Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மீனம்: எதிர்நீச்சல் போடுங்க!  முன்னேறிச்செல்லுங்க! மீனம்: எதிர்நீச்சல் போடுங்க! ... ரிஷபம்: 1+1=2 ஊர்க்கணக்கு 1+1=4 உங்க கணக்கு ரிஷபம்: 1+1=2 ஊர்க்கணக்கு 1+1=4 உங்க கணக்கு
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020
மேஷம்: யம்மா யம்மா பம்பரமா மனசு சுத்துமம்மா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 டிச
2013
13:56

மனஉறுதியுடன் செயலாற்றி வெற்றி வாகை சூடும் மேஷ ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாயகன் செவ்வாய் தனது நட்பு வீடான கன்னியில் இருக்கும்போது இந்த புத்தாண்டு மலர்கிறது. ஆறாம் இடத்தில் இருந்து இந்த ஆண்டை தொடங்கி வைக்கும் செவ்வாய் பல்வேறு முனனேற்றத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பார். கடந்த ஆண்டு முக்கிய கிரகங்கள் சாதகமற்ற  இடங்களில் இருந்ததால் எண்ணற்ற பிரச்னைகளை சந்தித்து இருக்கலாம். குறிப்பாக முயற்சியில் தடை ஏற்பட்டிருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போய் இருக்கும். குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்திருக்கலாம். சிலர் நண்பர்களால் அவதிப்பட்டு வரலாம். அதே நேரம் குருவின் பார்வைகளால் உங்கள் நிலை மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றிருக்க மாட்டீர்கள். ஓரளவு வருமானமும் இருந்து உங்களுக்கு கை கொடுத்திருக்கும். இந்த நிலையில் தான் இந்த 2014 உங்கள் மனதை பம்பரமாய் சுழற்றும் வகையில் நற்பலன்களைத் தரப்போகிறது. ஆண்டின் தொடக்கம் ஏற்கனவே  கூறியபடி செவ்வாயின் பலத்தால் பல்வேறு சிறப்புகளுடன் இருக்கும். மேலும் முக்கிய கிரகங்களின் நிலையும் மாறி நன்மை கிடைக்க ஆரம்பிக்கும். ஆண்டின் தொடக்கத்தில் முக்கிய கிரகங்கள் சாதமாக இல்லை தான். ஆனால் பிற்பகுதி பல்வேறு சிறப்புகளை காணலாம். ஆண்டு முழுவதும் சனிபகவான் 7-ம் வீடான துலாம் ராசியில் உள்ளார். இதனால் குடும்பத்தில் சிற்சில பிரச்னைகளை சந்திக்கலாம். அலைச்சல் அதிகரிக்கும். சிலர் வேண்டாத  நண்பர்களுடன் பழகி சிரமப்படலாம். ஆனால் சனிபகவான் மார்ச் 4 முதல் ஜூலை 19 வரை  வக்கிரம் அடைகிறார். அப்போது அவரால் கெடுபலனை தரமுடியாது. மாறாக  நன்மையைத் தான் தருவார். குருபகவான் தற்போது 3-ம் இடத்தில் இருக்கிறார். அவரால் முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம். ஆனால் குருபகவான் மார்ச் மாதம் 12 வரை வக்கிரத்தில் சிக்கி இருப்பதால்  அவரால் கெடுபலன் நடக்க வாய்ப்பு இல்லை. அதோடு குருவின் பார்வைகளால் நன்மை கிடைக்கும். 5-ம் இடத்துப் பார்வை 7-ம் இடமான துலாமில் விழுகிறது. உங்கள் செல்வாக்கு உயரும். நினைத்ததை நிறைவேற்றலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, மனை வாங்கலாம். 7-ம் இடத்துப் பார்வை 9-ம் இடமான தனுசுவில்  விழுகிறது. அதன்மூலம் எடுத்த காரியத்தில் பல்வேறு வெற்றிகளை காணலாம். பொருளாதார வளம்  சிறப்படையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள்  சிறப்பாக நிறைவேறும். 9-ம் இடத்துப்பார்வை 11-ம் இடமான கும்பத்தில் விழுகிறது, அதன் மூலம் புதிய பதவி, சம்பள உயர்வையும் காணலாம். எடுத்த  காரியத்தை எல்லாம் வெற்றிகரமாக செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். நீண்டநாள் எதிர்பார்ப்பும் குருபார்வையால் நிறைவேற வாய்ப்புண்டு.  அடுத்த குருபெயர்ச்சி ஜூன் 12-ந் தேதி வருகிறது. அதன்பின் குருபகவான் 4-ம் இடமான கடக ராசிக்கு செல்கிறார். அதன்பின் குருவால் இருந்து வந்த தடைகள் அனைத்தும் அகலும். ஆனாலும் 4ல் இருக்கும் குருவால் ஒருவித மன உளச்சலை காணலாம். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வரலாம்.  நிழல் கிரகமான ராகு தற்போது சனி பகவானுடன் இணைந்து வீட்டில் சிற்சில இடர்பாடுகளை தந்து கொண்டிருக்கலாம். ஆனால் அவர் ஜூன் மாதம் 20-ந் தேதி பெயர்ச்சி அடைந்து கன்னிக்கு வருகிறார். அதன்பின் அவரால் நன்மை கிடைக்க ஆரம்பிக்கும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் வெகுவாக குறையும். ஒருவர் மனதை இன்னொருவர் புரிந்து கொள்ளும் நிலைக்கு வருவர். மேலும் ராகு பகவானால் உங்கள் முயற்சிகளில் இந்த தடைகள் அனைத்தும் விலகும். எடுத்த காரியத்தில் வெற்றியை காணலாம். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். இன்னொரு நிழல் கிரகமான கேது உங்கள் ராசியில் இருக்கிறார். சிற்சில தடைகளையும் எதிரிகளின் வகையில் தொல்லைகளையும் தந்து கொண்டிருக்கும். அவர் ஜூன் 20-ந் தேதி மீனத்திற்கு செல்கிறார். அதன்பின் அவரால் இந்த இடையூறுகள் வராது. அதே நேரம் உடல் நலம் பாதிக்கப்படலாம். குறிப்பாக பித்தம் மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். அவ்வப்போது மருத்துவரின் ஆலோசனையை ஏற்று நடப்பது நன்மை தரும். குடும்ப நிலையை பொறுத்தவரை எப்போதும் கலகலப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடத்திட ஏற்ற காலகட்டம். மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். குடும்பத்தினரோடு அவ்வப்போது  சுற்றுலா செல்ல வாய்ப்புண்டு.

