Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2) 65/100 ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) 70/100 கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) 75/100
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 டிச
2014
12:40

யோகம் வந்தாச்சு! நல்ல நேரம்வந்தாச்சு!

புதனை ஆட்சி நாயகனாக கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

உங்கள் ராசி நாயகன் புதன் என்பதால் சாதுர்யமாகப் பேசும் திறன் படைத்தவராக இருப்பீர்கள். புதன் சாதகமாக இருக்கும் நிலையில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. எனவே அவர் உங்களை நல்வழியில் அழைத்து செல்வார். உங்கள் பேச்சாற்றல் மூலம் எதிலும் வெற்றிக் கொடி நாட்டுவீர்கள். திட்டமிட்ட செயல்பாட்டால் சீரான வளர்ச்சிக்கு வழிவகுப்பீர்கள். இந்த ஆண்டு உங்கள் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக நிற்கப் போகிறவர் சனிபகவான் தான். அவர் தற்போது விருச்சிக ராசியில் இருக்கிறார். பணப்புழக்கத்தையும், செயல்பாட்டில் வெற்றியையும் கொடுப்பார். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் பறந்தோடச் செய்வார். முயற்சியில் இருந்த தடை நீங்கி செயல் மேன்மையை வழங்குவார். தொழிலில் கடந்த காலத்தில் இருந்த மந்தநிலை மாறி வளர்ச்சியான போக்கு தென்படும். மேலும் சனியின் 10-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக அமையும். அதன் மூலம் அவர் பொருளாதார வளத்தையும், வாழ்வில் நல்ல முன்னேற்றத்தையும் கொடுப்பார்.குரு உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருக்கிறார். இது மிகவும் உகந்த நிலை. எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களது ஆற்றல் மேம்படும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். உங்கள் தலைமையில் சுபநிகழ்ச்சிகள் நிறைவேறும். சமூக அக்கறை கொண்ட மனிதராக விளங்குவீர்கள். உங்களால் இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்து மகிழ்வீர்கள். அவர் ஜூலை 6-ந் தேதி வக்ர  நிவர்த்தி அடைந்து கடகத்தில் இருந்து சிம்மத்துக்கு செல்கிறார். இந்த நேரத்தில் அவரால் நன்மை தர இயலாது. முயற்சிகளில் தடை ஏற்படும். எதிர்பார்த்த உயர்வு இருக்காது. மனதில் அவ்வப்போது குழப்பம் உருவாகலாம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. நிழல் கிரகமான ராகு தற்போது கன்னி ராசியில் இருக்கிறார். இங்கு அவரால் நன்மை தர இயலாது. அவர் மனைவி, மக்கள் மத்தியில் ஒருவித குழப்பத்தை உருவாக்கலாம்.குடும்பத்தில் கருத்துவேறுபாடு, வாக்குவாதம் போன்றவற்றின் மூலம் அமைதி குறையும். அதே சமயம், கேது 10-ம் இடமான மீனத்தில் தற்போது இருந்து வருகிறார். இதனால் உஷ்ணம், தோல், தொடர்பான உபாதையை தரலாம். மருத்துவரின் ஆலோசனை அடிக்கடி தேவைப்படும். ஒவ்வாத உணவுகளை அறவே தவிர்ப்பது அவசியம். சிலரது வீட்டில் பொருட்கள் காணாமல் போகலாம். வீட்டில் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது.  மேற்கண்ட கிரகங்களின் நிலையின் அடிப்படையில், ஆண்டு முழுமைக்குமான விரிவான பலனை காணலாம்.பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். அதில் எந்த தடைகள் வந்தாலும் எளிதில் முறியடிக்கலாம். சமூகத்தில் மதிப்பு, மரியாதை சிறப்படையும். ஜூன் மாதத்திற்கு பிறகு குரு இடம் மாறுவதால் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. முக்கிய செயல்பாடுகளை குடும்ப பெரியோர்களின் ஆலோசனையின் பேரில் நிறைவேற்றவும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மிக மிக கவனமாக இருக்கவும். தீயோர் சேர்க்கைக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் எச்சரிக்கை கொள்வது நல்லது. குடும்பம்கணவன்-மனைவிஇடையே ஒற்றுமை சீராக இருக்கும். அதே நேரம் ராகு சிறப்பாக இல்லாததால், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. நவம்பர், டிசம்பர் மாதங்களில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தைபாக்கியம் உருவாக யோகமுண்டு. திடீர் வருமானத்தால் மகிழ்ச்சிக்கு ஆளாக வாய்ப்புண்டு. தொலை துõரத்தில் இருந்து நல்ல செய்தி தேடி வரும்.

தொழில், வியாபாரம்ஆண்டின் ஆரம்பம் வளர்ச்சியான காலகட்டமாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் வெளியூர்ப்பயணத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும். மே, ஜூன் மாதங்களில் அரசாங்க வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். குருப்பெயர்ச்சிக்கு பிறகு எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போகலாம். நவம்பர், டிசம்பர்
மாதங்களில் வியாபாரிகளுக்கு அரசின் சலுகை எதிர்பார்த்தபடி கிடைக்கும். போட்டியாளர்களுடன் உறவு காள்ள முனைய வேண்டாம். அனுபவசாலிகளின் அறிவுரையைக் கேட்டுப் பெறுவீர்கள். விரிவாக்க முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். பணியாளர்கள்முதல் ஆறு மாதங்கள் வளர்ச்சியான காலகட்டம். வேலையில் ஆர்வம் ஏற்படும். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அரசு ஊழியர்கள் சற்று கவனமாக இருக்கவும். ஆனாலும் சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பர். ஜூன் மாதத்திற்கு பிறகு வேலையில் பளு அதிகரிக்கும். சிலர் தாங்கள் வகித்து வந்த கூடுதல் பொறுப்பை விட வேண்டிய நிலை ஏற்படும்.. சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். இந்த சமயத்தில் அதிகாரிகளை அனுசரித்து போகவும். செப்டம்பர் 15க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். நவம்பர், டிசம்பர் மாதங்களில் பதவி உயர்வு வரும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

கலைஞர்கள்மகிழ்ச்சியுடன் காணப்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மே, நவம்பர், டிசம்பர் மாதங்களில் பொருளாதார வளம் இருக்கும். மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். தொழில் ரீதியான பயணத்தின் மூலம் சந்தோஷமான அனுபவத்தை பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள்ஆண்டின் ஆரம்பம் நன்றாக இருக்கும். இடைக்காலத்தில் முயற்சிக்கும் புதிய பதவிகள் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கிடைக்கும். எதிரி தொல்லை அடியோடு நீங்கும். மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வலம் வருவீர்கள். தொண்டர்களின் ஒத்துழைப்பும் சீராக இருக்கும். தலைமையின்  நம்பிக்கைக்கு உரியவராகத்
திகழ்வீர்கள்.

மாணவர்கள்இந்த கல்வி ஆண்டில் சிறப்பான பலனை பெறுவர். நல்ல மதிப்பெண் கிடைக்கும். போட்டி கடுமையாக இருந்தாலும் அதில் வெற்றி காண்பர். ஆனால், அடுத்த கல்வி ஆண்டில் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். குரு பலமாக இருப்பதால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. ஆசிரியர்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்குத் துணை நிற்கும்.

விவசாயிகள்அதிகமாக உழைக்க வேண்டி வரும். ஆனால், அதற்கு ஏற்ப வருமானமும் வந்து விடும். நெல், கோதுமை, கடலை போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். மே மாதத்திற்கு பிறகு அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத் தவிர்க்கவும். செப்டம்பர் 15க்கு பிறகு வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றி பெறும். மாற்றுப் பயிர் சாகுபடி எதிர்பார்த்த  பலனைக் கொடுக்கும்.

பெண்கள்உற்சாகமாக காணப்படுவர். குழந்தைகளின் செயல் பாட்டால் பெருமை காணலாம். உறவினரோடு விருந்து விழா என சென்று வரலாம். குடுபத்தினரிடம் சற்று விட்டுக்கொடுத்து போகவேண்டும். செப்டம்பர் 15க்கு பிறகு குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உடல் நலன் சீராக இருக்கும். சிலர்  வீண் மன உளைச்சலில் இருப்பர். தாயாரின்  உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டி வரும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் வயிறு பிரச்னை வரலாம், கவனம். பயணத்தின் போது எச்சரிக்கை தேவை.

பரிகாரப் பாடல்: பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும் பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்உயிரை மேவிய உடல் மறந்தாலும்கற்ற நெஞ்சம் கலை மறந்தாலும்கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே.

பரிகாரம்: நாகருக்கு பால் அபிஷேகம் செய்யலாம். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். மே மாதத்திற்கு பிறகு குருபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
வியாழக்கிழமை சிவன் கோவிலுக்கு சென்று வர தவறாதீர்கள். நவக்கிரக சந்நிதியில்
சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள். காகத்திற்கு தினமும் உணவிடுவதால்
பிரச்னை குறைந்து நன்மை அதிகரிக்கும்.  பிரதோஷத்தன்று நந்தீஸ்வரரை வணங்குங்கள்.

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020 »
temple
பொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே!

இந்த ஆண்டு குரு, ராகு சாதகமாக உள்ள நிலையில் புத்தாண்டு ... மேலும்
 
temple
நல்லவர் நட்பை விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே!

புத்தாண்டின் தொடக்கத்தில் குருவின் ... மேலும்
 
temple
மதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே!

உங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் ... மேலும்
 
temple
உழைப்பால் உயர்ந்திடும் கடக ராசி அன்பர்களே!

சனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் ... மேலும்
 
temple
மன உறுதியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!

இந்த ஆண்டு 11ம் இடத்தில் உள்ள ராகுவும், 5ம் இடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.