Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) 75/100 மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) 60/100 சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) 60/100
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2019
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) 70/100
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 டிச
2014
12:41

பொன்மகள் பொருள் தருவாள் பூமகள் நிலம் தருவாள்!

சந்திரனை ஆட்சி நாயகனாக கொண்ட கடக ராசி அன்பர்களே!

நீங்கள் வெள்ளை மனம் கொண்டவர்கள். பிறரின் அன்பான பேச்சுக்கு அடிபணிந்து விடுவீர்கள். திட்டமிட்டுச் செயல்படும் உங்களுக்கு சனிபகவானும், ராகுவும் உங்களுக்கு பகை கிரகங்களாக இருந்தாலும் நன்மை தரும் நிலையில் இருக்கிறார்கள். அவர்களின் நற்கருணையோடு இந்த புத்தாண்டு தொடங்குகிறது. ஆண்டுமுழுவதும் இவர்கள் நன்மை தரக் காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு முக்கிய கிரகங்களில் சனி, குரு மட்டுமின்றி கேதுவும் சாதகமற்ற இடத்தில் தான் இருந்தார். இதனால் சிற்சில இடர்பாடுகளை சந்தித்து இருப்பீர்கள். ஆனாலும், இந்த ஆண்டு சனி, ராகுவின் சாதக நிலையால் நன்மை அதிகரிக்கும். சனி பகவான் 5-ம் இடத்தில் இருக்கிறார். 5-ல் சனி இருக்கும் போது குடும்பத்தில் சிற்சில பிரச்னைகளை தருவார் என்பது பொது விதி. அவர் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை சிறப்பாக உள்ளது. இதனால் நன்மை கிடைக்கும். மேலும், அவர் ஜூன் 12ல் வக்ரமாகி, விருச்சிகத்தில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார். செப். 5 வரை வக்ரத்தில் உள்ளார். அவர் வக்ரத்தில் சிக்கும் போது கெடுபலனை தரமாட்டார். மாறாக நன்மையே தருவார். தடைபட்ட விஷயங்கள் மளமளவென இனிதே நிறைவேறும். குரு ஜூலை 5 வரை உங்கள் ராசியில் இருக்கிறார். இதனால் கலகம் விரோதம் வரும் என்றும் மந்த நிலை ஏற்படும் என்றும் கூறப்படுவது உண்டு. அவரால் வீண் அலைச்சலும், மனதில் வீண்குழப்பமும் ஏற்படும் அதற்காக கவலைப்பட வேண்டாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரின் அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. இதனால் உங்களுக்கு வரும் இடையூறுகள் அனைத்தும் முறியடித்து வெற்றிக்கு வழிவகுப்பார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்திட வழிவகுப்பார். அவர் 6-7-2015ல் சிம்மத்திற்கு மாறுகிறார். இதனால் உங்களது ஆற்றல் மேம்படும். அதுவரை உள்ள மந்த நிலை மாறும். மனதில் துணிச்சல் பிறக்கும். வருமானம் பலவழிகளில் வரும். சேமிக்கும் வாய்ப்புண்டாகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழலாம். பொன்மகளால் பொருளும், நிலமும் அள்ளித்தரும் வாய்ப்புண்டு. பகைவர்களின் சதி எடுபடாமல் அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.

உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். அவர்களின் வருகையால் நன்மையும் ஏற்படும். அக்கம்பக்கத்தினர் மெச்சும் விதத்தில் வாழ்வு நடத்துவீர்கள். நிழல் கிரகமான ராகு தற்போது 3-ம் இடத்தில் இருக்கிறார். எண்ணற்ற நன்மைகளை வாரி வழங்குவார். சிறிய முயற்சியில் கூட பெரிய பலனைத் தர ராகு காத்திருக்கிறார். இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது மீனராசியில் இருக்கிறார். அங்கு அவரால் முயற்சிகளில் தோல்வியையும், பொருள் நஷ்டமும் ஏற்படலாம். தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்த இடமுண்டு.  மேற்கண்ட கிரக நிலையில் இருந்து இந்த ஆண்டு முழுமைக்குமான பலன்களைக் காணலாம். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். விருப்பம் போல ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பர்ஜூன் வரை குடும்ப விஷயத்தில் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும். அதன்பின் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் படிப்படியாக அதிகரிக்கும்.

நல்லவர்களின் அறிமுகத்தால் வளர்ச்சி காண்பீர்கள். குடும்பம்பெண்களின் ஆதரவு சிறப்பான முறையில் அமைந்து இருக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மனதில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். குடும்பத்துடன் விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பும் நெருக்கமும் நீடிக்கும். ஜூலை 15க்குப் பிறகு உறவினர்கள் மத்தியில் வீண் விரோதம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே அவர்களிடம் அளவாக பேசி உறவை வலுப்படுத்திக் கொள்ளவும். ஆண்டின் தொடக்கத்தில் சிலருக்கு வீடு கட்டும் யோகம் வரும். புதிய வாகனம் வாங்கலாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தள்ளிப் போகலாம். ஜூன் மாதத்திற்கு பிறகு தடைபட்டு வந்த திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் நடந்தேறும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தொழில், வியாபாரம்கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதற்கேற்ற பலனே கிடைக்கும். யாரையும் நம்பி பொறுப்பை ஒப்படைத்து விட வேண்டாம். புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். எதையும் ஒன்றுக்கு பத்து முறை சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. குருவின் பார்வை சிறப்பாக அமைந்திருப்பதால் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படமாட்டீர்கள். 12-6-2015முதல் 5-9-2015 வரை வருமானம் அதிகரிக்கும். புதிய வியாபார முயற்சியில் சீரான லாபம் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். ஆனால், போட்டியாளர்கள் வகையில் எப்போதும் கவனம் தேவை. அனுபவசாலிகளின் வழிகாட்டுதலை செயல்படுத்துவதன் மூலம் வளர்ச்சி காண முடியும். பணியாளர்கள்ஆண்டின் தொடக்கம் சுமாராகவே இருக்கும். அதிக வேலைப்பளுவை சுமக்கும் சூழ்நிலை உருவாகும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்தும், சக ஊழியர்களிடம் பகைக்காமலும் நடந்து கொள்ளவும். ஜூன் மாதத்திற்கு பிறகு வேலையில் முன்னேற்றம் காணலாம். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த கோரிக்கையும் ஓரளவு நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். படித்து விட்டு வேலையின்றி இருப்பவர்களுக்கு வெளியூரில் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கலைஞர்கள் ஜூன் வரை விடா முயற்சியோடு உழைக்க வேண்டியிருக்கும். எதிர்பார்த்த விருது, பாராட்டு கிடைக்க தாமதமாகும். ஜூனுக்குப் பிறகு பணப்புழக்கம் அதிகரிக்கும். ஒப்பந்தங்கள் தாராளமாக கிடைக்கும். சக கலைஞர்களின் ஆதரவு நல்ல விதத்தில் அமையும். தொழில் ரீதியான நீண்ட துõரப் பயணம் மேற்கொள்வீர்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசாங்க வகையிலும் பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு.

அரசியல்வாதிகள் அரசியலில் உயர்நிலைக்கு வரலாம். புதிய பதவி கிடைக்கும். தலைமையின் நெருக்கத்திற்கு உரியவராகத் திகழ்வீர்கள். மக்கள்நலப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருவீர்கள். தொண்டர் நலன் குறித்து
ஆலோசனையில் ஈடுபடுவீர்கள்.

மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் சற்று முயற்சி எடுத்து படிக்க வேண்டும். ஆனாலும், குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால் உங்கள் முயற்சிக்கேற்ப பலன் கிடைக்கும். அடுத்த கல்வி ஆண்டு மிக சிறப்பாக அமையும். தேர்வில் நல்ல மதிப்பெண் பெறலாம். விரும்பிய நிறுவனத்தில் சேரும் வாய்ப்பும் கிடைக்கும். கல்விச் சுற்றுலா மூலம் பயனுள்ள நல்ல அனுபவம் ஏற்படும்.

விவசாயிகள்மே, ஜூன் மாதங்களில் புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றி பெறும். நவீன விவசாயத்தை பயன்படுத்தி முன்னேறுவர். கரும்பு, எள், பனைத்தொழில் மற்றும் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருமானம் பெறலாம். கால்நடை வளர்ப்பின் மூலம் கணிசமான ஆதாயம் கிடைக்கும். நீதிமன்ற வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவு  கிடைக்கும்.

பெண்கள்குதுõகல நிலையில் இருப்பர். பிள்ளைகளின் செயல்பாட்டைக் கண்டு பெருமிதம் காண்பீர்கள். தாய் வழியில் சீதனம் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பைப் பெறலாம். ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் அக்கம் பக்கத்தாரிடம் அனாவசிய பேச்சை தவிர்க்கவும். வீட்டினுள் சிற்சில பிரச்னை வரலாம். உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வேலை பார்க்கும் பெண்கள் இடமாற்றம் காணலாம். உடல்நலம் சுமாராக இருக்கும். மருத்துவச் செலவும் செய்ய நேரிடும். பயணத்தின் போது கவனம் தேவை.

பரிகாரப் பாடல்: விழிக்குத் துணை திருமென் மலர்ப்பாதங்கள் மெய்ம்மை குன்றாமொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்தபழிக்குத் துணை அவன் பன்னிருதோளும் பயந்த தனிவழிக்குத் துணை வடிவேலும்செங்கோடன் மயூரமுமே.


பரிகாரம்: ஆண்டின் தொடக்கத்தில் குரு சாதகமாக இல்லாததால் தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள். நவக்கிரகங்களில் குருவுக்கும், கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள்.
ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். துர்க்கை வழிபாடு மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். ஜூலைக்கு பிறகு முருகனை தரிசனம் செய்யுங்கள். குலதெய்வ வழிபாடு நன்மையை அதிகரிக்கும். ப”வுக்கு அகத்திக்கீரை கொடுப்பது நன்மைக்கு வழி வகுக்கும்.

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2019 »
temple
குடும்பத்தினர் மீது பாசம் மிக்க மேஷ ராசி அன்பர்களே!

நட்புக்கிரகமான  சுக்கிரன் சாதகமாக இருக்கும் ... மேலும்
 
temple
கலை ரசனையுடன் செயல்பட்டு வரும் ரிஷப ராசி அன்பர்களே!

ராசிக்கு நட்பு கிரகமான குருபகவான் நன்மை தரும் ... மேலும்
 
temple
அனைவரிடமும் இதமாக பேசி பழகும் மிதுன ராசி அன்பர்களே

இந்த ஆண்டு தொடக்கம் சற்று சுமாராகவே இருக்கும். ... மேலும்
 
temple
மனஉறுதியுடன்  செயல்பட்டு வெற்றி காணும் கடக ராசி அன்பர்களே!

சந்திரனை ஆட்சி நாயகனாக கொண்ட ... மேலும்
 
temple
திறமையால் பிறரைக் கவரும் சிம்ம ராசி அன்பர்களே!

ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கும் கேதுவால் செயலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.