Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கடகம்: சுபநிகழ்ச்சி நடக்கும் கடகம்: சுபநிகழ்ச்சி நடக்கும் கன்னி: பிள்ளைகளால் பெருமை கன்னி: பிள்ளைகளால் பெருமை
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை)
சிம்மம்: எதிர்பாராத வருமானம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2020
17:15

இந்த மாதம் 11ம் இடத்தில் இருக்கும் ராகு, 10ம் இடத்தில் இணைந்திருக்கும் புதன், சூரியன் முன்னேற்றத்தை தருவர். புதன் மே 24ல் 11ம் இடத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். ஜுன் 4 வரை சுக்கிரன் மிதுனத்தில் இருந்து  நற்பலன் தருவார். ஆனால் 7ல் உள்ள செவ்வாய், 6ல் உள்ள குரு, 5ல் உள்ள சனி,கேது ஆகியோரால் நற்பலன் பெற முடியாது.

 குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  பொன், பொருள் சேரும். சுக்கிரனால் பொருளாதார வளம் கூடும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.  உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். சூரியனால் எடுத்த முயற்சி சிறப்பாக முடியும். சமூகத்தில் மரியாதை சிறப்பாக இருக்கும். சகோதரிகளால் நன்மையை எதிர்பார்க்கலாம். புதன் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதி இடையே ஒற்றுமை மேம்படும். பெண்களால் நன்மை கிடைக்கும். மே24 வரை அவர்கள் உதவிகரமாக இருப்பர். பெண்கள் அபார ஆற்றலுடன் திகழ்வர். ஆடை, ஆபரணங்கள் வாங்குவர். உங்களால் குடும்பம் வளர்ச்சி பெறும். பெற்றோர் வீட்டில் இருந்து உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சகோதர வழியில் பண உதவி கிடைக்கும். தோழிகள் ஆதரவுடன் செயல்படுவர். பணிபுரியும் பெண்கள் வேலையில் நிம்மதியும் திருப்தியும் காண்பர். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு சுக்கிரனால் லாபத்துக்கு குறைவிருக்காது. உடல்நலம் சிறப்பாக இருக்கும். ஆனால் பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.

சிறப்பான பலன்கள்
* தொழில்அதிபர்கள்  பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகத்தில் அதிக வருவாயை பெறலாம். மே 24க்கு பிறகு பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
* வியாபாரம் சீரான வளர்ச்சி பெறும். லாபத்திற்கு  குறையும் இருக்காது.  வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார்.
* அரசு பணியாளர்கள் எதிர்பாராத நன்மை கிடைக்கப் பெறுவர். விண்ணப்பித்த கடனுதவி விரைவில் கிடைக்கும்.
* தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சிறப்பான நன்மை காண்பர். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.
* மருத்துவர்களுக்கு  நல்ல பெயரும், சமூக மதிப்பும் உயரும். கோரிக்கைகள் நிறைவேறும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.
* வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவர்.
* ஆசிரியர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். வேலைப்பளு குறையும்.   உங்களின் திறமைக்குரிய நல்ல பெயரும். மதிப்பும் கிட்டும்.
* போலீஸ், ராணுவத்தினர் வேலையில் திருப்தியுடன் ஈடுபடுவர். அதிகாரிளின் ஆதரவும், ஆலோசனனையும் கிடைக்கும்.
* அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர்.
* கலைஞர்களுக்கு சக கலைஞர்கள் ஆதரவுடன் செயல்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசு வகையில் பரிசு, பாராட்டு கிடைக்கும்.
* விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். பாசிப்பயறு, நெல், கோதுமை, சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் மூலம் வருமானம் உயரும்.  வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.  கைவிட்டு போன பொருள் மீண்டும் கிடைக்கும்.  கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த  வருமானம் வரும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

சுமாரான பலன்கள்
* வியாபாரிகள் ஜுன் 6க்கு பிறகு நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள். மறைமுக பகைவர்களால் அவ்வப்போது இடையூறுகள் வரலாம்.
* தரகு, கமிஷன் தொழில்புரிவோருக்கு இனம் புரியாத வேதனை குடியிருக்கும். இருப்பினும் ராகுபலத்தால் அதனை ஓரளவு முறியடிப்பீர்கள்
* ஐ.டி., துறையினர் ஜுன் 6க்கு பிறகு கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அலைச்சலும் பளுவும் அதிகரிக்கும்.
* அரசியல்வாதிகள் சிலர் மன உளைச்சலுடன் காணப்படுவர். தொண்டர்களின் வகையில் கூடுதலாக பணம் செலவாகும்.
* கலைஞர்கள் ஜுன் 4-க்கு பிறகு எதிரிகள் தொல்லை அதிகரிக்கும். போட்டிகள் அதிகம் இருக்கும். சிலருக்கு அவப்பெயர் ஏற்படலாம்.

நல்ல நாள்: மே14,15,16,22,23,24,25,26,29,30,ஜுன் 2,3,4,9,10,11,12,13
கவன நாள்: மே17,18,19 ஜுன் 14 சந்திராஷ்டமம்  
அதிர்ஷ்ட எண்:1,7 நிறம்: சிவப்பு, பச்சை

பரிகாரம்:
* சனிக்கிழமை சனீஸ்வரருக்கு அர்ச்சனை
* வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு விளக்கு

 
மேலும் வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை) »
temple
பொறுப்புடன் கடமையாற்றும் மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன் ஜுன் 4ல் வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு ... மேலும்
 
temple
இந்த மாதம் உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் ஜுன் 4 வரை நன்மை கொடுப்பார். அதன் பிறகு வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் சூரியன், குரு, சனி, கேது ஆகியோரால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். மேலும் புதன் மே24 வரை நன்மை ... மேலும்
 
temple
இந்த மாதத்தை பொறுத்தவரை ரிஷபத்தில் இருக்கும் புதன் மே 24ல் மிதுனத்திற்கு மாறி நற்பலனை தருவார்.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.