Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அன்பே... கொஞ்சம் நில்!
 
பக்தி கதைகள்
அன்பே... கொஞ்சம் நில்!

ஒரு சமயம், தேவலோகத்தில், அளவுக்கு மீறி, அமிர்தத்தைச் சுவைத்ததால் என்ன செய்கிறோம் என்பதை மறந்து, பூஜைக்குரிய, பூங்கா வனத்தை நாசம் செய்தனர் தேவர்கள். கோபமுற்ற தேவேந்திரன், ’நீங்கள் செய்த இப்பாவ செயலுக்கு, பூலோகத்தில், தேனீக்களாக மாறி, பூச்செடிகளிலிருந்து, தேன் சேகரித்து, உண்ணுங்கள். கஷ்டப்பட்டு, உழைத்தால் தான், புத்தி வரும்...’ என சபித்தார். ’பிரபு... அறியாமல் செய்த இக்குற்றத்தை மன்னித்து, தங்களுக்கு பணிவிடை செய்ய அருள் புரிந்து, சாப விமோசனம் அளியுங்கள்...’ என்று வேண்டினர். ’அற்பர்களே... நீங்கள் செய்ததோ மாபெரும் குற்றம்; கொடுத்த சாபம் கொடுத்தது தான்; அதை திரும்பப் பெற இயலாது. இருப்பினும், இச்சாபத்திலிருந்து விடுதலை பெற, ஒரே வழிதான் உள்ளது; தேன் சேகரிக்க வரும் வேடர்கள், தேன் அடையில் வாழும் உங்களை, தீயால் விரட்டி, தேனை சேகரிக்காமல், எவன் ஒருவன், உங்கள் வேண்டுகோளின் படி, தீங்கு செய்யாமல், தேனைச் சேகரித்து, நீங்கள் வாழும் தேன் அடையை கடலில் வீசி எறிகிறானோ, அப்போது, உங்கள் சுய உருவை அடைந்து, இங்கு வருவீர்கள்...’ என்றார், தேவேந்திரன். தேனீக்களாக மாறிய தேவர்கள், விந்தியமலை சாரல் காட்டில் உள்ள ஒரு மரத்தில், வாசம் செய்தனர்.

வழக்கம் போல், வேடர்கள், தீப்பந்தத்தை கொளுத்தி, தேனீக்களை விரட்டினர். ஒரு தேனீ, தன் இனிய குரலில், ’அன்பார்ந்த வேடர்களே... எங்களை தீப்பந்தத்தில் சுடாதீர்; உங்களுக்கு வேண்டிய தேனை தருகிறேன்...’ என்றது. வேடர் தலைவன் இக்குரலைக் கேட்டு, ’ஏதோ பிரமை போல் தோன்றுகிறது; தேனீயாவது பேசுவதாவது’ என்று சிரித்தபடியே சென்று விட்டான். இப்படியே நாட்கள் சென்றன; துன்பத்திலிருந்து, விடுதலைக் கிடைக்காமல், தேனீக்கள் தவித்தன; கடவுளிடம் வேண்டின. ஒரு நாள் - நல்ல உள்ளம் படைத்த கண்ணன் என்ற வேடன், தீ பந்தத்ததோடு வந்தான்; வழக்கம்போல், ’அன்பனே... கொஞ்சம் நில்; நான் சொல்வதைக் கேள்; உன்னை செல்வந்தனாக மாற்றுவேன்...’ என்றது ஒரு தேனீ. அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த கண்ணன், தான் காண்பது கனவா அல்லது நெனைவா என்ற குழப்பத்தோடு, தேனீயின் வேண்டுகோளின்படி, தீப்பந்தத்தை எறிந்தான். ’நண்பனே... நாங்கள் தேவர்கள்; எங்கள் தலைவரின் சாபத்தால், தேனீக்களாக மாறி அல்லல் படுகிறோம்; எங்களைக் காப்பாற்ற, நீ தான் உதவ வேண்டும்; அதாவது, நீ எங்களுக்கு எவ்வித தீங்கும் செய்யாமல், தேனை எடுத்து, எங்கள் அடையை கடலில் வீசி எறிந்து விடு; இதைச் செய்தால், உன்னை பெரிய செல்வந்தனாக மாற்றுவோம்...’ என்றது. ’நான் உங்களுக்கு ஒரு தீங்கும் விளைவிக்க மாட்டேன்; உங்கள் விருப்பப்படியே செய்கிறேன்...’ என கூறி, தேன் அடைக்கு அருகில் சென்றதும், சுரைக் குடுகையில், தேன் தானாகவே நிரம்பியது; உடனே, தேன் அடையை எடுத்து, கடலில் வீசினான்; அடுத்த நிமிடம் தேனீக்கள் தேவர்களாக மாறினர்.

’நண்பனே... நீ தினமும் நாங்கள் வசித்த மரத்தடியில், உன் சுரை குடுக்கையை வைத்தால், அது நிறைய தேவாமிர்த தேன் நிரம்பும். அதை அருந்துபவர், எந்த நோயால் அவதியுற்றாலும், அதிலிருந்து நிவாரணம் பெறுவர்; அதனால், நீ மேன்மை அடைவாய்...’ என கூறி மறைந்தனர். அதன்படி, தினமும் கண்ணனும், மரத்திலிருந்து தேனை சேகரித்து, நகரத்தில் பெரிய செல்வந்தர்களுக்கு, தேவாமிர்த தேனை அளித்து, அவர்களை நோயிலிருந்து சுகம் பெற செய்தான்; இத்தேனை பருகியதால், இளமை தோற்றம் பெற்றனர் பலர். மக்கள் ஆதரவினால், பெரிய செல்வந்தனாக மாறினான். கண்ணனின் அருகில் வசித்த நாதன் என்ற வேடன், இவனது முன்னேற்றத்தைக் கண்டு, பொறாமை கொண்டான். நானும் தான், தேன் சேகரித்து வருகிறேன். ஆனால், கண்ணன் கொண்டு வரும் தேன் எப்படி தேவாமிர்தமாகிறது. ’இதில், ஏதோ சூழ்ச்சி இருக்கிறது’ என, சந்தேகப்பட்டு ஒருநாள் அவனைப் பின் தொடர்ந்தான். கண்ணன், மரத்தடியில் தேன் சேகரித்துச் செல்வதைப் பார்த்து, ஆச்சரியப்பட்டு அது போல் தேன் எடுத்து, தானும் செல்வந்தனாக மாறலாமென்று பேராசை கொண்டான். பொறாமையும், பேராசையும் நாதனை வழி தவறச் செய்தது. ஆகவே, யாரும் அறியாமல், தன் குடுவையை எடுத்து, அவசர அவசரமாக மரத்தடியை அடைந்தான். நற்குணம் கொண்ட கண்ணனுக்கு தான், தேவர்கள் அருள் புரிந்தனர்; பேராசை பிடித்தவர்களுக்கல்ல. அதனால், குடுவையை நாதன் மரத்தடியில் வைத்ததும், தேனீக்கள் எங்கிருந்தோ கூட்டமாக வந்து, அவனை சூழ்ந்து கொட்டின. வலி தாங்காமல், ஓட்டம் பிடித்தான் நாதன்; அப்போதும், அவனை விட்ட பாடில்லை.

’கடவுளே... நான் செய்தது தவறு தான்; என்னைக் காப்பாற்றுங்க...’ என கதறினான். தேனீக்கள் மறைந்தன; ஆனால், தேனீக்கள் கொட்டிய வேதனை தாங்காமல் கண்ணனின் காலில் விழுந்து, பேராசையால் தான் செய்ததைக் கூறி, மன்னிக்கும்படி, வேண்டினான். நற்குணம் படைத்த கண்ணன், ’நண்பா... நீ செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டாய்... கவலைப்படாதே...’ என்று ஆறுதல் கூறி, தேவாமிர்த் தேனை, பருக செய்தான்; அடுத்த நிமிடமே, அவன் வேதனை மறைந்தது. ’அன்பு காட்டி, மற்றவர்களுக்கு உதவி செய்தால், நீ உயர்வடைவாய்; இந்த பண்புடன், நேர்மையாய் உன் தொழிலைச் செய்...’ என்று அறிவுரை கூறினான். நாதனும் திருந்தி, மக்களிடம் பாராட்டுப் பெற்று மேன்மை அடைந்தான். குட்டீஸ்... நீங்க நல்லவர்களா இருந்தா, அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். மற்றவர்களை பார்த்து பொறாமைபட்டு, கெட்ட புத்தி உள்ளவர்களா இருந்தா, நல்லவர்களிடம் போய் மன்னிப்பு கேட்க வேண்டிய சூழ்நிலை வந்துடும். எனவே, யாரைபோல் இருக்கணும் என்பதை நீங்களே முடிவு செய்துகோங்க.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar