Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> தாராதேவி வழிபாடு!
தாராதேவி வழிபாடு!
தாராதேவி வழிபாடு!

தாரா நாம மஹாசக்தி: வர்த்ததே தாரிணீச்வரீ என்றவாக்கியத்தின்படி, இந்த தேவி, மகாசக்தி படைத்தவள். தசமகா தேவியரில் இரண்டாவது சக்தி. வாழ்க்கையில் ஒற்றுமை வேண்டும் என்றால், இவளை வழிபடுவது அவசியம். சர்வ ஸித்திகளையும் அளிக்கவல்ல இந்த தாராதேவி, ராவணனை வதம் செய்ய ஸ்ரீராமனின் சக்தியாக விளங்கியவள். காளி தேவியின் பல அம்சங்களை உடையவள். தாராதேவியை வழிபடுபவர் ஜீவன் முக்தனாக விளங்குவர். இடைவிடாது பொங்கி வரும் கவிதா சக்தியைப் பெறுவர். அனைத்து துறைகளிலும் தேர்ச்சி உடையவராவார்கள். அரசாங்கத்திலும், அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவர்.

உக்கிரமான காலங்களில் பக்தர்களைக் காப்பதால் இவளை உக்ர தாரா என்றும் வழிபடுகின்றனர். இவள் பிறப்பற்றவள். எனினும் பக்தர்களைக் காப்பதில் காள ராத்ரி அதாவது பிரளய காலத்தில் நான்கு சமுத்திரங்களும் பொங்கி எழ, அந்தச் சமயத்தில் தேவர்களைக் காக்க தோன்றுபவள் (காள ராத்ரி தினே ப்ராப்தே... கலா).

சாக்த தந்த்ரங்கள் பதினோரு இரவுகளைக் கூறுகின்றன. அவை: காள ராத்ரி, வீர ராத்ரி, மோஹ ராத்ரி, மஹா ராத்ரி, க்ரோத ராத்ரி, கோர ராத்ரி, தாரா ராத்ரி, அபலா ராத்ரி, தாருணா ராத்ரி, சிவராத்ரி, திவ்ய ராத்ரி என்பனவாம்.

நரக சதுர்த்தசி தினத்தன்று தீபாவளி கொண்டாடுகிறோம். அன்று அமாவாசை சம்பந்தம் இருப்பின், அது காள ராத்ரி எனப்படும். இந்த நாள் தாரா தேவியை வழிபட மிகச் சிறந்த நாளாகும்.

அதேபோன்று செவ்வாய்க்கிழமையன்று அமாவாசை திதியும் சேர்ந்து கிரஹணமும் ஏற்பட்டால், அது தாரா தேவியின் அருளைப் பெற மிகச் சிறந்த நாளாகும்.

ஜைனர்கள் தாரா தேவியை ப்ரபாவதீ அல்லது பத்மாவதீ என்றும், பவுத்தர்கள் தாரா என்றும், கவுலர்கள் சக்ரா என்றும், சீனர்கள் மஹோக்ரா என்றும் வழிபடுகின்றனர்.

வசிஷ்டர் போன்ற மஹரிஷிகளால் மிகச் சிறந்த முறையில் போற்றப்பெற்ற சக்தி இவள்.

தாரா, உக்ர தாரா, மஹோக்ர தாரா, வஜ்ர தாரா, காளீ தாரா, ஸரஸ்வதீ தாரா, காமேச்வரீ தாரா, சாமுண்டா தாரா என மந்த்ர சாஸ்திரங்கள் இந்த தேவியைப் போற்றுகின்றன.

தாரிணீ, தரளா, தாரா, த்ரிரூபா, தரணீரூபா, ஸத்வரூபா, மஹா ஸாத்வீ, ஸர்வ ஸஜ்ஜன பாலிகா, ரமணீயா, ரஜோரூபா, ஜகத் ஸ்ருஷ்டிகரீ, பரா, பயானகா, காலரூபா, காளிகாக்யா, ஜகத்வித்வம்ஸ காரிகா, தத்வஞானபரா, ஆனந்தா, தத்வஞான ப்ரதா, அனகா, ரக்தாங்கீ, ரக்த வஸ்த்ரா, ரக்தமாலா ப்ரசோபிதா, சித்தலக்ஷ்மீ, ப்ரம்ஹாணீ, பத்ரகாளீ, மஹாலயா என்னும் இந்த முப்பது திருநாமங்களையும் எவரொருவர் தினமும் ஜபிக்கிறார்களோ அவர்களால் உலகில் சாதிக்க முடியாதபடி காரியங்கள் எதுவும் இல்லை என சாக்த தந்திரங்கள் குறிப்பிடுகின்றன.

ஆகவே, இந்த நவராத்திரி காலத்தில் எல்லாம் வல்ல பராசக்தியை தாரா தேவியாக தியானித்து, கீழ்க்காணும் மந்திரங்களைக் கூறி வழிபட்டு எல்லையில்லா வரம்பெறுவோம்.

தாரா காயத்ரி மந்திரம்:


ஓம் தாராயை வித்மஹே உக்ர தாராயை தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

மூல மந்திரம்:

ஓம் தாராயை நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar