Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மேஷம்: முயற்சியில் வெற்றி மேஷம்: முயற்சியில் வெற்றி மிதுனம்: பெண்களால் நன்மை மிதுனம்: பெண்களால் நன்மை
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை)
ரிஷபம்: அரசின் சலுகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2020
17:06

இந்த மாதம் குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் கூடும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் கிடைக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.  குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரும். சுக்கிரன் ஜுன் 4ல் வக்கிரம் அடைந்து மிதுனத்தில் இருந்து உங்கள் ராசிக்கு மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார்.

உங்கள் ராசியில் இருக்கும் சூரியன், புதன் நற்பலனை கொடுக்க மாட்டார்கள். அதே போல்  10 ல் உள்ள செவ்வாய், 2ல் உள்ள ராகு, 8ல் உள்ள கேது,  சனி ஆகியோரால் பலன் கிடைக்காது.  வீண்விரயம் ஏற்படலாம். சிக்கனமாக இருக்கவும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிற்சில பிரச்னை வரலாம்.  பொருள் இழப்பு ஏற்படலாம். சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம்.  அதன்பின் மே 24ல் அவர் உங்கள் ராசிக்கு 2ம் இடத்திற்கு செல்வதால் செல்வாக்கு பாதிப்பு ஏற்படலாம். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். எது எப்படி இருந்தாலும் குரு, சுக்கிரனால்  பிரச்னைகளை சமாளித்து முன்னேற்றம் காணலாம்.  ஜுன் 4க்கு பிறகு சகோதரவழியில் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.
பெண்களுக்கு சிறுசிறு பிரச்னை வந்து மறையும். இருப்பினும்  தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் குருவால் கைகூடும். கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சகோதர வகையில் பணஉதவி கிடைக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். செவ்வாயால்  சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு. பணிபுரியும் பெண்களுக்கு அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுய தொழில் புரியும் பெண்கள் அதிக வருமானத்தை காணலாம். அலைச்சலால் உடல் சோர்வு ஏற்படும். உடல்நிலை லேசாக பாதிக்கப்படும். செவ்வாயால்  உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் ஜுன்4க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் மூலம் நல்ல லாபத்தை கிடைக்கும்.
* வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும். அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
* அரசு பணியாளர்கள் முன்னேற்றம் காண்பர். முக்கிய கோரிக்கைகளை ஜுன் 4க்குள் வைப்பது நற்பலன் தரும்.
* ஐ.டி., துறையினர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர்.  சகஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். விரும்பிய இடத்துக்கு இடமாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவால் வளர்ச்சி உண்டாகும்.
* ஆசிரியர்கள் குருவின் பலத்தால் வேலையில் இருப்பவர்கள் மேன்மை  காண்பர்.அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை குறையும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
* பொதுநல சேவகர்களுக்கு மக்கள் மத்தியில் புகழ், பாராட்டு வந்து சேரும்.
* கலைஞர்கள் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம்.  பெண்கள் உதவிகரமாக செயல்படுவர்.
* விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் காண்பர். கம்பு, கேழ்வரகு, மஞ்சள், பழவகைகள், காய்கறிகள் மூலம் அதிக மகசூலைப் பெறுவர்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் குரு பலத்தால் கல்வியில் சிறப்படைவர்.  ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் காண்பர்.

சுமாரான பலன்கள்
* தொழில்அதிபர்கள் கூட்டாளிகளின் மத்தியில் மனக்கசப்பு,  கருத்துவேறுபாட்டுக்கு ஆளாகலாம்.
* தரகு, கமிஷன் தொழில்புரிவோர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம்.
* தனியார் துறை பணியாளர்கள்  கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அலைச்சலும் பளுவும் அதிகரிக்கும். முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* மருத்துவர்கள் வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருக்கவும். சிரத்தை எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும்.
* வக்கீல்கள் பண விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும்.  அனாவசியமாக மற்றவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் வேலைப்பளு, அலைச்சலுக்கு ஆளாக நேரிடும். கோரிக்கைகள் நிறைவேறுவது எளிதல்ல. திடீர் இடமாற்றத்தை காணலாம்.
* அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலனை பெறமுடியாது. பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
* விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது. வழக்கு, விவகாரங்களில் மெத்தனம் வேண்டாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும்.
 
நல்ல நாள்: மே15,16,17,18,19,22,23,24,27,28 ஜுன் 2,3,4,5,6,11,12,13,14
கவன நாள்: ஜுன் 7,8 சந்திராஷ்டமம்:  
அதிர்ஷ்ட எண்: 3,7 நிறம்: மஞ்சள், வெள்ளை

பரிகாரம்:
* தினமும் காலையில் நீராடி  சூரிய வழிபாடு
* ஞாயிறன்று ஏழைகளுக்கு கோதுமை தானம்
* செவ்வாயன்று முருகனுக்கு நெய் விளக்கு.

 
மேலும் வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை) »
temple
பொறுப்புடன் கடமையாற்றும் மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன் ஜுன் 4ல் வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் ஜுன் 4 வரை நன்மை கொடுப்பார். அதன் பிறகு வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் சூரியன், குரு, சனி, கேது ஆகியோரால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். மேலும் புதன் மே24 வரை நன்மை ... மேலும்
 
temple
இந்த மாதம் 11ம் இடத்தில் இருக்கும் ராகு, 10ம் இடத்தில் இணைந்திருக்கும் புதன், சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்
 
temple
இந்த மாதத்தை பொறுத்தவரை ரிஷபத்தில் இருக்கும் புதன் மே 24ல் மிதுனத்திற்கு மாறி நற்பலனை தருவார்.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.