தொழில் வியாபாரம்: ஆண்டின் தொடக்கத்தில்  செவ்வாயாலும், பிற்பகுதியில் ராகுவால் நல்ல பொருளாதார வளம் இருக்கும். அதே போல் எடுத்த காரியத்தையும் சிறப்பாக செய்து முடிக்கலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். புதிய தொழில் தொடங்க அவர்கள் உதவுவார்கள். தொழிலை விரிவுபடுத்தும் நோக்கமும் எளிதாக  நிறைவேறும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பும் சீராக கிடைக்கும்.

பணியாளர்கள்:  வேலை பார்ப்பவர்களுக்கு ஆண்டின் முற்பகுதியில் அனுகூலம் நிறைந்ததாக இருக்கும். பதவி உயர்வு போன்ற வளர்ச்சி இருக்கும். பிற்பகுதியில் பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது. செவ்வாயின் பலத்தால் ஜூன் மாதம் வரை புதிய நிலம் வீட்டு மனை போன்றவை வாங்கலாம். மேலும் போலீஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் மேன்மை காண்பர்.

கலைஞர்கள்: இந்த ஆண்டின் முற்பகுதியில் பாராட்டு பரிசு போன்றவை கிடைக்கும். ஆண்டின் பிற்பகுதியில் நல்ல பணப்புழக்கம் இருக்கும்.

பெண்கள்: குடும்பத்தினரின் அன்புக்கு பாத்திரமாகத் திகழ்வீர்கள். குழந்தைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் மத்தியில் செல்வாக்கு கூடும். கன்னியருக்கு திருமண மேளம் கொட்ட நேரம் வந்துவிட்டது. குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறுக்கு வாய்ப்பு உண்டு.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் சிறப்பாக முன்னேற்றத்தை அடைவர். கல்வியோடு விளையாட்டு, கலைத்துறையிலும் ஆர்வம் காட்டுவர். அடுத்த கல்வி ஆண்டில் சற்று சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதுஇருக்கும். படிப்பு முடித்தவர்களுக்கு தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்க வாய்ப்புண்டு.

விவசாயிகள்: நல்ல வருமானத்தை காண்பர். ஜூன் மாதத்திற்குள் புதிய நிலம் வாங்கும் யோகம் கூடிவரும்.

பரிகாரம்: எப்போதும் முருகப்பெருமானை தரிசனம் செய்யுங்கள். சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்கு சென்று வாருங்கள். சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். ஊனமுற்றவர்களுக்கும், ஏழை குழந்தைகள் படிக்கவும் உதவி செய்யுங்கள்.

பரிகாரப் பாடல்:
மூவிரு முகங்கள் போற்றி
முகம்பொழி கருணை போற்றி!
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி!
காஞ்சி மாவடி வைகும்
செவ்வேள் மலரடி போற்றி!
அன்னான் சேவலும் மயிலும் போற்றி!
திருக்கைவேல் போற்றி போற்றி!

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020 »
temple
பொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே! இந்த ஆண்டு குரு, ராகு சாதகமாக உள்ள நிலையில் புத்தாண்டு ... மேலும்
 
temple
நல்லவர் நட்பை விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே! புத்தாண்டின் தொடக்கத்தில் குருவின் பார்வையால் நன்மைகள் ... மேலும்
 
temple
மதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே! உங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் நிலையில் ... மேலும்
 
temple
உழைப்பால் உயர்ந்திடும் கடக ராசி அன்பர்களே!சனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் ... மேலும்
 
temple
மன உறுதியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!இந்த ஆண்டு 11ம் இடத்தில் உள்ள ராகுவும், 5ம் இடத்தில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.