Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வினை விதைத்தவன் வினை
 
பக்தி கதைகள்
வினை விதைத்தவன் வினை

ராமசாமி என்பவரின் தோட்டத்தில் முருங்கை மரங்கள் சில இருந்தன. வாரம் ஒருமுறை காய்களைப் பறிக்கும் அவர், நகரத்தில் உள்ள மளிகைக்கடையில் விற்பனை செய்வார். சுவையும், மணமும் அதிகம் என்பதால் பலர் வாங்குவர். இதைப் பயன்படுத்தி, கடைக்காரரும் கூடுதல் லாபம் சம்பாதித்தார். ராமசாமி நன்கு அறிமுகமாகி விட்டதால் அவர் கொண்டு வரும் காய்களை எடை போடாமலே வாங்கத் தொடங்கினார் கடைக்காரர்.  ராமசாமி சொல்வதை அப்படியே ஏற்று, அதற்குரிய பணம் அல்லது மளிகைப்பொருட்களை கொடுப்பார். காரணம் ராமசாமியின் நேர்மையும் நாணயமும் கடைக்காரருக்கு பிடித்திருந்தது.  
ஒரு நாள் ராமசாமி பத்து கிலோ காயை கொடுத்துவிட்டு பணம் வாங்கிச் சென்றார். சிறிது நேரத்தில் பத்து கிலோ முருங்கைக்காய் தேவை என சமையல்காரர் ஒருவர் கேட்க, கடைக்காரர் காய்களை எடையிட்டார். தராசு முள் ஒன்பது கிலோவைக் காட்டியது. ராமசாமியின் நம்பிக்கை துரோகத்தை கடைக்காரரால் சகிக்க முடியவில்லை. இத்தனை வருடமாக எடை குறைவாக காய் வாங்கி ஏமாந்ததை எண்ணி மனம் நொந்தார்.

நான்கு நாள் கழித்து ராமசாமி மீண்டும்  முருங்கைக்காயுடன் வந்தார். எத்தனை கிலோ என கடைக்காரர் கேட்க, ’பத்து கிலோ’ என்றார் ராமசாமி. அவரது கண்முன் எடை போட்டு பார்க்க ஒன்பது கிலோ இருந்தது. கோபம் கொப்பளிக்க கடைக்காரர் ’பளார்’ என ராமசாமியை அறைந்தார். ”இத்தனை நாளா இப்படித்தான் ஏமாத்துறியா? அப்பாவின்னு நினைச்சுத் தானே எடை போடாம வாங்கினேன். இப்படி துரோகம் பண்ணிட்டியே” என வசை பாடினார். ஏதும் புரியாமல் திகைத்தார் ராமசாமி. ”ஐயா... மன்னிச்சிடுங்க!  எடை பார்க்க படிக்கல் என்கிட்ட இல்லீங்க. அதுக்கு பதிலா நீங்க தர்ற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வைச்சி தான் எடை பாக்கிறேன். இதை தவிர வேறேதும் தெரியாதுங்க” என பதிலளித்தார். செருப்பால் அடித்தது போலிருந்தது கடைக்காரருக்கு. தான் செய்த துரோகம் தனக்கே திரும்பியதை உணர்ந்தார். விதைத்தது தானே முளைக்கும். ஆகவே நல்லதை மட்டுமே விதைப்போம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar