Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சிம்மம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி சிம்மம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி துலாம்: தம்பதி ஒற்றுமை துலாம்: தம்பதி ஒற்றுமை
முதல் பக்கம் » பங்குனி ராசிபலன் (14.3.2020 முதல் 13.4.2020 வரை)
பங்குனி ராசிபலன்.. கன்னி: குழந்தை பாக்கியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2020
13:35

தாய் மீது அன்பு மிக்க கன்னி  ராசி அன்பர்களே!

மாத முற்பகுதியில் கூடுதல் நற்பலனை காணலாம். குரு மார்ச் 27ல் அதிசாரம் அடைந்து மகர ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம். அவரால் குடும்பத்தில் குதுாகலம் உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர் வகையில் இருந்த தொல்லைகள் மறையும். அவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். மாதம் முழுவதும் சுக்கிரனும், ஏப்.1 வரை புதனும் நற்பலன் கொடுப்பர்.  சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அவப்பெயர் ஏற்படலாம். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம்.

குடும்பத்தில் முக்கிய பொறுப்புகளை குடும்ப பெரியோர்களிடம் ஒப்படைத்தால் முடிவு சிறப்பாக அமையும். சான்றோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். வசதி வாய்ப்பு பெருகும்.  பெண்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவர். புதனால் எடுத்த முயற்சி வெற்றி அடையும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ஆனால் ஏப்.1க்கு பிறகு கருத்து வேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும்.   

பெண்கள் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பர். தோழிகள் உதவிகரமாக இருப்பர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.  சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஏப்.1க்கு பிறகு குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். மார்ச் 23க்கு பிறகு உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். குறிப்பாக பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களைப் பொறுத்தவரை, பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.
* வியாபாரிகளுக்கு வளர்ச்சிக்கான காலகட்டம். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து மார்ச் 23க்கு பிறகு விடுபடுவர்.
* அரசு பணியாளர்களுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடை இருக்காது.
* தனியார் துறை பணியாளர்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற்று மகிழ்வர். சிலர் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கோரிக்கைகளை ஏப்.1க்குள் கேட்டு பெறவும்.
* ஐ.டி., துறையினருக்கு உன்னதமான பலன் கிடைக்கும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
* வக்கீல்கள் வளர்ச்சி காண்பர். வழக்குகளில் ஏப்.1க்குள் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* ஆசிரியர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் அனுசரணையும் கிடைக்கும். சிலர் பதவி உயர்வு பெறவும் வாய்ப்புண்டு. மார்ச் 28க்கு பிறகு உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்களும் சரணடையும் நிலை உருவாகும்.
* பொதுநல சேவகர்களுக்கு பெண்கள் உதவிகரமாக இருப்பர். பொருளாதார வளம் அதிகரிக்கும்.
* கலைஞர்களுக்கு சககலைஞர்கள் ஆதரவுடன் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பாராட்டு, புகழ் தானாக வரும்
* விவசாயிகள் பாசிப்பயறு, கொண்டைக்கடலை, சோளம், மஞ்சள், தக்காளி, பழவகைகள் மூலம் அதிக வருமானம் கிடைக்கப் பெறுவர்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். தேர்வுகள் எளிதாக இருக்கும். அதிக மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம்.

சுமாரான பலன்கள்
* மருத்துவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அலைச்சலும். வேலைப்பளுவும் இருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது.
* வக்கீல்களுக்கு ஏப்.1க்கு பிறகு வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அதிக உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். உழைப்புக்கு ஏற்ற மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது.
* தரகு, கமிஷன் தொழிலில் பகைவர்கள் வகையில் இடையூறுகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனாலும் பணவிஷயத்தில்  பிற்போக்கான நிலை உருவாகாது.
* அரசியல்வாதிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு மனக்குழப்பம் ஏற்படலாம்.
* விவசாயிகள் புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க நேரிடும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
 ஏப்.1க்குப் பின்  கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம்.

நல்ல நாள்: மார்ச் 15,16,21,22,23,24,25,31, ஏப்.1,2,3,4,7,8,11,12
கவனநாள்: மார்ச் 26,27,28 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5,7 நிறம்: வெள்ளை, மஞ்சள்.

பரிகாரம்:
* ராகு பகவானுக்கு மந்தாரை மலர் அர்ச்சனை
* ஞாயிறன்று ராகு காலத்தில் பைரவர் வழிபாடு
* செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிஷேகம்

 
மேலும் பங்குனி ராசிபலன் (14.3.2020 முதல் 13.4.2020 வரை) »
temple
நட்புக்கு இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே!

சுக்கிரன், ராகு மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பர். ... மேலும்
 
temple
இனிமையுடன் பேசும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியன் இந்த மாதம் நற்பலனைக் கொடுப்பார். சுக்கிரன் மார்ச் ... மேலும்
 
temple
நுட்பமான மதி கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

சூரியன் நற்பலனை வாரி வழங்குவார். சுக்கிரன் மார்ச் 28 ... மேலும்
 
temple
கண்ணியம் மிக்க கடக ராசி அன்பர்களே!

இந்த மாதம் சனி, கேதுவால் நற்பலன்கள் தொடரும். ... மேலும்
 
temple
தெய்வீக மனப்பான்மை கொண்ட சிம்ம  ராசி அன்பர்களே!

ராகுவால் நன்மை இந்த மாதமும் தொடரும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.