Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அன்பர் அளித்த களி
 
பக்தி கதைகள்
அன்பர் அளித்த களி


கண்டராதித்த சோழ மன்னர் ஆட்சி செய்த காலம் அது. அவர் தினமும் சிவபூஜை செய்யும் பழக்கம் கொண்டவர். இப்படி ஒருநாள் தீபாராதனை முடிந்ததும் அரசி செம்பியன் மாதேவியை அழைத்தார்.
‘‘தினமும் பூஜையின் நிறைவில் ஒலிக்கும் தில்லைச் சிற்றம்பலவனின் திருப்பாதச் சலங்கை ஒலி இன்று ஏன் கேட்கவில்லை? வழிபாட்டில் ஏதாவது குறை வந்துவிட்டதோ’’ என மாதேவியிடம் வருந்தினார்.
‘‘இன்று ஒலிக்காவிட்டால் என்ன? நாளை நிச்சயம் கேட்கும்’’ என்றார் செம்பியன் மாதேவி. இருந்தாலும் அவருக்கு திருப்தியில்லை. சாப்பிடாமல் துாங்கச் சென்றார். அப்போது அசரீரி ஒன்று கேட்டது.  ‘சிவஞானச் செல்வரே! வருந்தாதீர். இன்று சேந்தனது இல்லத்தில் களி உண்ணச் சென்றேன். நாளைய தேர்த் திருவிழாவில் சேந்தனை நீ காண்பாய்’ என்றது.
‘ஆஹா... அருமை. சேந்தன் எங்கு இருக்கிறார். அவரது அன்புக்கு முன் நான் எம்மாத்திரம். அவரைக் கண்டு வணங்க வேண்டும்’ என்று மன்னரின் மனம் துடித்தது.
சேந்தனார் சிறந்த சிவபக்தர். அவர் விறகுவெட்டுபவர். சிவனடியாருக்கு உணவளித்த பின்னரே, சாப்பிடும் பழக்கம் உள்ளவர். ஒரு திருவாதிரை நாளன்று மழை பெய்து கொண்டிருந்தது. அந்நேரம் பார்த்து சிவனடியார், வீட்டிற்கு வந்தார். வீட்டிலோ உணவு இல்லை. அவரது மனைவி அரிசி மாவுடன் சர்க்கரை கலந்து களி செய்து அடியாருக்கு படைத்தார். திருப்தியாக சாப்பிட்டு மீதியை தனது ஆடையில் கட்டிக் கொண்டு கிளம்பினார்.
மறுநாள் காலையில் தீட்சிதர்கள் சிதம்பரம் கோயிலைத் திறந்தனர். அப்போது நடராஜர் திருமேனியின் மீது களி சிந்தியிருந்தது. அதைப் பார்த்தவர்கள் ‘அபசாரம் நடந்து விட்டது’ என பயந்தனர். இதை தேர்த் திருவிழாவைக் காண வந்திருந்த மன்னரிடம் தெரிவித்தனர். இதைக் கேட்டவர், ‘ஆஹா... களி உண்ட களிப்பின் அழகை கனக சபையிலும் காட்டி விட்டான் ஆடல் வல்லான்’ என மகிழ்ந்தார்.  முதல் நாள் இரவு நடந்ததை அனைவரிடமும் கூறினார். அந்த நேரத்தில் கோயிலின் தேர் ஒரு பள்ளத்தில் இறங்கியது. பலர் முயன்றும் தேர் அசையவில்லை. அப்போது அசரீரி ஒன்று, ‘சேந்தா! தேர் நடக்க திருப்பல்லாண்டு பாடு’ என்றது.
கூட்டத்தில் நின்றிருந்த சேந்தனார், பாட ஆரம்பித்தார். மீண்டும் தேரை இழுக்கவே, தேர் வலம் வந்தது. சேந்தனாரைக் கண்டு கட்டித் தழுவிய மன்னர், ‘‘சிவபெருமானுக்கு களி அமுது ஊட்டியவரே! உங்களை தலைவணங்குகிறேன்’’ என்றார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar