Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) 60/100 சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) 60/100 துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) 65/100 துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) 80/100
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 டிச
2014
12:44

இதுவரையில்இலையுதிர் காலம்இனிமேல் பொற்காலம்!

புதனை ஆட்சி மற்றும் உச்சனாக கொண்ட கன்னி ராசி அன்பர்களே!

விட்டுக் கொடுக்கும் சுபாவம் கொண்டவரான நீங்கள் அனைவரிடமும் கண்ணியத்துடன் நடந்து கொள்வீர்கள். கடந்த ஆண்டில் சிரமப்பட்டதற்கு காரணம் ஏழரைச் சனி தான். மேலும் கடந்த ஆண்டு குருவின் நன்மை ஓரளவு உங்களை கீழே தடுக்கி விழாமல் தாங்கி பிடித்தபடி காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் உங்கள் நட்பு கிரகங்களான செவ்வாய், சுக்கிரன் ஆகியோர் சாதகமாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டு மலர்கிறது.பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். குடும்பத் தேவை அனைத்தும் நிறைவேறும். சனிபகவான் ஏழரை காலத்தை முடித்து, 3-ம் இடத்தில் இருக்கிறார். இது உன்னதமான நிலை. இதுவரையில் இலையுதிர் காலமாக இருந்தது. இந்த ஆண்டு பொற்காலமாக அமையும்.

சனீஸ்வரர் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடையச் செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் சிறந்தோங்க செய்வார். எதிர்பார்ப்பு எளிதில் நிறைவேறும். சமூகத்தில் அந்தஸ்து மிக்கவராகத் திகழ்வீர்கள். திட்டமிட்டு செயல்பட்டு எதிலும் வெற்றி காண்பீர்கள். குரு இப்போது 11-ம் இடத்தில் இருக்கிறார். இது உங்களுக்கு மிகவும் உன்னதமான நிலை. அவர் எண்ணற்ற பல நன்மைகளை தருவார். அவரால் பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். அதோடு குருவின் 7, 9-ம் இடத்துப்பார்வைகள் சாதகமாக விழுகிறது. அதன் மூலமும் நன்மை பன்மடங்கு கிடைக்கும். குரு
பகவான் 4-7-2015 அன்று சிம்மத்திற்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் அல்ல. அங்கு அவர் பொருள் விரயத்தையும், வீண் அலைச்சலையும் ஏற்படுத்தலாம். ஆடம்பர பொருட்கள் வாங்கத் துõண்டுவார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவதில் தாமதம் ஏற்படலாம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போகலாம். கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையிலும் அதிக நெருக்கம் வேண்டாம். வீடு-மனை வாங்கும் எண்ணம் நிறைவேறும். நிழல் கிரகமான ராகு உங்கள் ராசியில் இருக்கிறார். அங்கு அவர் உடல் உபாதையையும், உறவினர்கள் வகையில் வீண் மனக்கசப்பையும் தரலாம். இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது மீனத்தில் இருப்பதால் அலைச்சலையும், மனைவி வகையில் சிற்சில கருத்து வேறுபாட்டையும் ஏற்படுத்தலாம். மேற்கண்ட கிரக நிலைகளின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான விரிவான பலனை காணலாம்.ஜூன் வரை பொருளாதார வளம் அதிகரிக்கும். முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக முடியும். மதிப்பு, மரியாதை சிறப்பான முறையில் அமைந்திருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு சமூகத்தில் மதிப்பு சுமாராகவே இருக்கும். வீண் விவாதங்களை தவிர்த்து விட்டுக் கொடுத்து போவது நல்லது. குறிப்பாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் குடும்பம், நட்பு விஷயத்தில் மிக கவனமாக இருக்கவும்.குடும்பம்மகிழ்ச்சிக்கு எப்போதும் குறைவிருக்காது. சீரான பண வசதி இருக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படுகிறது. மே மாதம் வரை நல்ல காரியங்கள் கைகூடி மங்கலம் பிறக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும் அல்லது தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபோகலாம். திருமணம் போன்ற சுப விஷயங்களில் ஜூன் மாதத்திற்கு பிறகு தடங்கல் ஏற்படலாம்.

தொழில், வியாபாரம்தொழிலில் இது ஒரு பொற்காலமாக அமைந்திருக்கும். எந்த தொழிலிலும் அதிக வருமானத்தை காணலாம். புதிய வியாபாரம் நல்ல லாபத்தை தரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை சிறந்தோங்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். தொழிலாளர் ஒத்துழைப்பு சீராக அமையும். இரும்பு  வியாபாரம், தரகு போன்ற தொழில் நல்லவளர்ச்சி அடையும். வேலையின்றி இருப்பவர்கள் சுய தொழிலில் இறங்க இது நல்ல தருணம். வருமானம் உயர்வதால் சேமிப்பு அதிகரிக்கும்.  கேது சாதகமற்ற நிலையில் இருப்பதால் நிர்வாகச் செலவு அவ்வப்போது அதிகரிக்கலாம். இருந்தாலும் பாதிப்பேதும் இருக்காது. பணியாளர்கள்ஆண்டின் தொடக்கத்தில் சீரான வளர்ச்சி நிலையில் இருப்பர். சாதகமான காற்று உங்கள் பக்கம் வீசத் தொடங்கும். வேலையில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருவீர்கள். எதிர்பார்த்த கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறி வரும். மேல் அதிகாரிகளின் அனுசரணை நல்ல விதத்தில் கிடைக்கும். விருப்பமான இடத்துக்கு மாற்றம் கேட்டுப் பெறுவீர்கள். வேலையின்றி இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வாய்ப்புண்டு. ஜூன் மாதத்திற்கு பிறகு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போனாலும் வருமானம் குறையாது. உங்கள் பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு தக்க சமயத்தில் கிடைக்கும்.

கலைஞர்கள்வசதிவாய்ப்புடன் வாழ்வர். புதிய ஒப்பந்தம் மூலம் வருமானம் கிடைக்கும். ரசிகர்கள் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்கும். சிலர் அரசிடம் இருந்து விருது பெற வாய்ப்புண்டு. பெண்கள் விஷயத்தில் எப்போதும் விழிப்புடன் இருப்பது அவசியம்.

அரசியல்வாதிகள்ஆண்டு தொடக்கத்தில் நல்ல மேம்பாடு அடைவர். எதிர்பார்த்த பதவியும், வருமானமும் கிடைக்கும்.தலைமையின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்வீர்கள். ஜூன் மாதத்திற்கு பிறகு எதிலும் விடா முயற்சி வேண்டும். எதிர்பார்த்த மதிப்பு பாராட்டு போன்றவை அப்போது கிடைக்காமல் போகலாம். மக்கள் நலப்பணிகளில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது.

மாணவர்கள்இந்த கல்வி ஆண்டில் குருவினால் கல்வியில் சிறப்படைவர். ஆசிரியர்களின் ஆலோசனை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடுவீர்கள். தேர்வில் மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அடுத்த கல்வி ஆண்டில் எதிர்பார்த்த பாடப்பிரிவு கிடைக்காமல் போகலாம். அதே நேரம் ஜாதகத்தில் நல்ல தசை, புத்தி நடந்தால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

விவசாயிகள்அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். மே மாதத்திற்கு பிறகு நெல், சோளம், கேழ்வரகு ஆகிய தானிய வகைகளில் அமோக மகசூல் கிடைக்கும். நவீன உழவுக்கருவிகள் மூலம் விவசாயத்தை மேம்படுத்துவீர்கள். வழக்கு விவகாரங்களில் தீர்ப்பு உங்கள் பக்கம் அமையும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் அதிகரிக்கும்.

பெண்கள்குதுõகலமான பலனைக் காண்பர். கணவரின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும், உங்களின் உழைப்பு மூலம் குடும்பம் சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சியை காண்பீர்கள். பிள்ளைகளின் செயல்பாட்டின் மூலம் பெருமை கிடைக்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் வீண் செலவு ஏற்படலாம். ஆடம்பர விஷயத்தில் கவனமாக இருப்பது புத்திசாலித்தனம். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு பெருமளவில் குறையும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் உடலில் சிறு பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு.

பரிகாரப் பாடல்: வந்தே சரணம் புகும் அடியார்க்கு வான்உலகம்தந்தே பரிவோடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொற்செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே!  திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்கஎங்கட்கு ஒருதவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர் தங்கட்கும் இந்த தவம் எய்துமோ தரங்கக் கடலுள்வெங்கட்பணி அணை மேல் துயில் கூடும் விழுப்பொருளே.

பரிகாரம்: முருகன் கோயிலுக்கு சென்று, ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ஞாயிறன்று ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். ஜூன் மாதத்திற்கு பிறகு வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள். நவக்கிரகங்களை வலம் வந்து வழிபடுங்கள். சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் இடுங்கள். பிரதோஷத்தன்று சிவனை வழிபடுங்கள்.

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020 »
temple
பொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே! இந்த ஆண்டு குரு, ராகு சாதகமாக உள்ள நிலையில் புத்தாண்டு ... மேலும்
 
temple
நல்லவர் நட்பை விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே! புத்தாண்டின் தொடக்கத்தில் குருவின் பார்வையால் நன்மைகள் ... மேலும்
 
temple
மதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே! உங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் நிலையில் ... மேலும்
 
temple
உழைப்பால் உயர்ந்திடும் கடக ராசி அன்பர்களே!சனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் ... மேலும்
 
temple
மன உறுதியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!இந்த ஆண்டு 11ம் இடத்தில் உள்ள ராகுவும், 5ம் இடத்தில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.