Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) 80/100 கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) 60 /100 விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) 65/100
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 டிச
2014
12:45

முன்னேற்றத்தில் மனசு! முழுமூச்சாய் தினம் தோறும் உழைப்பு!

சுக்கிரனை ஆட்சி கிரகமாக கொண்ட துலாம் ராசி அன்பர்களே!

நீதி, நேர்மை எப்பக்கம் இருக்கிறதோ அப்பக்கம் சாய விரும்பும் துலாக் கோலாக வாழ்வில் செயல்படுவீர்கள்.  உங்கள் ஆட்சி நாயகனும், நட்பு கிரகங்களான புதன், குரு, கேது ஆகியோரும் சாதகமாக அமைந்திருக்கும் சூழ்நிலையில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. ஆரம்பமே சுப மங்களகரமாக அமையப் போகிறது. சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. இதனால் குடும்பத்தில் பிரச்னைகளை
உருவாக்குவார். வருமானம் குறைவாக இருப்பதால் அடிக்கடி பணப்பற்றாக்குறைக்கு ஆளாக நேரிடலாம். சிலருக்கு கடன் வாங்கும் சூழ்நிலையும் உருவாகலாம். ஆனால், சனி பகவானின் 10-ம் இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும். 12-6-2015 முதல் 5-9-2015 வரை சனிபகவான் வக்ர கதியில் இருக்கிறார். அவர் வக்ரத்தில் சிக்கும் போது கெடுபலன் அறவே தர மாட்டார். மாறாக நன்மையை வாரி வழங்குவார். குருபகவான் 10-ம் இடத்தில் இருக்கிறார். இது சுமாரான நிலை தான். அவர் பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்தலாம்.

அவர் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப்பார்வை சாதகமாக அமைந்துள்ளது. அதன்மூலம் எந்த பிரச்னையையும் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி காண்பீர்கள். பணத்தட்டுப்பாடு நீங்கிட அதிர்ஷ்டகரமாக வழி பிறக்கும். குரு ஜூலை 6ல் சிம்மத்திற்கு மாறுவதன் மூலம் சாதகமான இடத்துக்கு வருகிறார். இதனால் கடந்த கால பின்தங்கிய நிலை இனி மேல் இருக்க வாய்ப்பில்லை. மதிப்பு,மரியாதை சிறப்பாகவே இருக்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட உங்கள் மீதான அவப்பெயர் அடியோடு மறையும். நிழல் கிரகமான ராகு தற்போது 12-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இதனால், வெளியூர் பயணத்தின் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காமல் போகலாம். மறைமுக எதிரிகள் உங்களுக்கு இடையூறு ஏற்படுத்தலாம். இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது மீனத்தில் இருந்து நன்மை செய்து கொண்டிருக்கிறார். இதனால் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபட அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் அபார ஆற்றல் பிறக்கும். சுறுசுறுப்புடன் பணியில் ஈடுபட்டு வருவீர்கள். ஆன்மிக சிந்தனையில் ஆர்வம் உருவாகும். இந்த சிந்தனை உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும், அதற்காக முழுமூச்சாய் உழைக்கும் திறமையைத் தரும். மேற்கண்ட கிரக நிலையின் அடிப்படையில், ஆண்டு முழுமைக்குமான பலனை காணலாம்.ஆண்டின் முற்பகுதியில் சிரமம் குறுக்கிட்டாலும், ஜூலை6க்கு பிறகு மதிப்பு,
மரியாதை சிறப்பாக இருக்கும். சமூகத்தில் கவுரவம் கூடும். புதிதாக வீடு, மனை வாங்கலாம். சிலருக்கு வாகன வாங்கும் யோகமுண்டாகும். ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில் யாருடனும் வீண் விவாதங்களில் ஈடுபடுவது கூடாது. அடுத்தவர்களின் அந்தரங்க விஷயங்களை அறிவதில் ஆர்வம் காட்டுவதும் கூடாது. குடும்பம்
கணவன்-மனைவி இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். மனம் விரும்பிய ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். ஏப்ரல், மே மாதங்களில் வீட்டுக்கு தேவையான சகல வசதிகளையும் பெறுவீர்கள். தற்போது இருப்பதை விட வசதியான
வீட்டிற்கு குடி புகும் நாள் நெருங்கி விட்டது. திட்டமிட்ட படி திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் கைகூடும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வகையில் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி இணக்கம் உண்டாகும். அவர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பு உண்டாகும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் சுபநிகழ்ச்சிகள் மற்றும் வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் தடங்கல் குறுக்கிட்டாலும் முடிவு நன்மையாகவே அமையும்.

தொழில், வியாபாரம்பொருளாதார வளம் அதிகரிக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். கூட்டுத்தொழிலில் நல்ல வளம் காணலாம். அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பின்பற்றி நற்பலன் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்து அவர்கள் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளவும். புதிய வியாபாரம் தற்போது தொடங்குவதை இப்போதைக்கு ஒத்தி வைக்கவும். அவசியம் தொடங்கும் நிலை இருந்தால், குறைந்த முதலீட்டில் தொழில் செய்யவும். அதுவும் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் பெயரில் தொடங்குவது நன்மை அளிக்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் சற்று கவனமாக இருக்கவும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். தொழில் ரீதியாக அடிக்கடி தொலை துõர பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.

