Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) 70/100 கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) 80/100 கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) 60/100
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 டிச
2014
12:43

இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பதுஉனக்காக!

சூரியனை ஆட்சி நாயகனாக கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

வாழ்க்கையில் எப்பொழுதும் தைரியம் இழக்கமாட்டீர்கள். திட்டமிட்டுச் செயல்பட்டு எதிலும் வெற்றி காண்பீர்கள். செயல்திறம் மிக்கவரான நீங்கள் தனித்துவம் நிறைந்து விளங்குவீர்கள். உங்களுக்கு தற்போது சனி பகவான் 4-ம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. குடும்பத்தில் வீண் விரோதத்தைக் கொடுப்பார். கணவன், மனைவியிடையே வாக்குவாதம் அடிக்கடி உருவாகலாம்.  அவரது 3-ம் இடத்துப்பார்வை மிகச்சிறப்பான இடத்தில் விழுகிறது. இது மிக சாதகமான நிலை. இதனால், வாழ்வில் நல்ல வளர்ச்சி உண்டாகும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். வருமானம் சீராகும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். மேலும் 12-6-2015 முதல் 5-9-2015 வரை சனிபகவான் வக்ரத்தில் உள்ளார். அவர் வக்ரத்தில் சிக்கும் போது கெடுபலனை தரமாட்டார். மாறாக நன்மையை வாரி வழங்குவார். குரு இப்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருக்கிறார். இது சுமாரான நிலையே. இனி அவரால் நன்மை தர இயலாது. பல்வேறு தொல்லை உருவாகும். மனதில் நீங்காத வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும். அலைச்சலும், பொருள் விரயமும் ஏற்படும். மனதில் இனம்புரியாத உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம். இவர் 6-7-2015ல் உங்கள் ராசிக்கு மாறுகிறார். இந்த காலத்தில் கலகம் விரோதம் வரும் என்றும் மந்த நிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவது உண்டு.

குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே சிற்சில பிரச்னைகள் வரலாம். இவர்கள் இதற்கு முன் ஒற்றுமையாக இருந்த காலங்களைச் சிந்திக்க வேண்டும். இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக என்பது போல, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போய் விட்டால் அப்புறம் ஏது பிரச்னை! அதே போல் அக்கம்பக்கத்தாரிடமும் அனாவசிய பேச்சைத் தவிர்க்கவும். சிலரது வீட்டில் பொருட்கள் காணாமல் போக வாய்ப்பு உண்டு. தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது அவசியம். நிழல் கிரகமான ராகு தற்போது 2-ம் இடத்தில் இருக்கிறார். இங்கு அவரால் நன்மை தர இயலாது. அவர் பணவிரயத்தை ஏற்படுத்தலாம். மறைமுக எதிரிகளால் பிரச்னையை உருவாக்கலாம். இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது மீனத்தில் நின்று சிறு உடல் உபாதைகளை தரலாம். மருத்துவச் செலவும் செய்ய நேரிடலாம். உணவு விஷயத்திலும் எச்சரிக்கை தேவை. மேற்கண்ட கிரக நிலையில், இந்த ஆண்டு முழுமைக்குமான விரிவான பலனைக் காணலாம். பொதுவாக அலைச்சல் அதிகரிக்கும். சிலரது பயணத்தால் செலவு ஏற்படும் அளவு பயன் எதிர்பார்க்க இயலாது. உங்களின் முயற்சி கடும் முயற்சியின் பேரிலேயே நிறைவேறும். மதிப்பு மரியாதை சுமாராக இருக்கும். மே மாதத்திற்கு பிறகு சாதகமான நிலை உருவாகும். வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும். திட்டமிட்டபடி புதிய வாகனம் வாங்குவீர்கள். ஆனால் அதற்காக பணம் புரட்டுவதில் சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.குடும்பம்தொடக்கத்தில் தேவைகள் அனைத்தும் நல்லமுறையில் பூர்த்தியாகும். புத்தாடை, நகை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் செயல்பாடு கண்டு மகிழ்வீர்கள். குடும்ப வளர்ச்சியால் பெருமிதம் கொள்வீர்கள். மே, ஜூன் மாதங்களில் பெண்களின் ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும். பொன், பொருள் சேரும். திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். மே, நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சு வார்த்தையை தள்ளி வைக்கவும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில்
வீட்டிலும், உறவினர்கள் வகையிலும் கருத்து வேறுபாடு வரலாம். வருமானத்தில் சுணக்கம் ஏற்படலாம். எதிர்பார்த்ததை விட வருமானம் குறையலாம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத சூழல் வரலாம். விலையுயர்ந்த பொருட்களை கவனமாகப் பாதுகாப்பது அவசியம்.

