Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

துலாம்: தம்பதி ஒற்றுமை துலாம்: தம்பதி ஒற்றுமை தனுசு: ஜாலியா ஊர் சுற்றுவீங்க! தனுசு: ஜாலியா ஊர் சுற்றுவீங்க!
முதல் பக்கம் » பங்குனி ராசிபலன் (14.3.2020 முதல் 13.4.2020 வரை)
விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2020
13:38

விதியை மதியால் வெல்லும் விருச்சிக ராசி அன்பர்களே!

செவ்வாய் மார்ச் 23ல் சாதகமான இடத்திற்கு மாறுவதால் மனதில் பக்தி அதிகரிக்கும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும். வருமானம் கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். குரு மார்ச் 27 வரையும், புதன் ஏப். 1 வரையும்  நற்பலன் தருவர். ஆடை, ஆபரணங்கள் வாங்க யோகமுண்டு. மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும்.

குரு மார்ச்27ல் அதிசாரம் அடைந்து மகர ராசிக்கு செல்கிறார். இது சுமாரான இடம் தான். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. அதன் மூலம் எந்த பிரச்னையையும் முறியடிக்கும் வல்லமை கிடைக்கும். உங்களின் ஆற்றல் மேம்படும். சுப நிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதி பெருகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பொன், பொருள் சேரும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மார்ச் 23க்கு பிறகு புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகமுண்டாகும். சனி, கேதுவால் சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம் கவனம் தேவை.

பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பர். மார்ச் 23க்கு பிறகு அக்கம் பக்கத்தினரின் தொல்லை மறையும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் கிடைக்கப் பெறலாம். பெண் காவலர்கள் சிறப்பான பலனைக் காண்பர். சிலருக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரம் செய்யும் பெண்கள் அதிக வருமானம் பெறுவர். ஏப்.1க்கு பிறகு குடும்பத்தில் பொறுமையை கடைபிடிக்க வேண்டியதிருக்கும். வெளியில் பெருமையாக பேசப்பட்டாலும் குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். உறவினர் வகையில் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். வேலைக்கு செல்லும் பெண்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படலாம்.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் மார்ச் 23க்கு பிறகு வளர்ச்சி காண்பர். கோயில், புண்ணிய காரியங்களுக்கான தொழில் செய்பவர்கள் அதிக லாபம் அடைவர். பகைவர் இடையூறு, அரசு வகையில் இருந்த  அனுகூலமற்ற போக்கு மறையும்.
* வியாபாரிகள் மாத முற்பகுதியில் அனுகூல பலன் அடைவர். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். சூரியனால் ஏற்பட்ட பெண்கள் குறுக்கீடு அடியோடு மறையும்.  
* தரகு,கமிஷன் தொழிலில் பொருளாதார நெருக்கடி மறையும். வாடிக்கையாளர்  மத்தியில் நற்பெயர் காண்பர்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை ஏப்.1க்குள் கேட்டு பெறவும்.
* மருத்துவர்களுக்கு மார்ச் 23க்கு பிறகு அதிகாரிகளின் ஆதரவும், அனுசரணையும் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். போட்டியாளர்களின் இடையூறு மறையும்
* வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகளில் ஏப்.1 நல்ல முடிவு கிடைக்கப் பெறுவர்.
* ஆசிரியர்களின் திறமை பளிச்சிடும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். ஏப்.1க்கு பிறகு மாற்றம் ஏற்படும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் மார்ச் 23க்கு பிறகு சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
* அரசியல்வாதிகள் மார்ச் 23க்கு பிறகு நல்ல அந்தஸ்து பெறுவர். எதிர்பார்த்த பதவி வந்து சேரும்.
* பொதுநல சேவகர்களுக்கு பணப்புழகத்திற்கு குறைவிருக்காது.  
* கலைஞர்களுக்கு முயற்சியில் குறுக்கிட்ட தடைகள்  மார்ச் 28க்கு பிறகு மறையும்.
* விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். பாசிப்பயறு, துவரை, கொண்டைக்கடலை, மஞ்சள், பழவகைகள் மூலம் அதிக வருமானம் காண்பர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் மார்ச் 23-க்கு பிறகு கைகூடும். வழக்கு, விவகாரங்களில்  சாதகமான முடிவு கிடைக்கும்.  கால்நடை மூலம் அதிக வருமானம் கிடைக்கும்..
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கலை, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி காண்பர்.

சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ஏப்.1க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பயணத்தால் உடல்நலக்குறைவு ஏற்படலாம்.
* வியாபாரிகளுக்கு அவ்வப்போது மறைமுகப்போட்டி, பகைவர் தொல்லைக்கு ஆளாவர்.  
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு ஏப்.1க்கு பிறகு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். அதிக உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.  
* மின்சாரம், நெருப்பு தொடர்பான பணியாளர்களுக்கு வேலையில் கூடுதல் கவனம் தேவை.
* ஐ.டி., துறையினர் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும் முக்கிய பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.
* அரசு பணியாளர்களுக்கு பணியில் கூடுதல் கவனம் தேவை.  
* ஆசிரியர்களுக்கு மார்ச் 23க்கு பிறகு அரசு வகையில் குறுக்கிட்ட பிரச்னை மறையும்.
* கலைஞர்களுக்கு மார்ச் 28 க்குப் பிறகு பெண்களால் பிரச்னை வரலாம். கவனமாக இருக்கவும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஏப்.1க்கு பிறகு விடாமுயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். சோம்பலை தவிர்ப்பது நல்லது.

நல்ல நாள்:  மார்ச் 15,16,19,20,26,27,28,29,30 ஏப்.5,6,7,8,11,12
கவன நாள்: மார்ச் 31, ஏப்.1 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5,7 நிறம்: சிவப்பு, பச்சை

பரிகாரம்:
* சனிக்கிழமையில் சனீஸ்வரர் வழிபாடு
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
* வெள்ளியன்று காளிக்கு நெய் விளக்கு

 
மேலும் பங்குனி ராசிபலன் (14.3.2020 முதல் 13.4.2020 வரை) »
temple
நட்புக்கு இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே!

சுக்கிரன், ராகு மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பர். ... மேலும்
 
temple
இனிமையுடன் பேசும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியன் இந்த மாதம் நற்பலனைக் கொடுப்பார். சுக்கிரன் மார்ச் ... மேலும்
 
temple
நுட்பமான மதி கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

சூரியன் நற்பலனை வாரி வழங்குவார். சுக்கிரன் மார்ச் 28 ... மேலும்
 
temple
கண்ணியம் மிக்க கடக ராசி அன்பர்களே!

இந்த மாதம் சனி, கேதுவால் நற்பலன்கள் தொடரும். ... மேலும்
 
temple
தெய்வீக மனப்பான்மை கொண்ட சிம்ம  ராசி அன்பர்களே!

ராகுவால் நன்மை இந்த மாதமும் தொடரும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.