Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மீனம்: ஒரு புறம் எரிமலை மறுபுறம் பனிமலை மீனம்: ஒரு புறம் எரிமலை மறுபுறம் ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2) 65/100 ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1பாதம்) 60/100
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 டிச
2014
12:38

நாளை நமதே! எல்லா நன்மைகளும் நமதே!

சூரியனின் உச்ச வீடாகத் திகழும் மேஷ ராசி அன்பர்களே!

நீங்கள் செவ்வாயை ஆட்சி நாயகனாகக் கொண்டவர்கள். அற்ப ஆசைக்கு இடம் கொடுக்காதவர்கள். ஆனால், எதிலும் சட்டென்று முன்கோபத்திற்கு ஆளாகி விடுவீர்கள். வாக்கு வன்மையும், கொடுத்த வாக்கை நிறைவேற்றும் மன உறுதியும் படைத்தவர்கள். பூமிக்குரிய செவ்வாய் ராசிநாதனாக உங்களுக்கு இருப்பதால், பூமி மீது உங்களுக்கு அளவற்ற ஈடுபாடு இருக்கும். கடந்த ஆண்டு சனி பகவானால் குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து இருக்கலாம். தம்பதி இடையே கருத்துவேறுபாடு உருவாகி பிரியும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம். பிள்ளைகள் வழியிலும் சிரமத்திற்கு ஆளாகி இருப்பீர்கள்.  இப்படி கெடுபலன்களை தந்த சனி இந்த ஆண்டு 8-ம் இடமான அஷ்டமத்தில் இருக்கிறார். இங்கு அவர் உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்துவேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். இவையெல்லாம் அஷ்டமத்து சனியின் பொதுவான பலன்தான். ஆனால் இந்த கெடுபலன்கள் அப்படியே நடக்கும் என்று கவலை கொள்ள வேண்டாம். காரணம் ஜூன்12 முதல்  செப்.5 வரை சனிபகவான் வக்ரத்தில் உள்ளார். அவர் வக்ரத்தில் சிக்கும் போது கெடுபலனை தரமாட்டார் மாறாக நன்மையே தருவார். அவருடைய பார்வை பலத்தாலும் நன்மையே உண்டாகும்.  குருபகவான் 4-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. குரு 4-ல் இருக்கும்போது மன உளச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும்
உருவாக்குவார். 6-7-2015ல் குருபகவான் சிம்மத்திற்கு மாறுகிறார். 5-ம் இடத்தில் குரு இருக்கும் போது குடும்பத்தில் குதுõகலத்தை கொடுப்பார். திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். புதிய வழிகளில் வருமானம் வரத் தொடங்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  ராகு தற்போது 6-ம் இடமான கன்னி ராசியில் இருக்கிறார். இதனால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் வெகுவாக குறையும். ஒருவர் மனதை இன்னொருவர் புரிந்து கொள்ளும் நிலை வரும். முயற்சிகளில் இருந்த தடைகள் அனைத்தும் படிப்படியாக விலகும். எடுத்த செயலில் வெற்றி காணலாம். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். கேது மீனத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. உடல் நலம் சிறிது பாதிக்கப்படலாம். மொத்தத்தில் எதிர்காலத்தில் எல்லா நன்மைகளும் நமதே என்று ஆறுதலடையலாம். மேற்கண்ட கிரக நிலைகளின் அடிப்படையில், ஆண்டு முழுமைக்குமான விரிவான பலனைக் காணலாம்.

தேவைகள் பூர்த்தி ஆகும். சேமிப்பு அதிகரிக்கும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். செல்வாக்கு மேம்படும். ஜுன்,ஜூலை மாதங்களில் புதிய இடம், வீடு மனை வாங்கலாம். வாகன சுகம் கிடைக்கும். குடும்பம் வசதிகள் பெருகும். கணவன்-மனைவி இடையே இருந்த பிணக்கு மறைந்து ஒன்று சேருவர். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். மே, ஜூன் மாதங்களில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமுக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். விருந்து விழா என சென்று வரலாம். உறவினர்கள் வருகையால் வீட்டில் கல கலப்பு உண்டாகும். நண்பர்களின் உதவியும் தக்க சமயத்தில் கிடைக்கும். ஆன்மிக விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தோடு திருத்தல யாத்திரை சென்று வரும் யோகமுண்டு. பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு மகிழ்ச்சி தரும். அக்கம்பக்கத்தினர் மத்தியில் செல்வாக்குடன் இருந்து வருவீர்கள்.  

தொழில், வியாபாரம்சீரான முன்னேற்றம் காணலாம். லாபம் படிப்படியாக அதிகரிக்கும். பழைய கடனில் ஓரளவு அடைபடும். தொழில் இல்லாமல் இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கி வளர்ச்சி காண வாய்ப்புண்டு. எதிரிகளின் தொல்லை மற்றும் சதி உங்களிடம் எடுபடாமல் போகும். ஜூன் மாதம் அரசாங்கத்திடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இரும்பு தொடர்பான வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காணலாம். நவம்பர், டிசம்பர் மாதங்களில் வியாபாரத்தில் அதிக அக்கறை கொள்வது நல்லது. ராகுவால் தொழில் ரீதியான அலைச்சலைத் தவிர்க்க முடியாது. சிலருக்கு வெளியூரிலேயே தங்கும்  நிர்பந்தம் உருவாகும். தீயோர் சேர்க்கையால் அவதிப்படலாம். சனிபகவான் ஜூன் முதல் செப்டம்பர் வரை வக்ர கதியில் சஞ்சரிக்கும் போது இந்த கெடுபலன்கள் அடியோடு இல்லாமல் போகும்.  

பணியாளர்கள்வேலையில் பளு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும். அதே நேரம் உழைப்புக்கு தகுந்த வருவாய் கிடைக்கும். சக பணியாளர்களிடம் சிறு சிறு கருத்து மோதல் ஏற்படும். மேல் அதிகாரி களிடம் அனுசரித்து போகவும். யாரிடமும் எந்த உதவியையும் எதிர்பார்க்க வேண்டாம். ஆனால், ஜூன் மாதத்திற்கு பிறகு நல்ல வளர்ச்சி இருக்கும். வேலைப்பளு அடியோடு குறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்துக் காத்திருந்த கோரிக்கை நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.  

கலைஞர்கள்மகிழ்ச்சியுடன் காணப்படுவர். செல்வாக்கு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். நவம்பர், டிசம்பரில் சுமாரான நிலை உண்டு. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயல்வீர்கள். தொழில்ரீதியான நீண்ட துõர பயணம் செல்ல நேரிடும்.  

அரசியல்வாதிகள்ஆண்டின் துவக்கத்தில் மேம்பாடு காணலாம். பணவசதி பெருகும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். ஆண்டு மத்தியில் பெண்கள் வகையில் தொல்லை வரலாம். அவர்களிடம் ஒதுங்கி இருக்கவும். திறமைக்கு ஏற்ற புகழ், பாராட்டு போன்றவை கிடைக்கவில்லையே என்ற மனவருத்தமும் இருக்கும்.  

மாணவர்கள்வரும் கல்வி ஆண்டு சிறப்பாக இருக்கும். நல்ல மதிப்பெண் பெறலாம். தேர்வில் வெற்றி கிட்டும். விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். நவம்பர்,டிசம்பர் மாதங்களில் சற்று பின்தங்கியநிலை உருவாகலாம். பெற்றோர் அறிவுரையை ஏற்பது நன்மையளிக்கும்.  

விவசாயிகள்அதிக மகசூல் கிடைக்கும். நெல், கோதுமை சோளம், மொச்சை. கரும்பு, எள் பனைத் தொழில் எந்த காலத்திலும் சிறப்பை தரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டு போன சொத்துக்கள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. மே மாதத்திற்கு பிறகு புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். திட்டமிட்டபடி நவீன உழவுக்கருவிகள் வாங்கி விவசாயத்தை மேம்படுத்த முயல்வீர்கள்.  

பெண்கள்முன்னேற்றம் காண்பர். புத்தாடை, நகை வாங்கலாம். ஆன்மிக சுற்றுலா செல்ல வாய்ப்புண்டு. கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறலாம். அக்கம்பக்கத்தினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். மே, நவம்பர், டிசம்பர் மாதங்களில் குடும்ப ஒற்றுமைக்காக சற்று விட்டுக் கொடுத்து போகவும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டவும்.  

பரிகாரப் பாடல்: கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்க முதல் கற்ற கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த  பூரணமாய் மறைக்கு அப்பாலாய் எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.

பரிகாரம்: பத்ரகாளி அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் முன்னேற்றம் அதிகரிக்கும். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு உதவுங்கள். ஜூன் வரை குருபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஆலங்குடி, திருச்செந்தூர், திட்டை(தஞ்சாவூர் அருகில்), பட்டமங்கலம் (சிவகங்கை மாவட்டம்) போன்ற ஏதாவது ஒரு குரு தலத்திற்கு சென்று வாருங்கள். ஏழைக்குழந்தைகள் படிக்க உதவுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வில்வ அர்ச்சனை செய்யுங்கள்.

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020 »
temple
பொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே! இந்த ஆண்டு குரு, ராகு சாதகமாக உள்ள நிலையில் புத்தாண்டு ... மேலும்
 
temple
நல்லவர் நட்பை விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே! புத்தாண்டின் தொடக்கத்தில் குருவின் பார்வையால் நன்மைகள் ... மேலும்
 
temple
மதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே! உங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் நிலையில் ... மேலும்
 
temple
உழைப்பால் உயர்ந்திடும் கடக ராசி அன்பர்களே!சனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் ... மேலும்
 
temple
மன உறுதியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!இந்த ஆண்டு 11ம் இடத்தில் உள்ள ராகுவும், 5ம் இடத்தில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.