தொழில், வியாபாரம்அலைச்சலும், பளுவும் இருக்கும். ஆனாலும் அதற்குத் தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும். நிர்வாகத்தில் அனாவசியமான செலவை தவிர்க்கவும். குடும்பப் பிரச்னையை நிறுவனத்தில் காட்டாமல் உழைத்தால் வெகுவான நற்பலன் காணலாம். சந்தையில் போட்டியாளர்களால் அவ்வப்போது பிரச்னை தலைதுõக்கலாம். அதை சாதுர்யமாக முறியடிக்க வேண்டும். விரிவாக்கமோ, புதிய வியாபார முயற்சியோ இப்போதைக்கு தவிர்ப்பது நல்லது. தொழில்ரீதியான பயணம் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்பது நன்மையளிக்கும். சக தொழிலதிபர்கள் மத்தியில் கவுரவம் மிக்கவராகத் திகழ்வீர்கள். பணியாளர்கள்முதல் ஆறு மாதங்கள் உங்கள் உழைப்புக்கு மதிப்பு இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவு நல்ல முறையில் இருக்கும். ஆனால் ஜூன் மாதத்திற்குப் பிறகு சக ஊழியர்களால் வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. சிலருக்கு எதிர்பாராத வகையில் இட, பணிமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. விண்ணப்பித்த கடனுதவி கிடைப்பதில் தாமதம் உருவாகும். எதிர்பார்த்த சலுகையில் ஓரளவே கிடைக்கும். குறிப்பாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வேலையில் மிக கவனம் தேவை. சக ஊழியர்களிடம் அளவாகப் பழகுவது நல்லது. நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும்.

கலைஞர்கள் மிகச்சிறப்பான பலன் கிடைக்க பெறுவீர்கள். அரசாங்க வகையில் பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும். சக கலைஞர்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வீர்கள். தொழில்ரீதியான பயணங்களில் இனிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் கவுரவத்துடன் இருப்பர். உயர் பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. நவம்பர், டிசம்பர் மாதங்களில் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். அந்த காலத்தில் தீவிர முயற்சியின் பேரில் சிரமங்களைத் தடுக்கலாம். தொண்டர்களின் ஆதரவு எப்போதும் போல இருக்கும். தலைமையின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்து வருவீர்கள்.

மாணவர்கள்இந்த கல்வி ஆண்டில் சிறப்பான முன்னேற்றத்தை காண்பீர்கள். நல்ல மதிப்பெண் பெறலாம். விரும்பிய கல்வி நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்புண்டாகும். அடுத்த கல்வி ஆண்டில் மிகுந்த சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். ஆசிரியர் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது எதிர்கால நன்மைக்கு வழிவகுக்கும். நல்ல நண்பர்
களைத் தேர்ந்தெடுத்து பழகுவது அவசியம்.

விவசாயிகள் நல்ல வளம் காணலாம். அரசாங்க வகையில் சலுகை கிடைக்க வாய்ப்புண்டு. சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவர். நவீன முறையில் செயல்படுவதால் விளைச்சல் அதிகரிக்கும். விளைபொருளுக்கு நல்ல விலையும் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் ஆதாயம் உயரும். மே மாதத்திற்கு பிறகு அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத் தவிர்க்கவும். மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரம் எதிர்பார்த்த படி அமையாது. புதிய வழக்கில் சிக்க வேண்டாம்.

பெண்கள் முன்னேற்றமான பலன் காண்பர். பிறந்த வீடு மற்றும் உறவினர்கள் வகையில் இருந்த பிரச்னை மறையும். ஜூன் மாதத்திற்கு பிறகு ஆடம்பர செலவை தவிர்க்கவும். கணவரிடம் விட்டுக் கொடுத்துபோகவும். உடல் நலம் நல்ல நிலைக்கு திரும்பும். மருத்துவச் செலவு குறையும். பிள்ளைகளின் செயல்பாடு சந்தோஷம் அளிக்கும். பொது, ஆன்மிக நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்று மகிழ்வீர்கள்.

பரிகாரப் பாடல்:  பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் வாயிலோ ராயிர நாமம்ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக் கொன்றுமோர் பொறுப்பில னாகிபிள்ளையைச் சீறி வெகுண்டு துõண் புடைப்பப்பிறையெயிற் றனல்விழிப் பேழ்வாய்தெள்ளிய சிங்க மாகிய தேவைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை நரசிம்மருக்கு பானகம் படையுங்கள். சனி திருப்தியற்ற இடத்தில் இருப்பதால் அவருக்கு எள் தீபம் ஏற்றுங்கள். திருநள்ளாறுக்கோ, குச்சனுõருக்கோ(தேனி மாவட்டம்) சென்று வாருங்கள். துர்க்கைக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றுங்கள். குலதெய்வ வழிபாடு பிரச்னைகளை பெருமளவில் குறைக்க உதவும். பசுவுக்கு அகத்திக்கீரை அளிப்பதும் நன்மைக்கு வழிவகுக்கும்.  தினமும் ‹ரிய வழிபாடு செய்யுங்கள்.

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020 »
temple
பொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே! இந்த ஆண்டு குரு, ராகு சாதகமாக உள்ள நிலையில் புத்தாண்டு ... மேலும்
 
temple
நல்லவர் நட்பை விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே! புத்தாண்டின் தொடக்கத்தில் குருவின் பார்வையால் நன்மைகள் ... மேலும்
 
temple
மதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே! உங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் நிலையில் ... மேலும்
 
temple
உழைப்பால் உயர்ந்திடும் கடக ராசி அன்பர்களே!சனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் ... மேலும்
 
temple
மன உறுதியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!இந்த ஆண்டு 11ம் இடத்தில் உள்ள ராகுவும், 5ம் இடத்தில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.