Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » எனக்கு எல்லாம் தெரியும்!
 
பக்தி கதைகள்
எனக்கு எல்லாம் தெரியும்!

“எனக்கு எல்லாம் தெரியும்“ என்ற எண்ணம், பெரிய கொம்பனை கூடத் தலைகீழாகக் கவிழ்த்திருக்கிறது. இதில் இருந்து தப்பிக்க என்ன வழி?  ஒரு சமயம் பிரம்மாவுக்கு கர்வம் உண்டானது. “வேதங்கள் அனைத்திலும் வல்லவன் நானே! என்னால் மட்டுமே படைப்புத் தொழிலைச் செய்ய முடியும்” என்றெல்லாம் நினைத்தார். சூடேறும் பாத்திரத்தில் தண்ணீர் ஆவியாவது போல, ஆணவச்சூடு ஏறியதும் பிரம்மாவிடம் இருந்த வேதங்கள் மறைந்தன. இருக்கும் போது ஒரு பொருளின் அருமை தெரிவதில்லை. ஆனால், இழந்த பின் அலைவோம் பாருங்கள்! பிரம்மாவும் அந்த  நிலையில் தான் இருந்தார். மறுபடியும் வேதங்களை மீட்க மகாவிஷ்ணுவை நோக்கித் தவமிருப்பதை தவிர வழியில்லை என தீர்மானித்தார்.  “எந்த இடத்தில் தவம் செய்வது?” என்ற எண்ணம் எழுந்தது. தகுந்த இடம் தேடி வர தன் சீடரான தர்மதாரன் என்னும் பிரம்மச்சாரியை அனுப்பினார்.   இதற்கிடையில், பிரம்மாவின் முகத்தில் இருந்து, கூனலாக, கருப்பாக ஒரு பெண் வெளிப்பட்டாள். அவள் மனதில், காம விகாரம் அப்பியிருந்தது.  “நான் விரும்பியதை அடைய வழி கூறுங்கள்” என பிரம்மாவை வேண்டினாள். பிரம்மா தன் கழுத்தில் இருந்த மாலையை எடுத்து வீசி,“இந்த மாலை எங்கு விழுகிறதோ, அங்கு தவம் செய்”  என கட்டளையிட்டார்.

பூமியில், ’காதம்பரி வனம்’ என்ற இடத்தில் மாலை விழுந்தது. அங்கு புறப்பட்ட அவள், சிவனை தியானித்து தவத்தில் ஈடுபட்டாள்.  அவளுடைய தவத்திற்கு இணங்கி சிவன் எழுந்தருளினார்.“என்ன வரம் வேண்டும் உனக்கு?” எனக் கேட்டார்.  அவள் என்ன கேட்டாள் தெரியுமா... “நான் மிகவும் அழகுள்ளவளாக இருக்க வேண்டும். என் அழகை கண்டு அனைவரும் மயங்க வேண்டும்.  நான் யாரை விரும்பினாலும், அவர்கள் எனக்கு கட்டுப்பட்டு, எல்லா சுகங்களையும் தர வேண்டும்” என்றாள். “உன் விருப்பம் நிறைவேறும்” என்ற சிவன், அவளுக்கு ’தாமசி’ என பெயரிட்டார். நினைத்தது நடக்கும் என்றால், கேட்கவா வேண்டும்? தாமசியைக் கையில் பிடிக்க முடியவில்லை. அவள் இஷ்டப்படி அலைய ஆரம்பித்தாள். அந்த நேரத்தில், பிரம்மாவால் பூலோகத்திற்கு அனுப்பப்பட்ட தர்மதாரனை சந்தித்தாள்.  அவனது அழகில் மயங்கிய தாமசி, அவனை  தன் வசப்படுத்திக் கொண்டாள்.  இந்த விஷயம் அறிந்த பிரம்மா, தாமசியைக் கிழப்புலியாக அலையும்படி சாபம் கொடுத்தார். தர்மதாரனையும், “என்னை புறக்கணித்து தாமசியுடன் அலைந்த நீ, தேவநிலை இழந்து சாதாரண மனிதனாக அலைவாய்” எனச் சபித்தார். சாபம் பெற்ற இருவரும் மன்னிப்பு வேண்டினர். “தாமிரபரணி தீர்த்தம் எப்போது உங்கள் மீது படுகின்றதோ, அப்போது விமோசனம் கிடைக்கும்” என்றார் பிரம்மா.  அதன் பிறகு பிரம்மா, தன் கையில் உள்ள கமண்டலத்தை, தான் தவம் செய்யத் தகுந்த இடம் பார்த்து வர அனுப்பினார். கமண்டலமும் காதம்பரி வனத்தையே தேர்ந்தெடுத்தது. பிரம்மா காதம்பரி வனம் சென்று, மகாவிஷ்ணுவை நோக்கி தவமிருந்தார்.  

தரிசனம் அளித்த மகாவிஷ்ணு, “பிரம்மதேவா... உன் தவம் கண்டு  மகிழ்ந்தோம். நீ தவம் செய்த இந்த காதம்பரி வனம் (இத்தலமே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம்) பாற்கடலையும் விட மகிமை மிக்கது. பிரம்மா இழந்த வேதங்களை, அவருக்கு அளித்து விட்டு மறைந்தார் மகாவிஷ்ணு. அதே சமயம் பிரம்மாவால் சபிக்கப்பட்ட கிழப்புலியான தாமசியும், தர்மதாரனும் இங்கு ஓடும் தீர்த்தத்தில் நீராட வந்தனர். அதன்  பயனாக, தாமசி மற்றும் தர்மதாரனும் மீண்டும் சாப விமோசனம் அடைந்தனர்.  அப்போது அங்கு வந்த அகத்திய முனிவரிடம் தாமசியும், தர்மதாரனும் நடந்த வரலாற்றை விவரித்தனர். தாமசி, “அகத்தியரே! எனக்கு நல்ல கணவனைத் தந்தருள வேண்டும்” என வேண்டினாள். “பெண்ணே! சமுத்திர ராஜனின் மகனான சங்கராஜனை கணவராக அடைவாய். இனி உனக்கு தாமசி’ என்ற பெயர் வேண்டாம். மதுமதி’ என பெயர் சூட்டுகிறேன்” என்றார். அவரது வாக்குப்படி, மதுமதிக்கு திருமணம் நிகழ்ந்தது. தேவர்கள் வாழ்த்தினர். சங்கராஜனும், மதுமதியும் சிவனை வழிபட்டு மீண்டும் தேவர் உலகை அடைந்தனர். தர்மதாரன் பிரம்மாவை சென்றடைந்தான். இந்த கதையில் வரும் தாமசி என்பது கீழான எண்ணத்தைக் குறிக்கும். தர்மதாரனை வசப்படுத்தியது போல, உலகிலுள்ள அனைவரையும் சோம்பல் ஆட்டிப் படைக்க துடிக்கிறது. அதிலிருந்து விடுபட வேண்டுமானால், பக்தியை நாம் துணையாக கொள்ள வேண்டும்.   ஆணவம் வந்தால் அல்லல்பட வேண்டியது தான் என்பதை உணர்த்தும் வரலாறு இது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar