Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> துர்க்கா சந்திரகலா ஸ்துதி
துர்க்கா சந்திரகலா ஸ்துதி
துர்க்கா சந்திரகலா ஸ்துதி

ஸ்ரீமான் அப்பய்ய தீக்ஷிதர் (காலம் 16-ஆம் நூற்றாண்டு) 104 நூல்களை யாத்து அளித்து அருளிய மஹான். தனது நூல்களுள் பலவற்றுக்கு அவர் தானே பாஷ்யமும் செய்துள்ளார். அதில் ஒன்று துர்க்கா சந்த்ரகலா ஸ்துதி. இந்த ஸ்தோத்திரம் - அம்பிகை தன் சிரசில் தரித்துள்ள 16 சந்திர கலைகளைப் போன்று 16 ஸ்லோகங்களால் இவளது புகழைத் துதிக்கின்றது.

ஓம் வேதோ ஹரீச்வரஸ்துத்யாம்
விஹர்த்ரீம் விந்த்யபூதரே
ஹரப்ராணேச்வரீம் வந்தே
ஹந்த்ரீம் விபுதவித்விஷாம்

தேவி வணக்கம் (காப்பு): நான்முகன், திருமால், பரமேஸ்வரன் ஆகியோரால் துதிக்கப்படுபவளும், விந்தியமலையில் திருவிளையாடல் புரிந்திருப்பவளும் தேவர்களின் விரோதிகளை அழிப்பவளுமான ஹரனின் ப்ராண நாயகியை வணங்குகின்றேன்.

அப்யர்தநேந ஸரஸீருஹ - ஸம்பவஸ்ய
த்யக்த்வோதிதா பகவத் அக்ஷிபிதா நலீலாம்
விச்வேச்வரீ விபத் அபாகமநே புரஸ்தாத்
மாதா மமாஸ்து மதுகைடபயோர் - நிஹந்த்ரீ

ஐயனின் அருள்விழிகளை, கைகொண்டு மூடிமறைக்கும் திருவிளையாடல் புரிந்தவளே, தாமரையில் தோன்றிய பிரம்மதேவனின் வேண்டுகோளுக்கிணங்க விட்டுவிட்டுத் தோன்றியவளும், மது- கைடபர்களை வதைத்தவளும், உலக நாயகியுமான என் தாய், என் இடர்களைக் களைய வேண்டி எதிரே தோன்றட்டும். (தேவி மஹாத்ம்ய ப்ரதம சரித்திரம் இங்கு குறிப்பிடப்படுகிறது.)

ப்ராங்நிர்ஜரேஷு நிஹதை: நிஜசக்திலேசை
ரேகீபவத்பி: உதிதாகில லோககுப்த்யை
ஸம்பந்த சஸ்த்ர நிகரா ச ததாயுதஸ்தை:
மாதா மமாஸ்து மஹிஷாந்தகரீ புரஸ்தாத்

முன்பு தேவர்களிடத்தில் வைக்கப்பட்ட தன் சக்தியின் அம்சங்களை ஒன்று சேர்த்துக் கொண்டு உலகைக் காக்கத் தோன்றியவளும், அந்தத் தேவர்களின் ஆயுதங்களிலிருந்து வெளிவந்த சக்தியின் அம்சங்களான பற்பல ஆயுதங்களுடன் கூடி மஹிஷாஸுரமர்த்தினியானவளுமான அம்பிகை எதிரே தோன்றட்டும். (தேவிமாஹாத்ம்ய மத்யம சரித்திரம்)

ப்ராலேய சைலதநயா தநுகாந்தி ஸம்பத்
கோசோதிதா குவலயச்சவி சாருதேஹா
நாராயணீ நமதபீப்ஸித கல்பவல்லீ
ஸுப்ரீதிம் ஆவஹது சும்ப நிசும்ப ஹந்த்ரீ

மலைமகளாம் பார்வதியின் தேக ஒளிக்கூட்டத்தில் தோன்றியவளும், நீலோத்பலம் போன்ற தேஜஸ் மிக்க தேகம் உள்ளவளும், வணங்குவோருக்கு வாரி வழங்கக் கற்பகக்கொடிபோல் காத்திருப்பவளும், சும்பநிசும்பர்களை அழித்தவளுமான நாராயணீ என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தட்டும் (தேவிமாஹாத்ம்ய உத்தம சரித்திரம்).

விச்வேச்வரீதி மஹிஷாந்தகரீதி யஸ்யா:
நாராயணீத்யபி ச நாமபிரங்கிதாநி
ஸூக்தாநி பங்கஜ - புவா ச ஸுரர்ஷிபிஸ்ச
த்ருஷ்டாநி பாவகமுகைச்ச சிவாம் பஜே தாம்

வேத - துல்யமான விச்வேச்வரீ, நாராயணீ என்ற நாமங்களடங்கிய துதிகள் யாவும் ஸூக்தங்கள். அவை பிரம்மா முதலான தேவர்கள், முனிவர்கள், அக்னிதேவன் ஆகியோர் மனத்தில் ஸ்புரித்து வெளிவந்தவை. அவ்வாறான ஸூக்தங்களால் துதிக்கப்பட்ட தேவியை நான் பூஜிக்கிறேன். (தேவி மாஹாத்மிய 1, 4 மற்றும் 13-வது அத்யாயங்கள்).

உத்பத்தி தைத்ய ஹநந ஸ்தவந ஆத்மகாநி
ஸம்ரக்ஷகாணி அகில பூதஹிதாய யஸ்யா:
ஸூக்தாநி அசேஷ நிகமாந்தவித: படந்தி
தாம் விச்வமாதரம் அஜஸ்ரம் அபீஷ்டவீமி

தானே தோன்றித் தீயவரை அழித்த தேவியின் மகிமையைக் கூறும் ஸ்தோத்ரம் எல்லோரையும் ஆபத்திலிருந்து காக்க வல்லது என்பதால், அனைத்து உயிர்களின் நன்மையைக் கருதி (நிஷ்காம்யமாக), வேதங்களின் ஸாரமாம் உப நிஷத்துக்களை அறிந்த பெரியோர்கள் அதைப் பாராயணம் செய்கின்றனர். அவர்தம் போற்றுதலுக்குரிய உலகநாயகியை எப்போதும் துதிக்கிறேன். (தேவிமாஹாத்ம்ய பாராயணப் பெருமை.)

யே வைப்ரசித்த புநருத்தித சும்ப முக்யை:
துர்பிக்ஷ கோர ஸமயேந ச காரிதாஸு
ஆவிஷ்க்ருதா: த்ரிஜகத் ஆர்திஷு ரூபபேதா:
தைரம்பிகா ஸமபிரக்ஷது மாம் விபத்ப்ய:

வைப்ரசித்தன், மீண்டும் எழுந்த சும்பன் முதலானோரால் மூவுலகிற்கும் ஏற்பட்ட இடர்ப்பாடுகளையும் அச்சத்தையும் அகற்ற வேண்டி, எந்த தேவி ரக்ததந்திகா முதலான தோற்றங்களில் அவதரித்தாளோ, அவள் அதே போன்ற தோற்றங்களைக் கொண்டு என்னையும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவாளாக. (தேவி மாஹாத்மியம் 11-ஆம் அத்யாயம்.)

ஸூக்தம் யதீயம் அரவிந்த பவாதி த்ருஷ்டம்
ஆவர்த்ய தேவ்யநுபதம் ஸுரதஸ் -ஸமாதி:
த்வாவபி அவாபது: அபீஷ்டம் அநந்ய லப்யம்
தாமாதி தேவதருணீம் ப்ரணமாமி தேவீம்

ஸுரதன் என்ற அரசனும், ஸமாதி என்ற வணிகணும், பிரம்மா முதலான தேவர்கள் உளத்தில் ஸ்புரித்த ஸூக்தங்களான தேவி ஸ்துதியைப் பல ஆவ்ருத்திகள் பாராயணம் செய்ததால், அவர்கள் விரும்பிய, பிறரால் அடைய முடியாத பலன்களைத் தேவி அவர்களுக்கு அளித்தாள். அந்த உலக நாயகியை, பரமசிவ பத்தினியை நமஸ்கரிக்கின்றேன். (தேவிமஹாத்ம்ய 13-வது அத்யாயம்)

மாஹிஷ்மதீ தநுபவம் ச ருரூம் ச ஹந்தும்
ஆவிக்ஷ்க்ருதை: நிஜரஸாத் அவதார பேதை:
அஷ்டாதசாஹத நவாஹத கோடி ஸங்க்யை:
அம்பா ஸதா ஸமபிரக்ஷது மாம் விபத்ப்ய:

மாஹிஷ்மதிக்குப் பிறந்த மஹிஷாஸுரனை ஸம்ஹரிக்கத் தன் சக்தியால் 18 கோடி கன்னிகைகள் கொண்ட சேனையுடனும் ருரு என்ற அசுரனை அழிக்க 9 கோடி கன்னிகைகள் கொண்ட சேனையுடனும் தோன்றிய அம்பிகை என்னை ஆபத்துகளிலிருந்து எப்போதும் காப்õற்றுவாளாக. (தேவிமஹாத்ம்ய 3 -ஆம் அத்யாயம்).

ஏதத் சரித்ரமகிலம் லலிகிதம் ஹி யஸ்யா:
ஸம்பூஜிதம் ஸதந ஏவ நிவேசிதம் வா
துர்கம் ச தாரயதி துஸ்தரமபி அசேஷம்
ச்ரேய: ப்ரயச்சதி ச ஸர்வம் உமாம் பஜே தாம்

எந்தப் பராசக்தியின் சரித்திரத்தை முழுவதும் எழுதிப் பூஜித்தாலும், அல்லது வீட்டில் வைத்திருந்தாலும் கடக்க முடியாத ஆபத்துக்களையும் ஒருவன் கடந்து மேன்மை அடைய முடியுமோ, அந்தப் பராசக்தியை உமா தேவியை நான் வணங்குகிறேன். (வேதம், ஸ்தோத்ரம் போன்ற சிறப்பான நூல்களை எழுதிப் பூஜித்தாலும், அல்லது வீட்டில் பூஜை அறையில், பூஜையில் வைத்திருந்தாலும் அங்கே ஸர்ப்பம் - திருட்டு முதலிய பயங்களுக்கு இடமே இல்லை என்ற வராஹபுராணக் கூற்று இங்கே வலியுறுத்தப்படுகிறது).

யத்பூஜந ஸ்துதி நமஸ்க்ருதிபி: பவந்தி
ப்ரீதா: பிதாமஹ ரமேச ஹராஸ்த்ரயோஸபி
தேஷாமபி ஸ்வககுணை: தததீ வபூம்ஷி
தாமீச்வரஸ்ய தருணீம் சரணம் ப்ரபத்யே

நான்முகன், மஹாவிஷ்ணு, மஹேச்வரன் போன்றோர் தேவி ஸ்துதி, பூஜை, நமஸ்காரம் ஆகியவை செய்து மனத்திருப்தி அடைகின்றனர். அந்த தேவர்களுக்கும் தனது ஸத்வம் முதலிய குணங்களால் உருவம் அருள்பவள் தேவி, அந்த தேவியை நான் சரணடைகிறேன். (வராஹ புராணம்)

காந்தார மத்ய த்ருடலக்நதயா வஸந்நா
மக்நாச்ச வாரிதிஜலே ரிபுபிச்ச ருத்தா:
யஸ்யா: ப்ரபத்ய சரணௌ விபத: தரந்தி
ஸா மே ஸதாஸஸ்து ஹ்ருதி ஸர்வஜகத் ஸவித்ரீ

கானகத்தில் அகப்பட்டு வழி தெரியாது அல்லல் உறுவோர், கடலில் மூழ்கித் தத்தளிப்போர், மாற்றார் ஆக்ரமிப்பனால் அவதிப்படுவோர் போன்றவர்கள் எந்த அன்னையின் சரணாரவிந்தங்களில் அடைக்கலம் புகுந்து ஆபத்துக்களிலிருந்து விடுபடுகின்றனரோ, உலகங்கள் யாவற்றையும் படைக்கும் அந்த தேவி எப்போதும் என்னுள் இருக்கட்டும். (ஹரிவம்சம்).

பந்தே வதே மஹதி ம்ருத்யுபயே ப்ரஸக்தே
வித்தக்ஷயே ச விவிதே ச மஹோபதாபே
யத்பாதபூஜநம் இஹ ப்ரதிகாரம் ஆஹு:
ஸா மே ஸமஸ்தஜநநீ சரணம் பவாநீ

சிறைவாசம், அழிவு, மரண பயம், சொத்துக்களை (உடைமைகளை, உரிமைகளை) இழத்தல், அரசுத் தொல்லைகள், திருட்டு பயம், விலங்குகளின் பயம் போன்றவை அகல எந்த தேவியைப் பூஜிக்க வேண்டும் என்று ஆன்றோர்கள் கூறுகின்றனரோ, அந்த லோகமாதாவாம் பார்வதியை அடைக்கலம் புகுகின்றேன். (வராஹபுராணம் - ஹரிவம்சம்)

பாணாஸுர ப்ரஹித பந்நக பந்தமோக்ஷ:
தத்பாஹுதர்ப தளநா - துஷயா ச யோக:
ப்ராத்பும்நிநா த்ருதம் அலப்யத யத்ப்ரஸாதாத்
ஸா மே சிவா ஸகலமபி அசுபம் க்ஷிணோது

பிரத்யும்னனின் குமாரனான அநிருத்தன் மீது பாணாஸுரன் நாகாஸ்த்ரத்தை ஏவினான்; அதனைத் தளர்த்தி விடுதலை அளித்தவள் தேவி (ஸ்ரீகிருஷ்ண பகவான் பின்னர் வந்து தேவியின் தூண்டுதலுக்கிணங்க, பாணாஸுரனை வென்றார்); அவளே அவனது வலிமையை அழித்து அநிருத்தன் - உஷா நல்வாழ்விற்கு வகை செய்தாள். அத்தகைய மங்களரூபியாம் பரதேவதை அனைத்து அமங்கலங்களையும் விலக்கி அருள்வாளாக. (ஹரிவம்சம்).

பாப: புலஸ்த்ய தனய: புனருத்திதோ மா
அத்யாபி ஹர்த்து மய மாகதஇத்யுதீதம்
யத்ஸேவநேந பயம் இந்திரயா - வதூதம்
தாமாதி தேவதருணீம் சரணம் கதோஸ்மி

லக்குமியின் அவதாரம்  ருக்மிணீ; தன் சுயம்வரத்திற்கு சிசுபாலன் வந்து கொண்டிருப்பதை அறிந்த அவள் (ராமாயண காலத்தில் தன்னை அபகரித்துச் சென்ற) புலஸ்த்ய புத்ரனான ராவணன்தான் மீண்டும் வந்துவிட்டானோ எனப் பயந்துவிடுகிறாள். அந்த பயத்தைத் தேவியைப் பூஜித்துப் போக்கிக் கொள்கிறாள். அப்படிப்பட்ட தேவியாம் பரமசிவ பத்தினியான பரதேவதையைச் சரணடைகிறேன். (ஸ்ரீமத் பாகவதம்).

யத் த்யாநஜம் ஸுகம் அவாப்யம் அநந்த - புண்யை:
ஸாக்ஷாத் தமச்யுத பரிக்ரஹம் ஆச்வவாபு:
கோபாங்கநா: கில யதர்சந புண்ய - மாத்ரா
ஸா மே ஸதா பகவதீ பவது ப்ரஸந்நா

பகவத் தியானம் பகவானின் தோற்றத்தை நெஞ்சில் நிலைநிறுத்தும்; அதனால் அளவற்ற மகிழ்ச்சி உண்டாகும். இந்த பாக்யம் பல ஜென்மாக்களில் செய்த புண்யங்களால்தான் ஸித்திக்கும். ஆனால் கோகுலத்தில் கோபிகளோ பகவானை நேரிலேயே கண்டு, விளையாடி, உறவாடி மகிழ்ந்தார்கள். இது எப்படி ஸாத்தியம்? இவர்கள் மார்கழி மாதத்தில் காத்யாயனியைப் பூஜித்ததுதான் இதற்குக் காரணம். அத்தகைய பரதேவதை எனக்கு அருள்புரிவாளாக. (ஸ்ரீமத் பாகவதம்).

ராத்ரிம் ப்ரபத்ய இதி மந்த்ரவித: ப்ரபந்நாந்
உத்போத்ய ம்ருத்யவதிம் அந்யபலை: ப்ரலோப்ய
புத்வா ச சத்விமுகதாம் ப்ரதநம் நயந்தீம்
ஆகாசமாதி-ஜநநீம் ஜகதாம் பஜே தாம்

ராத்ரிம் ப்ரபத்யே என்ற மந்திரத்தை அறிந்து தன்னிடம் சரணடைந்தவர்களை, உறக்கத்திலிருந்து எழுப்பி, மோக்ஷத்தைத் தவிர மற்ற வரங்களைத் தந்து ஏமாற்றும்போது, அவர்கள் அதற்கு மயங்காமல் மோக்ஷத்தையே வேண்டினால், அவர்களுக்குப் பிறவியில்லாப் பெருவாழ்வு அருளும் ஆதிமாதாவரம் பராசக்தியைப் பூஜிக்கிறேன். (ஸாமவேதம், ஸாமவிதானம் என்ற ப்ராம்மண பாகத்திலுள்ள ராத்ரி உபாஸனம்).

தேசகாலேஷு துஷ்டேஷு துர்காசந்த்ரகலா ஸ்துதி:
ஸந்த்யயோ: அநுஸந்த்யயோ: ஸர்வாபத் விநிவ்ருத்தியே

பலச்ருதி: தேச- கால -வர்த்தமானங்கள் துஷ்டர்களாகும்போது (கெடுதல் அளிக்கும் போது), ஆபத்துக்கள் அகல துர்க்கா சந்த்ர கலா ஸ்துதியை காலை - மாலை இருவேளைகளிலும் அவசியம் ஜபிக்க வேண்டும். (ஸ்ரீஅப்பய்ய தீக்ஷிதர் அருளியது)


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar