Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மிதுனம்: தகர்க்கலாம் தடைகளை! மடக்கலாம் எதிரிகளை மிதுனம்: தகர்க்கலாம் தடைகளை! ... சிம்மம்: பந்தயத்தில் ஜெயிப்பீங்க! வல்லவரா இருப்பீங்க! சிம்மம்: பந்தயத்தில் ஜெயிப்பீங்க! ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2019
கடகம்: சவாலே சமாளி சாதிக்கப் பலவழி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2013
14:03

விடாமுயற்சியுடன் செயலாற்றி வெற்றி காணும் கடக ராசி அன்பர்களே!

பிறரை கவரும் தன்மை கொண்ட மதிநுட்பம்  மிக்கவரான நீங்கள், கடந்த ஆண்டு சிரமமான பலனையே சந்தித்திருப்பீர்கள். காரணம், முக்கிய கிரகங்கள் எதுவுமே சாதமாக அமைய வில்லை. ஆனால் இந்த ஆண்டு நற்பலன் தரும் விதத்தில் கிரகநிலை ஓரளவு மாறுகிறது.  உங்கள் ராசி நாயகன் சந்திரன், தனது  நட்பு வீடான தனுசுவில் இருக்கும் நிலையில் இந்த ஆண்டு பிறக்கிறது. அதனால் மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் துணிவுடன் செயலாற்றுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். ஆண்டின் முற்பகுதியைக் காட்டிலும், பிற்பகுதி அதிக முன்னேற்றத்தை தரும் வகையில் அமையும். முக்கிய கிரகங்களில் ஒன்றான குருபகவான் 12-ம் இடத்தில் இருப்பதால், கடந்த காலத்தில்  மனவருத்தத்திற்கு ஆளாகியிருக்கலாம் வீண் அலைச்சலும் ஏற்பட்டிருக்கும். ஜூன் 12ல் குரு கடகத்திற்குப் பெயர்ந்து விடுவதால், இந்த  சிரமம் அனைத்தும் படிப்படியாக குறையத் தொடங்கும்.  கடகத்தில் குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், அவரது மூன்று பார்வைகளாலும் நன்மை உண்டாகும். 5-ம் இடத்தின் பார்வையால் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். 7-ம் இடத்துப் பார்வை மூலம் சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். 9-ம் இடத்துப் பார்வையால் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும்.  உறவினர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர்.  சனி பகவான் 4-ம் இடமான துலாமில்  இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவர் அலைச்சலையும், குடும்பத்தில் பிரச்னையையும் ஏற்படுத்தி வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர்  செல்லும் நிலை உருவாகும். இருந்தாலும்,அவரது 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக இருப்பதால், காரிய வெற்றி, பொருளாதார வளம், தொழில் விருத்தியைப் பெறுவீர்கள். சனிபகவான் மார்ச் 4 முதல் ஜூலை 19 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. அதனால், கெடுபலன் ஏதும் நடக்காது. நிழல் கிரகமான ராகு தற்போது  சனிபகவானோடு இணைந்து உள்ளார். அதனால் சுமாரான பலனையே இவரும் தருவார். ஆனால் குருபகவானின் பார்வை படுவதால் கெடுபலனின்  தாக்கம் குறையும்.  ஜூன் 20ல் ராகு இடம் பெயர்ந்து 3-ம் இடமான கன்னிக்கு வருகிறார். இதனால், பொருளாதார வளம் மேம்படும். அவர் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். நீண்டநாள் எதிர்பார்ப்பும் நிறைவேறும். இந்த ஆண்டு நீங்கள் எடுத்தகாரியத்தில் தடைகள் குறுக்கிட்டாலும், விடாமுயற்சியால் வெற்றி காணலாம். செலவு அதிகரித்தாலும் அதை ஈடுகட்டும் வகையில் வருமானமும் ஒருபக்கம் வந்து கொண்டிருக்கும். குறிப்பாக ஜூன் முதல் வருமானத்திற்கு குறைவிருக்காது. எதையும் சவாலாக எடுத்துக் கொண்டு செயல்பட்டு வாழ்வில் சாதனை படைக்க முயல்வீர்கள். ஜூலை 16-ந் தேதி வரை செவ்வாய் சாதகமாக இருப்பதால் புதிய வீடு மனை, நிலம் வாங்க அனுகூலம் பிறக்கும். குடும்பத்தில் அவ்வப்போது பிரச்னை தலை தூக்கினாலும், விரைவில் தீர்வு உண்டாகும். ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம் கவனம் தேவை. வெளியூர் பயணத்தின் போதும்  எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணப் பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்க  வேண்டாம்.

தொழில் வியாபாரம்:  தொழிலில் எதிர்வரும்  குறுக்கீடுகளை சமாளித்து முன்னேறுவீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர் விருப்பத்தை பூர்த்தி செய்ய முயல்வர். உழைப்புக்கேற்ப ஆதாயம் காண்பீர்கள். வெளியூர் பயணத்தை ஆதாய நோக்கில் மேற்கொள்வீர்கள். சிலர் வியாபாரத்தையே ஊர்விட்டு ஊர் மாற்றும் நிலை ஏற்படும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது ஏற்படலாம். ஜூன் முதல் லாபம் படிப்படியாக உயரும்.

பணியாளர்கள்: பணிச்சுமை அதிகரிப்பதால்  சோர்வுக்கு ஆளாவீர்கள். இருந்தாலும், வழக்கமான சம்பள உயர்வு கிடைக்கும். அதிகாரிகளின்  குறிப்பறிந்து நடந்து நற்பெயர் பெற முயல்வீர்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஜூன் முதல் பணியில் முன்னேற்றம் காணலாம். சிலருக்கு திடீர் இட,பணி மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. போலீஸ், ராணுவம், பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான பலன் காண்பர்.

கலைஞர்கள்:  புதிய ஒப்பந்தம் கிடைக்க அதிக சிரமம் எடுக்க வேண்டியதிருக்கும். சக கலைஞர்களுடன் நட்புணர்வுடன் பழகி மகிழ்வீர்கள். வெளியூர், வெளிநாட்டு பயணத்தால் இனிய அனுபவம் காண்பீர்கள்.

பெண்கள்: கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும்,  உடனுக்குடன் விட்டுக்கொடுத்து விடுவீர்கள். உறவினர் மத்தியில் கவுரவம் மேலோங்கும்.  பிள்ளைகள் வழியில் ஏற்படும் ஆடம்பரச் செலவைத் தவிர்க்க முடியாது. ஆடை, ஆபரணம் சேர  வாய்ப்புண்டு.

மாணவர்கள்: மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் முயற்சி எடுத்து படிக்க வேண்டியிருக்கும். அடுத்த கல்வி ஆண்டு சிறப்பாக அமையும். கலை, விளையாட்டுத்துறையிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவர். பெற்றோர் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பர். படிப்பை முடித்தவர்களுக்கு, தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்க விடாமுயற்சி தேவைப்படும்.

விவசாயிகள்: மாற்றுப்பயிர் சாகுபடியால் நல்ல விளைச்சல் காண்பர். உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கப் பெறுவர். பழைய கடனில் பெரும் பகுதியை அடைத்து விடுவீர்கள். கால்நடை வளர்ப்பிலும் ஓரளவு ஆதாயம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும்.

பரிகாரம்:நவக்கிரக வழிபாடு நன்மையளிக்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள். கொண்டக்கடலை தானம் செய்யலாம். பத்திரகாளி அம்மனையும் வழிபட்டு வாருங்கள். ஆதரவற்றோருக்கு உதவி செய்யுங்கள்.

பரிகாரப் பாடல்:
திருநீறு திருமேனி திகழத் திங்கள் திருமுடியின்
மருவு வுரி அரையின் மின்னக்
கருநீறு தருமேன்மை வீணை புத்தகத் தொடுசின்
முத்திரை அக்க மாலை கைகள்
அருள்நீர மையுற யோகபட்டம் சார ஆல்நிழலின்
மோன முனிவர்க்கு ஞானம்
தருநீர் மெய்க் குருவாகி ஆளும் எந்தை
தட்சிணாமூர்த்தி பிரான் மலர்த்தாள் போற்றி.

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2019 »
temple
குடும்பத்தினர் மீது பாசம் மிக்க மேஷ ராசி அன்பர்களே!

நட்புக்கிரகமான  சுக்கிரன் சாதகமாக இருக்கும் ... மேலும்
 
temple
கலை ரசனையுடன் செயல்பட்டு வரும் ரிஷப ராசி அன்பர்களே!

ராசிக்கு நட்பு கிரகமான குருபகவான் நன்மை தரும் ... மேலும்
 
temple
அனைவரிடமும் இதமாக பேசி பழகும் மிதுன ராசி அன்பர்களே

இந்த ஆண்டு தொடக்கம் சற்று சுமாராகவே இருக்கும். ... மேலும்
 
temple
மனஉறுதியுடன்  செயல்பட்டு வெற்றி காணும் கடக ராசி அன்பர்களே!

சந்திரனை ஆட்சி நாயகனாக கொண்ட ... மேலும்
 
temple
திறமையால் பிறரைக் கவரும் சிம்ம ராசி அன்பர்களே!

ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கும் கேதுவால் செயலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.