பணியாளர்கள்மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உங்கள் பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். கோரிக்கைகளை அதிக முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியது இருக்கும். ஜூன்மாதத்திற்கு பிறகு முன்னேற்றம் அடையலாம். வேலைப்பளு குறையும். விருப்பமான இடமாற்றம் பெறலாம். விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் வேலையில் மிக கவனமாக இருக்கவும். சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு உருவாகலாம்.

கலைஞர்கள்புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். ஏப்ரல் மே மாதங்களில் வசதி வாய்ப்பு பெருகும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். சிலருக்கு வெளிநாடு செல்லும் பாக்கியம் கிடைக்கும். அரசாங்க வகையில் வெகுமதி, பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு. ரசிகர்களின் மத்தியில் தனித்தன்மையுடன் விளங்குவீர்கள்.

அரசியல்வாதிகள்அரசியலில் சிறப்பான நிலை பெறுவர். தலைமையின் நம்பிக்கைக்குரியவராக விளங்குவீர்கள். தொண்டர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சி தரும். மக்கள் நலப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருவீர்கள். ஆனால் ஏப்ரல்,மே, நவம்பர், டிசம்பர் மாதங்களில் செவ்வாய் சாதகமாக இல்லாததால் எதிலும் தீவிர முயற்சி எடுக்க வேண்டி வரும். அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பு நல்லமுறையில் கிடைக்கும். அரசியல் ரீதியான நீண்ட துõர பயணங்கள் வெற்றியில் முடியும்.

மாணவர்கள்சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். நண்பர்களுடன் பொழுதுபோக்குவதை குறைப்பது நல்லது. சிலர் ஆசிரியர்களின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும். குருவின் பார்வையால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். அடுத்த கல்வி ஆண்டு கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கும். போட்டிகளில் விருப்பமுடன் பங்கேற்று வெற்றி வாகை சூடுவீர்கள். ஆசிரியர்களின் அறிவுரையைப் பின்பற்றி கல்வி வளர்ச்சி காண்பீர்கள்.

விவசாயிகள்கஷ்டப்பட்டு உழைக்க வேண்டி வரும். உழைப்புக்கேற்ப பலன் கிடைக்காமல் போகாது. நெல், கோதுமை, கேழ்வரகு, சோளம் மற்றும் மானாவாரி பயிர்கள் நல்ல வருமானத்தை கொடுக்கும். அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத் தவிர்க்கவும். வழக்கு விவகாரங்களில் தீர்ப்பு உங்கள் பக்கம் அமையும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் உயரும். புதிதாக நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.

பெண்கள்உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.செலவை குறைப்பது நல்லது. மே மாதத்திற்கு பிறகு குதுõகலமான பலனை காணலாம். கணவரின் அன்பு கிடைக்கும். உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும். சிலருக்கு பிறந்த வீட்டில் இருந்து பொன், பொருள் வரும். பிள்ளை வளர்ப்பில் பெருமை அடைவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். தாயாரின் உடல் நலம் மேம்படும்.

பரிகாரப் பாடல்: கோணிலவு பிறை பொருவுஞ் கூரெயிற்றுவாய்மூடுவதற் குதிரை யானைப்பாணியிற் கங்கணம் புனைந்த வுரகமணிவெயில் விரிக்கும் பண்பினானைவேணியரன் திருக்கோயில் காப்பானைநிருவாண வேடத்தானைவாணிலவு முத்தலைவேல் வடுகனைச்செந்தமிழ் பாடி வணக்கஞ் செய்வாம்.

பரிகாரம்: சனி, ராகு சாதகமாக இல்லாததால் இருவருக்கும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அர்ச்சனை செய்யவும். பைரவரை ராகுவேளையில் தரிசிப்பது பிரச்னையை பெருமளவில் குறைக்கும். பெருமாள் கோயிலுக்குச் சென்று வாருங்கள். காக்கைக்கு அன்னமிட்டு சாப்பிடுங்கள். ஞானிகளை சந்தித்து ஆசி பெறுங்கள். ஜூன் வரை குருபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். ப”வுக்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020 »
temple
பொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே! இந்த ஆண்டு குரு, ராகு சாதகமாக உள்ள நிலையில் புத்தாண்டு ... மேலும்
 
temple
நல்லவர் நட்பை விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே! புத்தாண்டின் தொடக்கத்தில் குருவின் பார்வையால் நன்மைகள் ... மேலும்
 
temple
மதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே! உங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் நிலையில் ... மேலும்
 
temple
உழைப்பால் உயர்ந்திடும் கடக ராசி அன்பர்களே!சனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் ... மேலும்
 
temple
மன உறுதியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!இந்த ஆண்டு 11ம் இடத்தில் உள்ள ராகுவும், 5ம் இடத்தில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.