Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> தர்ம சாஸ்தா ஸ்துதி தசகம்
தர்ம சாஸ்தா ஸ்துதி தசகம்
தர்ம சாஸ்தா ஸ்துதி தசகம்

ஆசானுரூப பலதம் சரணாரவிந்த
பாஜாமபார கருணார்ணவ பூர்ண சந்த்ரம்
நாசாய ஸர்வ விபதாமபி நௌமி நித்ய-
மீசான கேசவ புவம் புவநைக நாதம்

தன் சரண கமலத்தை அடைந்தவர்களுக்கு விரும்பிய பயனை அளிப்பவரும், கரை இல்லாத கருணையாகிற கடலுக்கு முழு நிலவு போன்றவரும், ஹரிஹரபுத்திரரும், உலகங்களுக்கெல்லாம் ஒரே நாயகனாய் இருப்பவருமான ஸ்ரீசாஸ்தாவை எல்லாவித ஆபத்துக்களும் விலகுவதற்காக எப்போதும் நமஸ்கரிக்கிறேன்.

பிஞ்சாவலீ வலயிதா கலித ப்ரஸூன
ஸஞ்ஜாத காந்தி ப்ரபாஸுர கேசபாரம்
சிஞ்ஜான மஞ்ஜு மணிபூஷண ரஞ்ஜிதாங்கம்
சந்த்ராவதம்ஸ ஹரி நந்தனம் ஆச்ரயாமி

மயில் தோகையைச் சுற்றிலும் தொடுக்கப்பட்ட புஷ்பங்களிலிருந்து உண்டான ஒளிக் கற்றைகள் விளங்கும் கேசபாரத்தை உடையவரும், சப்திக்கின்ற அழகான ரத்ன ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டும் அங்கங்களை உடையவரும், சந்திரசேகரன் விஷ்ணு இவர்களின் புத்திரருமான சாஸ்தாவை வணங்குகிறேன்.

ஆலோல நீல லலிதாலக ஹார ரம்ய
மாகம்ர நாஸம் அருணாதரம் ஆயதாக்ஷம்
ஆலம்பனம் த்ரிஜகதாம் ப்ரமதாதிநாத
மானம்ர லோக ஹரி நந்தனம் ஆச்ரயாமி

கருத்து அழகிய கேசச்சுருள்கள் மாலைகளாக ஆடும் அழகு வாய்ந்தவரும், அழகான நாசியையுடையவரும், சிவந்த உதடுகளையும், நீண்ட கண்களையும் உடையவரும், மூவுலகிற்கும் ஆதாரமானவரும் சிவகணங்களுக்குத் தலைவனுமான ஹரிஹர புத்திரனை நமஸ்கரிக்கிறேன்.

கர்ணாவலம்பி மணிகுண்டல பாஸமான
கண்டஸ்த்தலம் ஸமுதிதானன புண்டரீகம்
அர்ணோஜநாப ஹரயோரிவ மூர்த்திமந்தம்
புண்யாதிரேகமிவ பூதபதிம் நமாமி

காதுகளில் தொங்கும் ரத்ன குண்டலங்களால் ஒளிரும் கன்னங்களை உடையவரும், பத்ம நாபன் மற்றும் சிவனின் புண்ணியமே திரண்டு உருவமெடுத்து வந்ததுபோல் விளங்குகிறவரும், பூதங்களுக்கு நாயகருமான சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

உத்தசண்டசாரு புஜ தண்ட யுகாக்ரஸமஸ்த
கோதண்டபாண மஹிதாந்தமதாந்த வீர்யம்
உத்யத் ப்ரபா படால தீப்ரமதப்ரஸாரம்
நித்யம் ப்ரபாபதிமஹம் ப்ரணதோ பவாமி

உயர்ந்தும் அழகியதுமான இரண்டு கைகளிலும் வில், அம்பு ஆகியவற்றை தரித்தவரும், சத்ருக்களை நாசம் செய்கிறவரும், அளவற்ற பராக்கிரமத்தை உடையவரும், மிக்க பலசாலியும், ஒளி மயமாக விளங்குகிறவரும், ஒளிக்கு இருப்பிடமுமான சாஸ்தாவை தினந்தோறும் நமஸ்கரிக்கின்றேன்.

மாலேயபங்க ஸமலங்க்ருத பாஸமான
தோரந்தராள தரளாமல ஹார ஜாலம்
நீலாதி நிர்மல துகூல தரம் முகுந்த
காலாந்தக ப்ரதிநிதிம் ப்ரணதோஸஸ்மி நித்யம்

மலய பர்வதத்தில் உண்டான சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டுப் பிரகாசிக்கின்ற மார்பில் ஆடுகின்ற மாலைகளை உடையவரும், பரிசுத்தமான நீல வண்ணப்பட்டு வஸ்திரத்தை அணிந்திருப்பவரும், விஷ்ணுவுக்கும் பரமேஸ்வரனுக்கும், பிரதிநிதியாக விளங்குகிறவருமான சாஸ்தாவை எப்பொழுதும் வணங்குகிறேன்.

யத்பாத பங்கஜயுகம் முனயோஸப்யஜஸ்ர
பக்த்யா பஜந்தி பவரோக நிவாரணாய
புத்ரம் புராந்தக முராந்தகயோருதாரம்
நித்யம் நமாம்யஹமமித்ர குலாந்தகம் தம்

மஹரிஷிகள், சம்சாரமாகிற நோயின் நிவர்த்திக்காக இடைவிடாத பக்தியுடன் பாத கமலங்களை பஜிக்கும் தெய்வமாகவும் சிவன் விஷ்ணு இவர்களுடைய புத்திரரும், உதார குணம் உள்ளவரும், சத்ருக் கூட்டங்களுக்கு எமனாக இருப்பவருமான அந்த சாஸ்தாவை நமஸ்கரிக்கின்றேன்.

காந்தம் கலாய குஸுமத்யுதி லோபனீய-
காந்தி ப்ரவாஹ விலஸத் கமனீய ரூபம்
காந்தா தநூஜ ஸஹிதம் நிகிலாமயௌக
சாந்தி ப்ரதம் ப்ரமத நாதமஹம் நமாமி

மிக அழகு வாய்ந்தவரும், காயாம்பூ போன்று மனதைக் கவரும் ஒளிப்பிரவாகமாக விளங்கும் அழகிய உருவத்தை உடையவரும், மனைவி, புத்திரர் இவர்களுடன் கூடியவரும், சகல வியாதிகளையும் போக்குபவரும், முக்கிய கணங்களுக்கு நாயகனுமான சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

பூதேச பூரி கருணாம்ருதபூர பூர்ண-
வாராந்நிதே வரத பக்தஜனைக பந்தோ
பாயாத் பவான் ப்ரணதமேனம் அபாரகோ
ஸம்ஸார பீதமிஹமாம் அகிலாமயேப்ய:

ஓ, பூத நாயகனே, மிகுந்த கருணையாகிற அமிருதப் பிரவாகத்திற்கு ஸமுத்ரம் போன்றவரே, பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்பவரே, பக்தர்களுக்கு முக்கிய உறவாக இருப்பவரே, கரையற்றதும், மிகப் பயங்கரமானதுமான ஜனன மரண துக்கத்தால் மிகவும் பயந்தவனும், தங்களை நமஸ்கரிக்கின்றவனுமான என்னைத் தாங்கள் எல்லாவித வியாதிகளிலிருந்தும் காக்க வேண்டும்.

ஹே பூதநாத பகவன் பவதீயசாரு-
பாதாம்புஜே பவது பக்திரசஞ்சலாமே
நாதாய ஸர்வ ஜகதாம் பஜதாம் பவாப்தி
போதாத நித்யம் அகிலாங்க புவே நமஸ்தே
இதி ஸ்ரீ தர்மசாஸ்து: ஸ்துதி தசகம் ஸமாப்தம்

ஹே பூதத் தலைவனே, ஓ பகவானே, எனக்குத் தங்களது அழகிய பாத கமலங்களில் இடைவிடாத பக்தி ஏற்படட்டும். எல்லா உலகங்களுக்கும் நாதனும் தன்னை பூஜிக்கிறவர்கள் சம்ஸாரக்கடலைத் தாண்டுவதற்குக் கப்பலாக இருப்பவரும்; சூரியன், சந்திரன், வருணன், பூமி, அக்னி, ஸோமயாகம் செய்தவர்கள், வாயு, ஆகாசம்- இந்த எட்டுகளை சரீரமாகக் கொண்ட பரமேச்வரனின் குமாரனுமாகிய தங்களை தினமும் நமஸ்கரிக்கிறேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar