Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » காஞ்சி மடம் பீடாதிபதிகள்
காஞ்சி மடம் பீடாதிபதிகள்
51. ஸ்ரீவித்யா தீர்த்தர்
அவதரித்தது : பில்வாரண்ய க்ஷேத்ரம்
காலம் : கி.பி. 1297 முதல் 1385 73+15 வருஷம் கடினமான தவம்
முக்தி திதி, தேசம் : ரக்தாக்ஷி மாக சுக்லப்ரதமை, ஹிமாசலத்தில் ஸித்தி அத்வைதஸித்தாந்தத்தை தீவிர ப்ராசாரம் செய்து வித்யாசங்கரர் என்று பெயர் பெற்றார். சிஷ்யர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மறைந்து விட்டார்.
52. சங்கரானந்தர்
அவதரித்தது : மத்யார்ஜுன க்ஷேத்ரம்
காலம் : கி.பி. 1385 முதல் 1417 (32 வருஷம்)
முக்தி திதி, தேசம் : துர்முகி வைசாக சுக்ல ப்ரதமை, காஞ்சிபுரம். ப்ரஹதாரண்ய உபநிஷத்தின் தீபிகை என்ற விவரம் செய்தார். குருவுடன் 15 வருஷம் ஹிமாலயத்தில் இருந்தவர்.
53. ஸதாசிவேந்தரர்
அவதரித்தது : திருநாகேஸ்வரம்
காலம் : கி.பி. 1417 முதல் 1498 (81 வருஷம்)
முக்தி திதி, தேசம் : நேபாளம் சென்று ராஜாவால் பூஜிக்கப்பட்டவர். பிங்கள ஜேஷ்ட சுக்ல தசமி. காஞ்சிபுரம்
54. மஹாதேவேந்த்ரர்
அவதரித்தது : காஞ்சிபுரம்
காலம் : கி.பி. 1498 முதல் 1507 (9 வருஷம்)
முக்தி திதி, தேசம் : அக்ஷய ஆஷாட க்ருஷ்ண ப்ரதமை. வ்யாஸாசல குகையில் ஸித்தி 9 வருஷத்தில் 73 தடவை பாஷ்ய பாடம் சொல்லியிருக்கார்.
55. சந்த்ரசூடேந்த்ரர்
அவதரித்தது : விருத்தாசலம்
காலம் : கி.பி. 1507 முதல் 1524 (17 வருஷம்)
முக்தி திதி, தேசம் : சுபானு வருஷம் மீனமாதம் சுக்ல ஏகாதசி, காஞ்சிபுரம் ஸித்தி
56. ஸர்வக்ஞஸதாசிவபோதேந்த்ரர்
அவதரித்தது : வடபெண்ணையாற்றங்கரை கிராமம் ஆந்த்ர ப்ராமணர்
காலம் : கி.பி. 1524 முதல் 1539 (15 வருஷம்)
முக்தி திதி, தேசம் : விளம்பி வருஷம் சைத்ர சுக்ல அஷ்டமி, ராமேஸ்வரத்தில் மஹா சமாதி புண்யஸ்லோகமஞ்ஜரி என்ற கிரந்தத்தை தனது ஆசார்யாள் வரை இயற்றியவர் இவரே.
57. பரமசிவேந்த்ரர் 2
அவதரித்தது : பம்பாநதிக் கரை
காலம் : கி.பி. 1539 முதல் 1586 (47 வருஷம்)
முக்தி திதி, தேசம் : ப்ரஸித்தாமான சதாசிவ ப்ரஹ்மேந்த்ராள் இவருடைய  சிஷ்யர். அவர் அவதூதராகி உன் மத்தரைப் போல் ஆகிவிட்டதால், அவரை அடுத்த பீடாதிபதியாக நியமிக்க முடியவில்லை. ஸதாஸிவப்ரஹ்மேந்த்ரரின் ஸமாதி நிலையை அறியாதவர்கள் இவரிடம் வந்து, உமது சிஷ்யருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்றனராம். அதற்கு ஸ்வாமிகள் அந்த பைத்தியம் எனக்கு பிடிக்கவில்லையே என்றாராம். பரமசிவேந்த்ரர் திருவெண்காடு என்ற சிவக்ஷேத்ரத்தில் ச்ராவன சுக்லபக்ஷ தசமியில் மஹா ஸமாதி அடைந்தார்.
58. விஸ்வாதிகாத்ம போதேந்த்ரர்
அவதரித்தது : விருத்தாசலம்
காலம் : கி.பி. 1586 முதல் 1638 (52 வருஷம்)
முக்தி திதி, தேசம் : இவர் ஸ்ரீருத்ரத்திற்கு பாஷ்யம் செய்துள்ளார். மிகவும் ப்ரஸித்தமான ஸ்ரீபகவன் நாம போதேந்தரர் என்ற தனது சிஷ்யருக்கு ஸந்யாசம் கொடுத்து நாம சித்தாந்தம் செய்யும்படி நியமித்தார். கருட நதி தீரத்தில் அகரம் சமீபம் வடவம்பலம் என்ற கிராமத்தில் ஈஸ்வர வருஷம் துலாமாதம் கிருஷ்ண அஷ்டமியில் ஸித்தியானார். இவரது அதிஷ்டானத்தை மஹாபெரியவாள் கண்டுபிடித்து நித்ய பூஜையும் வார்ஷிக ஆராதனையும் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
59. ஸ்ரீபகவன் நாம போதேந்த்ர ஸரஸ்வதி
அவதரித்தது : காஞ்சிபுரம்
காலம் : 54 வருஷம்
முக்தி திதி, தேசம் :
யஸ்ய ஸ்மரண மாத்ரேண நாமபக்தி: ப்ரஜாயதே தம் நமாமி யதிஸ்ரேஷ்டம் போதேந்த்ரம் ஜகதாம் குரும் காஞ்சிபுரத்தில் புத்ரபாக்யமில்லாத கேசவ பாண்டுரங்கய்யா என்ற பாகவதருக்கு, விஸ்வாதிகேந்த்ர ஸரஸ்வதி என்ற ஆசார்யாளின் அனுக்ரஹத்தால், ஒரு ஆண் குழந்தை பிறந்து புருஷோத்தமன் என்று பெயர் வைத்தனர். புருஷோத்தமனின் லக்ஷணத்தை பார்த்ததுமே, இவன் ஸ்ரீமடத்துக்கே இருக்கட்டுமே என்று குருநாதர் சொல்லவே, பாண்டு ரங்கய்யா தம்பதிகளும் குமாரனை குருவுக்கே அர்ப்பணம் செய்துவிட்டனர்.

புருஷோத்தமன் உபநயனமாகி வேத அத்யயனம், சாஸ்திரங்களில் ப்ரவீணரானார். ஆசார்ய ஸ்வாமிகள் காசி யாத்திரை சென்று அங்கேயே தங்கவிட்டார். புருஷோத்தமனும் அவருடன் படித்த ஞானசேகரனும் ஆசார்யாளை பார்க்க காசிக்கு கால்நடையாகவே புறப்பட்டனர், வழியில் கோதாவரி தீரத்தில் ஞானசேகரன் கடுமையான ஜுரத்தால் காலமானான். புருஷோத்மனை பார்த்து, நண்பா நீயும் காசி சென்று கங்கையில் ப்ராணத்யாகம் செய்துவிடு. நாம் இருவரும் பரலோகத்தில் சேர்ந்தே இருப்போம் என்றாராம். புருஷோத்தமன் காசியில் ஆசார்யாளை சேவித்து கங்கையில் ப்ராணத்யாகம் செய்ய அனுமதிகேட்டார். ஸந்யாஸம் என்பது மறுபிறவிக்கு சமம் எனவே, நீ ஸ்நயாஸம் பெற்றுக் கொண்டால், சொன்னதை நிறைவேற்றியதாக ஆகும் என்று சொல்லி ஆசார்யாள் காசியிலேயே புருஷோத்தமனுக்கு ஸந்யாசம் கொடுத்து பகவன் நாம போதேந்த்ர ஸரஸ்வதி என்ற பெயரையும் சூட்டினார்.

ஜகந்நாதபுரியில் லக்ஷ்மீதரகவி எழுதிய பகவன் நாம் கவுமுதி என்ற நாமஸித்தாந்தம் இருக்கிறது. நீ அதைப்போய் பார்த்து விட்டு காஞ்சிக்கு போய் நாம சித்தாந்தம் செய், என்று ஆசார்யாள் சொல்லவே, போதேந்த்ரரும் ஜகன்னாதபுரி வந்தார். லக்ஷ்மீதர கவியின் புத்ரரான ஜகன்னாத கவியின் வீட்டில் தங்கியிருந்தார். அப்பொழுது தக்ஷிணதேசத்திலிருந்து யாத்ரையாக புறப்பட்டு வந்த ஒரு ப்ராமண தம்பதி, கண்ணீருடன் தங்கள் கதையை தெரிவித்தனர். தன் மனைவியை, ஒரு ம்லோச்சன் தூக்கிச் சென்று கெடுத்துவிட்டான். அவளுக்கு ஏதாகிலும் ப்ராயச்சித்தம் உண்டா? இனி சேர்த்துக் கொள்ளலாமா என்ற ப்ராமணர் கேட்டார். அதற்கு ஜகன்த கவி, ராம, ராம, ராம என்று மூன்று தரம் சொல்லிவிட்டு, சேர்த்து வைத்துக் கொள் என்றார். அதற்குள் ஜகன்னாத கவியின் தாயார், ஒரு தரம் ராம நாமம் சொன்னாலேயே போதுமென்று உனது தந்தை சித்தாந்தம் செய்திருக்கும் பொழுது, நீ ஏன் 3 தரம் என்று சொன்னாய் என்றாள். இந்த சமயம் அங்கிருந்த ஸ்ரீபோதேந்த்ராள் நாம ஸித்தாந்தத்தை வாங்கி பார்த்து மனதில் தரித்துக் கொண்டார். பிறகு உலகமறிய நாம் மஹிமையை நிரூபணம் பண்ண வேண்டி, அம்மாளை திருக்குளத்தில் ஸ்நானம் செய்யச் செய்தார். அம்மாள் வெளிவரும் போது ம்லேச்சவேஷம் மறைந்து, ப்ராமண ஸ்திரீவேஷத்துடன் மடிசாரும் மஞ்சள் குங்குமமும் தாலியுமாய் வந்தாள். பிறகு அந்த தம்பதிகள் கையாலேயே பிக்ஷை ஏற்றுக் கொண்டார் ஸ்வாமிகள்.

பிறகு போதேந்த்ராள் காஞ்சிபுரம் வந்து நாமஸித்தாந்த க்ரந்தங்களை செய்தார். காசியிலிருந்து திரும்பி வந்த ஆசார்யாள், போதேந்த்ராள் இருவருமாக புறப்பட்டு ராமேஸ்வர யாத்ரை சென்றனர். கடிலம் நதிக்கரை வந்ததும், ஆசார்யாள் மஹாஸமாதி அடைந்தார். பிறகு போதேந்த்ரர் காமகோடி பீடத்தில் பட்டாபிஷக்தர் ஆனார். பிறகு பல ஊர்களில் ஸஞ்சாரம் செய்தார். பெரம்பூரில் ஒரு ஊமை பையன் ஸ்வாமிகளின் உச்சிஷ்ட ப்ரஸாதம் சாப்பிட்டு பேசும் திறமை பெற்றான். மத்யார்ஜுனம் சென்று ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாளை சந்தித்தார். இருவருமாக பல ஊர்கள் சென்று நாம் ப்ரசாரம் செய்து சகல ஜனங்களையும் உத்தாரணம் செய்தனர். ப்ரஜோத்பத்தி வருஷம், பாத்ரபத மாதம் பூர்ணிமா அன்று கோவிந்தபுரத்தில் ஸ்வாமிகள் ஜீவ ஸமாதி அடைந்தார். 54 வருஷங்கள் பீடாதிபதியாக இருந்தார்.
60. அத்வயாத்மப்ரகாசர்
அவதரித்தது : திட்டக்குடி
காலம் : கி.பி. 1692 முதல் 1704 (12 வருஷம்)
முக்தி திதி, தேசம் : சைத்ரக்ருஷ்ண த்விதியை 56 வது ஆசார்யாள் முதல் 60 வது ஆசார்யாள் வரை அத்வயாத்ம ப்ரகாசரால் செய்யப்பட்ட ஸ்லோகங்கள், காஞ்சியில் ஸித்தியானார்
 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar