Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » உள்ளம் உருகுதய்யா முருகா...
 
பக்தி கதைகள்
உள்ளம் உருகுதய்யா முருகா...

இலங்கையிலுள்ள கதிர்காமத்தில் கருங்காலி மரங்கள் நிறைந்த காட்டில் வேடர்கள் வாழ்ந்தனர். அதில் ஒருவன் துணிச்சலுடன் விலங்குகளை வேட்டையாடுவான். ஆனால் அவனது மனம் மட்டும் முருகா... முருகா... என கடவுள் திருநாமத்தை எப்போதும் ஜபிக்கும். தினமும் காலையில் நீராடும் அவன்  மாணிக்க கங்கை ஆற்று நீரையும், பூக்களையும் எடுத்து கோயில் பூஜைக்கு கொண்டு செல்வான். ஐம்பது ஆண்டுகளாக தினமும் முருகனை வழிபட்டு பக்திப்பழமாக இருந்தான். ஒருநாள் காலையில் கோயிலுக்குச் செல்லும் வழியில் சிங்கம் ஒன்று எதிர்ப்படவே, வழிபாட்டுக்கு இடையூறு நேரக் கூடாது என எண்ணி சற்று விலகி நின்றான். ஆனால் அது விடுவதாக இல்லை. வேடன் மீது பாய வந்தது.  “ ஏ! சிங்கமே! கடந்த ஐம்பது ஆண்டுகளாக தினமும் முருகப்பெருமானை வழிபடுகிறேன். இன்றோடு நான் பூஜிக்க ஆரம்பித்து ஐம்பது ஆண்டு நிறைவு பெறுகிறது. அதனால் இன்று என்னை கோயிலுக்கு செல்ல அனுமதிப்பாயா” என கெஞ்சினான்.

 “ இந்த ஐம்பது ஆண்டில் எங்கள் இனத்தில் எத்தனை உயிர்களை நீ கொன்றிருக்கிறாய்? பழிக்குப் பழி தீர்க்கும் விதமாக உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன் ” என சிங்கம் கர்ஜித்தது. “முருகனை வழிபட்டபின் மீண்டும் நிச்சயம் திரும்பி வருவேன். இது முருகன் மீது சத்தியம். அதுவரை பொறுத்திரு”  என்றான் வேடன். மனம் இரங்கிய சிங்கம் “வேடனே! முருகன் மீது சத்தியம் செய்ததால் அனுமதிக்கிறேன். நீ வரும் வரை இங்கேயே காத்திருக்கிறேன்” என்றது. வேடன் பரபரப்புடன் கோயிலுக்கு விரைந்தான்.  “முருகா... ஐம்பது ஆண்டாக  உன்னை வழிபடும் பாக்கியத்தைக் கொடுத்தாய். இன்றோடு என் ஆயுளும் சிங்கத்தால் முடியப் போகிறது. அதற்குள் உன்னை நேரில் தரிசிக்கும் பாக்கியம் தருவாயா” என கண்களை மூடி மனம் உருகினான். சற்று நேரத்தில் கோயில்மணியின் ஓசை காதில் விழுந்தது.  வேடனுக்கு சிங்கத்தின் நினைவு வரவே, அது நின்றிருந்த இடம் நோக்கி விரைந்தான். “ஏ...சிங்கமே! தாமதமாக வந்த என்னை மன்னித்து விடு. உன் விருப்பம் போல் கொன்று புசித்துக் கொள்” என தலை குனிந்து நின்றான். பாயப் போகிறது சிங்கம் என எதிர்பார்த்த அவனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அவனது தோள்களின் மீது தன் முன்னங்காலால் தடவிக் கொடுத்தபடி நின்றது அது. வேடன் கண்களைத் திறந்தான் சிங்கம் மாயமாக மறைந்தது. புன்னகைத்தபடி முருகப்பெருமான் மயில் வாகனத்தில் காட்சியளித்ததோடு வேடனுக்கு நற்கதியளித்தார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar