Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

தனுசு: ஆள்பார்த்து பழகுங்க! ஆனந்தமாய் சிரியுங்க! தனுசு: ஆள்பார்த்து பழகுங்க! ... கும்பம்: பூச்சூட ஆளிருக்கும் புகழ்பாட வாயிருக்கும் கும்பம்: பூச்சூட ஆளிருக்கும் ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020
மகரம்: சொல்லிவச்சு அடிக்கலாம் புள்ளி வச்சு பிடிக்கலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2013
14:10

தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு  ஒளிவுமறைவின்றி கற்றுத்தரும் மகர ராசி அன்பர்களே!

நீங்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். யாரையும் சட்டை செய்யாமல் நீங்கள் உண்டு  உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். கடந்த ஆண்டு எந்த முக்கிய கிரகமும் சாதகமாக இல்லாமல் இருந்ததால், எண்ணற்ற பிரச்னைகளை சந்தித்து இருப்பீர்கள். ஆனால், அந்த நிலை மாறி இந்த ஆண்டு பல்வேறு முன்னேற்றங்களை காணலாம். குறிப்பாக ஆண்டின் பிற்பகுதி அனுகூலம் நிறைந்ததாக அமையும். உங்கள் ஆட்சி நாயகன் சனி, துலாமில் உச்சம் பெற்றிருக்க இந்த ஆண்டு பிறக்கிறது. 10ம் இடத்தில் இருக்கும் அவரால் நன்மை செய்யமுடியாது.  பொதுவாக, அவர் அவப்பெயரையும் பொல்லாப்பையும் தருவார் என்பது நியதி. பெண்கள் வகையில் இடையூறுகள் வரலாம். அதேநேரம், சனிபகவான் உங்கள் ராசி நாயகன் அல்லவா? அதனால், அவர்  உங்களுக்கு எந்த தொல்லையையும் கொடுக்க மாட்டார். மேலும் மார்ச் 4 முதல் ஜூலை 19 வரை அவர் வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. சாதகமற்ற கிரகம் செயல்பட முடியாமல் போவது உங்களுக்கு சாதகம் தானே! மேலும், அப்போது அவரால் நன்மை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. இன்னொரு முக்கிய கிரகமான குரு பகவான்,  தற்போது உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் உள்ளார். அங்கு அவர் பல்வேறு இன்னல்களை தந்திருப்பார். மன நிம்மதியை இழக்க செய்திருப்பார். உங்கள் நிலையில் இருந்து தடுமாற்றத்தை உண்டு பண்ணியிருப்பார். பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும். வீண் பகையும், விரோதமும் உருவாகியிருக்கும். பல்வேறு தொல்லைகளை அனுபவித்து இருப்பீர்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மார்ச் 12-ந் தேதி வரை குருபகவான் வக்கிரத்தில் உள்ளார். எனவே அவரால் கெடுபலன்கள் நடக்காது. மாறாக நன்மை நடக்கவே வாய்ப்பு உண்டு.  பிற்போக்கான பலனை தந்து கொண்டிருக்கும் குரு பகவான், ஜூன்12ம்தேதி 6ம் இடத்தில் இருந்து 7ம் இடத்திற்கு செல்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை. அவர் மேலும் உங்களுக்கு பல்வேறு  நன்மைகளைத் தர இருக்கின்றார். இந்த கால கட்டத்தில், நீங்கள் ஏற்கனவே பலமுறை சொல்லிக் கொண்டிருந்த திட்டங்களை செயல்படுத்துவீர்கள். அதற்கான புள்ளியை மட்டும் வைத்து விட்டால் போதும். கோடு போட்டால், ரோடு போடலாம் என்பது போல் சாதித்து விடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியைத் தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள்  பூர்த்தியாகும். எண்ணற்ற வசதிகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். அதோடு குருபகவானின் 5ம் இடத்துப் பார்வையாலும் நன்மை தருவார். நிழல் கிரகமான ராகு, தற்போது 10ம் இடமான துலாமில் சனிபகவானோடு இணைந்து காணப்படுகிறார். அங்கு  பொல்லாப்பையும், பெண்கள் வகையில் தொல்லைகளையும் தரலாம். ஆனால், அவர் மீது குருவின் பார்வை படுவதால் அவரால் கெடுபலனைத் தர முடியாது. ஜூன்20ல், ராகு 9ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். அவரால் முயற்சிகளில் தடை, எதிரிகளின் இடையூறு போன்றவை வரலாம். இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது 4ம் இடத்தில் இருந்து உங்களை தீயோர் சேர்க்கைக்கு ஆளாக்கி தொல்லைகளைத்  தரலாம். ஜூன்20ல் இடம் பெயர்ந்து மீனத்திற்கு  வருகிறார். இது சிறப்பான இடம். இறை அருளையும் காரிய அனுகூலத்தையும் தருவார். பொருளாதார வளத்தையும் மேம்படுத்துவார். மேற்கண்ட கிரகங்களின் நிலையை பார்க்கும்போது ஆண்டின் பிற்பகுதியில் வெகுவாக முன்னேறலாம் என்பதை உணர முடியும். ஜூன் மாதம்  முதல் தடைகள் விலகி எல்லா காரியங்களும் அனுகூலம் ஏற்படும். பணவரவு மேலும் அதிகரிக்கும். தற்போதுள்ள அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும். அதுவரை வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் அல்லது புதிய தொழில் ஆரம்பிப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. தெய்வ அனுகூலம் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும். தம்பதியினரிடையே அன்பு நீடிக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஜூன் முதல் நிறைவேறும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் மாறி, மகிழ்ச்சியும், ஒற்றுமையும்  ஓங்கும். சில சமயங்களில், செலவு அதிகரித்தாலும், அதுவும் சுபத்திற்கானதாகவே இருக்கும்.

தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கும். அதற்காக அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆண்டின் முற்பகுதியில் பணவிரயம் ஆகலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். போட்டியாளர்கள் தரும் இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம். அதேபோல், சேர்க்கை சகவாசத்தாலும் பணம் வீணாவதும், பிரச்னைகளில் சிக்குவதுமான நிலை வரலாம். எனவே, அந்த வகையில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜூன் மாதத்தில் இருந்து தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பர். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில்கள் துவங்கி அதில் வெற்றி அடையவும் வாய்ப்புண்டு.

பணியாளர்கள்: ஆண்டின் தொடக்கத்தில்  சுமாரான நிலையே இருக்கும். அலைச்சலும் வேலைப்பளுவும் மனதை வருத்தும். இடமாற்றம் ஏற்படலாம். ஜூன் மாதத்தில் இருந்து இந்நிலையில் இருந்து மேம்பாடு காணலாம். வேலையில் ஆர்வம் பிறக்கும். உங்களைப் புரிந்து கொள்ளாத அதிகாரிகள், இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். அரசு வகையில் உதவி கிடைக்கும். தீயோர் சேர்க்கையால் அவதியுற்றவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். அலுவலகத்தில் சக பணியாளர்கள் வகையில்   சற்று கவனம் தேவை.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் முயற்சியின் பேரில் பெறலாம். ஜூன் முதல் நல்ல முன்னேற்றம் காணலாம்.

பெண்கள்: உங்கள் பெயரில் வீடு வாங்க போட்டிருந்த திட்டம் ஜூனுக்குப் பிறகு நிறைவேறும். நல்ல வீடாக வருகிறது என்றால், கணவரின் கிரகபலனைப் பொறுத்து அவர் பெயரில் வாங்கிக் கொள்ளலாம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சலுகைகளை ஜூனுக்குப் பிறகு எதிர்பார்க்கலாம். நகை வாங்க யோகமுண்டு. கன்னியருக்கு, ஜூனுக்குப் பிறகு திருமணம் நிச்சயமாகும்.

மாணவர்கள்: முதல் ஆறு மாதங்கள் சற்று சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். அடுத்த கல்வி ஆண்டு சிறப்பாக அமையும்.

விவசாயிகள்: முதல் ஐந்து மாதங்களுக்கு பணிகளில் சிரமம் இருந்தாலும், பின்வரும் காலத்தில் சரியாகி விடும். மகசூல் அதிகரிக்கவும், புதிய நிலம் வாங்கவும் யோகமுண்டு. நவீன விவசாய முறைகளைப் பின்பற்றி, மகசூலை அதிகரிப்பீர்கள்.

பரிகாரம்: விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்கி வாருங்கள். நவக்கிரகங்களை தொடர்ந்து சுற்றுங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். ஜூன் வரை வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். முருகன் கோயிலுக்கு சென்று வாருங்கள். ஆதரவற்றவர்கள், மூதாட்டிக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். இதனால் நன்மை அதிகரிக்கும்.

பரிகாரப் பாடல்:

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்-விநாயகனே
விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாம்
தண்மையினாற் கண்ணிற் பணிமின் கனிந்து

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020 »
temple
பொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே! இந்த ஆண்டு குரு, ராகு சாதகமாக உள்ள நிலையில் புத்தாண்டு ... மேலும்
 
temple
நல்லவர் நட்பை விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே! புத்தாண்டின் தொடக்கத்தில் குருவின் பார்வையால் நன்மைகள் ... மேலும்
 
temple
மதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே! உங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் நிலையில் ... மேலும்
 
temple
உழைப்பால் உயர்ந்திடும் கடக ராசி அன்பர்களே!சனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் ... மேலும்
 
temple
மன உறுதியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!இந்த ஆண்டு 11ம் இடத்தில் உள்ள ராகுவும், 5ம் இடத்தில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.