் பயன்படுத்தி கிளைகளைத் துவங்கும் பணியைத் தீவிரப்படுத்தலாம். கூடுதல் முதல் போடாமல் முன்னேற வழிவகை காண்பது நல்லது. மே, ஜூன் மாதங்களில் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.
பணியாளர்கள்ஆண்டின் தொடக்கத்தில் சுமாரான நிலை இருக்கும். வேலைப்பளு கூடும். இடமாற்றம் ஏற்படலாம். ஜூன் மாதத்திற்கு பிறகு பின்தங்கிய நிலை மறையும். வேலையில் திருப்திகரமான நிலையையும், பல சிறப்பான பலன்களையும் காணலாம். வேலைப்பளு குறையும். விருப்பமான இடத்திற்கு மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு வரும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். அதிகாரிகளின் ஆதரவுடன் சிறந்த இடத்துக்கு வருவீர்கள். தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ளும் ஆவல் அதிகரிக்கும். இவற்றைத் தெரிந்து கொண்டால் எதிர்காலத்தில் அதிக சம்பளம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

கலைஞர்கள்ஆரம்பத்தில் சுமாரான நிலைதான் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஜூலைக்குப் பிறகு முன்னேற்றம் ஏற்படும்.

அரசியல்வாதிகள்எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்காது. ஆனால், ஜூன் மாதத்திற்கு பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும்.

மாணவர்கள்கடந்த கல்வி ஆண்டைபோல் மிகவும் பிற்போக்கான நிலை இருக்காது. ஆனாலும் கஷ்டப்பட்டு படிக்க வேண்டி வரும். முயற்சி எடுத்தால் தான் எதிர்பார்க்கும் மதிப்பெண்ணைப் பெற முடியும். அடுத்த கல்வி ஆண்டில் சிறப்பான பலன் காணலாம். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவதைத் தவிருங்கள். டிவியும் மொபைல் போனுமே வாழ்க்கை என நினைக்காதீர்கள். உங்கள் பெற்றோர் மகிழும் விதத்தில் மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள். முதல் ஆறு மாதங்கள் இதைக் கடைபிடித்தால், அடுத்து வரும் அட்மிஷனில் சிக்கல் இருக்காது. படிப்பை முடிப்பவர்கள் சிறந்த நிறுவனங்களில் வேலை பெறுவதையும் யாராலும் தடுக்க இயலாது.

விவசாயிகள் திருப்திகரமான வருவாய் காணலாம். அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் சிலர் புதிய சொத்து வாங்குவர். மே மாதத்திற்கு பிறகு நெல், கோதுமை மற்றும் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூலை பார்க்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தீர்ப்பு உங்கள் பக்கம் அமையலாம். கைவிட்டுப்போனபொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

பெண்கள்தேவைகளை பூர்த்தி செய்து கொள்வர். குடும்ப மேம்பாட்டுக்காக குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். வேலை பார்க்கும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமுக நிலை ஏறபடும். பிள்ளைகள் உடல் நலனிலும் அக்கறை காட்ட வேண்டி வரும்.ஜூனுக்குப் பிறகு திருமணமாகாதவர்களுக்கு கெட்டிமேளம் கொட்டி, தங்கத்தாலி கட்ட மணமகன் வருவார்.

பரிகாரப் பாடல்: அல்லல் போம்! வல்வினை போம்!அன்னை வயிற்றில் பிறந்ததொல்லை போம்! போகத்துயரம் போம்!நல்ல குணமதிக மாமருணைகோபுரத்தில் வீற்றிருக்கும்கணபதியைக் கைதொழுதக்கால்.

பரிகாரம்: தினமும் விநாயகரை வணங்குங்கள். சதுர்த்தி நாட்களில் அருகம்புல் மாலை அணிவியுங்கள். சனி சாதகமாக இல்லாததால் சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்கலாம். பெருமாள் கோயிலுக்கு சென்று வாருங்கள். வியாழக்கிழமை குருபகவானுக்கு கொண்டை கடலை படைத்து வழிபாடு செய்யுங்கள். ஏழைக் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு இயன்ற பொருள் உதவி செய்யலாம். ப”வுக்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2019 »
temple
குடும்பத்தினர் மீது பாசம் மிக்க மேஷ ராசி அன்பர்களே!

நட்புக்கிரகமான  சுக்கிரன் சாதகமாக இருக்கும் ... மேலும்
 
temple
கலை ரசனையுடன் செயல்பட்டு வரும் ரிஷப ராசி அன்பர்களே!

ராசிக்கு நட்பு கிரகமான குருபகவான் நன்மை தரும் ... மேலும்
 
temple
அனைவரிடமும் இதமாக பேசி பழகும் மிதுன ராசி அன்பர்களே

இந்த ஆண்டு தொடக்கம் சற்று சுமாராகவே இருக்கும். ... மேலும்
 
temple
மனஉறுதியுடன்  செயல்பட்டு வெற்றி காணும் கடக ராசி அன்பர்களே!

சந்திரனை ஆட்சி நாயகனாக கொண்ட ... மேலும்
 
temple
திறமையால் பிறரைக் கவரும் சிம்ம ராசி அன்பர்களே!

ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கும் கேதுவால் செயலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.