Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

விருச்சிகம்: பதவி உயர்வு வருது விருச்சிகம்: பதவி உயர்வு வருது மகரம்: குழந்தை பாக்கியம் மகரம்: குழந்தை பாக்கியம்
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை)
தனுசு: வாகன யோகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2020
17:32

இந்த மாதம் குரு 3ம் இடத்தில் நின்றும், செவ்வாய் 3ம் இடத்தில் நின்றும், சூரியன் 6ம் இடத்தில் நின்றும் நற்பலனைக் கொடுப்பார்கள். புதன் மே24 வரை நன்மை தருவார். உங்கள் ராசியில் இருக்கும் சனி, கேது, குரு, 7ல் இருக்கும் ராகு ஆகியோரால் நற்பலன் தர முடியாது.   தற்போது உங்கள் ராசிக்கு 7ல் இருக்கும் சுக்கிரன் ஜுன் 4ல் வக்கிரம் அடைந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார். இதுவும் சுமாரான இடம் தான். அவரால் மனதில் சோர்வு ஏற்படும். முக்கிய கிரகமான சூரியன், செவ்வாய் பலத்தால் சிறப்பான பலன் கிடைக்கும். எதிரிகளால் இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். பொருளாதார வளம் கூடும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். பொன், பொருள் சேரும். மனதில் பக்தி எண்ணம் மேலிடும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.

குடும்பத்தில் புதனால் எடுத்த முயற்சி வெற்றி பெறும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். மே 24க்கு பிறகு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். ராகுவால் அக்கம் பக்கத்தினர் வகையில் பிரச்னை வரலாம். சற்று விலகி இருக்கவும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். வெளியூரில் தங்கும் சூழ்நிலை ஏற்படலாம். மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பெண்கள் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தோழிகள் அனுசரணையுடன் இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வர்.  சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பர். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். மே 24 வரை வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு லாபம் உயரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். ஆரோக்கியம் மேம்படும்.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் அதிக லாபத்தை எதிர்ப்பார்க்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படலாம்
* வியாபாரிகளுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். ஆன்மிக சம்பந்தபட்ட பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவர். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும். மேலதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கைகளை மே 24க்குள் கேட்டு பெறவும்.
* மருத்துவர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். கோரிக்கைகள் நிறைவேறும்.
* வக்கீல்களுக்கு மே24 வரை வழக்கு, விவகாரங்களில் முடிவு சிறப்பாக இருக்கும்.
* ஆசிரியர்களுக்கு அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும்.  அதிகாரம் கொடிகட்டி பறக்கும்
* போலீஸ், ராணுவத்தினர்களில் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவர்.  சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
* அரசியல்வாதிகளுக்கு பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது. எதிர்பார்த்த பதவியும் கிடைக்கும்.
* பொதுநல சேவகர்களுக்கு சிறப்பான வளர்ச்சி ஏற்படும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
* விவசாயிகளுக்கு பாசிப்பயறு, நெல், துவரை, கொண்டைக்கடலை, சோளம், மஞ்சள், பழ வகைகள் போன்றவற்றில் அதிக மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். அதிக மதிப்பெண் கிடைக்கும்.  மே 24க்கு பிறகு  சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.

சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு மே 24க்கு பிறகு அலைச்சல் ஏற்படும். வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
* வியாபாரிகளுக்கு அலைச்சல் அதிகரிக்கும் வெளியூரில் தங்கும் சூழ்நிலை உருவாகும். சிலர் தீயோர் சேர்க்கையால் அவதியுறுவர். எனவே எச்சரிக்கையுடன் பழகவும்.
* தரகு, கமிஷன் தொழிலில் பிரதி பலன் எதிர்பாராமல் பாடுபட நேரிடும். சில நேரங்களில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
* அரசு வேலையில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது.
* ஐ.டி., துறையினருக்கு மே24க்கு பிறகு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை.
* கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் ஜுன் 4க்கு பிறகு மறையும். அதன்பின் முயற்சியில் தடை ஏற்படலாம்.

நல்ல நாள்: மே 15,16,22,23,24,25,26,31 ஜுன் 1,2,3,4,7,8,11,12,13
கவன நாள்: மே 27,28 சந்திராஷ்டமம்  
அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: பச்சை, சிவப்பு.

பரிகாரம்:
* திங்களன்று சிவனுக்கு வில்வார்ச்சனை
* சனிக்கிழமை ஆஞ்சநேயர் துளசி மாலை
* சதுர்த்தியன்று விநாயகருக்கு நெய் தீபம்

 
மேலும் வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை) »
temple
பொறுப்புடன் கடமையாற்றும் மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன் ஜுன் 4ல் வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு ... மேலும்
 
temple
இந்த மாதம் உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் ஜுன் 4 வரை நன்மை கொடுப்பார். அதன் பிறகு வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் சூரியன், குரு, சனி, கேது ஆகியோரால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். மேலும் புதன் மே24 வரை நன்மை ... மேலும்
 
temple
இந்த மாதம் 11ம் இடத்தில் இருக்கும் ராகு, 10ம் இடத்தில் இணைந்திருக்கும் புதன், சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.